Monday, September 29, 2008

பறங்கிக்காய் (Pumpkin) பால் கூட்டு

தேவையானவை:

பறங்கிக்காய் 2 பத்தை
பால் 1 கப்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
வெல்லம் 1 கப் (பொடித்தது)
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1 சிட்டிகை
முந்திரிபருப்பு 10

தாளிக்க:
நெய் 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்வற்றல் 2
உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்

செய்முறை:

பறங்கிக்காயை ஒரு கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேகவைக்கவும்.நன்கு வெந்தபிறகு பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.
வெல்லம் நன்கு கரைந்தவுடன் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
பாலில் அரிசிமாவைக்கரைத்து கூட்டில் விட்டு கொதிக்கவிடவும்.
ஐந்து நிமிடங்கள் கழித்து கிள்ளிய வற்றல் மிளகாய்,உளுத்தம்பருப்பு இவற்றை நெய்யில் சிவப்பாக வறுத்து
தாளித்துக்கொட்டி இறக்கவும்.
கடைசியில் முந்திரிபருப்பையும் சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து கொட்டவும்

Sunday, September 21, 2008

அசோகா அல்வா (Thanjavur Halwa)

தேவையானவை:

பயத்தம்பருப்பு 1 கப்
கோதுமைமாவு 1 கப்
நெய் 1 1/2 கப்
சர்க்கரை 2 கப்
தண்ணீர் 2 1/2 கப்
கேசரிப்பவுடர் 1 டீஸ்பூன்
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
திராட்சை 10

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 2 1/2 கப் தண்ணீருடன் பயத்தம்பருப்பை போட்டு குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும்.
குக்கரில் வெந்த பருப்பை எடுத்து ஒரு வாணலியில் வைத்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து ..அது கரையும் வரை கிளறவேண்டும்.
இதை அப்படியே தனியாக எடுத்து வைக்கவேண்டும்.

வாணலியில் 1 1/2 கப் நெய் விட்டு,நெய் உருகியவுடன் கோதுமைமாவை தூவவேண்டும்.கூடவே முந்திரிபருப்பை போட்டு
நன்றாக கிளற வேண்டும்.முந்திரிகள் சிவப்பு நிறம் வரும்போது சிறிது தண்ணீர் தெளித்தால் "சொய் "என்று சத்தம் கேட்கும்.
இது தான் பதம்.இறக்கிவைக்கவேண்டும்.

இந்த கலவையோடு பயத்தம்பருப்பு,சர்க்கரை கலவையை சேர்த்து நன்றாக அல்வா பதம்வரை கிளற வேண்டும்.
கடைசியில் கேசரிப்பவுடர்,ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி,திராட்சை சேர்க்கவேண்டும்.
(கேசரிப்பவுடரை பாலில் கலந்து விடவும்)

Wednesday, September 17, 2008

வடைகறி

தேவையானவை:

கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன்
தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்
மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து மீண்டும் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.
இறக்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.

வடைகறியை இட்லி தோசைக்கு side dish ஆக உபயோகித்தால் மேலும் அதிகமாக இரண்டு உள்ளே இறங்கும்.

Sunday, September 14, 2008

பருப்புத் துவையல்

முதல் வகை:

தேவையானவை:

துவரம்பருப்பு 1 கப்
மிளகு 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணைய் 1 டீஸ்பூன்

செய்முறை:
துவரம்பருப்பையும் மிளகையும் வாசனை வரும்வரைஎண்ணையில் வறுத்து உப்பு வைத்து
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு அரைக்கவேண்டும்.
நன்றாக பருப்பு மசிந்து மையாக ஆகும்வரை அரைக்கவேண்டும்.

இரண்டாம் வகை:

தேவையானவை:

துவரம்பருப்பு கால் கப்
கடலைபருப்பு கால் கப்
தேங்காய்த்துருவல் 2 tblsp
வற்றல் மிளகாய் 6
உப்பு தேவையானது

செய்முறை:

துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய்வற்றல் மூன்றையும் கொஞ்சம் எண்ணையில்
வறுத்துக்கொண்டு உப்பு தேங்காய் துருவல் வைத்து
அரைக்கவேண்டும்.

சனிக்கிழமை..சீரகம்-மிளகு ரசமும்..பருப்புத்துவையலையும் சாப்பிட்டால்..ஞாயிறு அன்று ஸ்பெஷல் சாப்பாட்டிற்கு
வயிறு தயாராகிவிடும்.

Wednesday, September 10, 2008

கும்மாயம் (Chettinadu Special)

தேவையானவை:

பச்சரிசி 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/2 கப்
வெல்லம் 1கப்
நெய் 1/2 கப்

செய்முறை:

பச்சரிசி,உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வறுத்து
Mixyல் மூன்றையும் சேர்த்து மாவாக அரைக்கவேண்டும்.
அரை கப் தண்ணீரில் வெல்லத்தை கரையவிடவேண்டும்.அடுப்பில் வைத்து வெல்லம் கம்பிப்பாகு பதம் வரும் வரை கிளறவும்.
அரைத்த மாவை தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவேண்டும்.(இட்லி மாவு பதம்).
வெல்லப்பாகு,கரைத்த மாவு,நெய் சேர்த்து கிளற வேண்டும்.
வாணலியில் ஒட்டாமல் அல்வா மாதிரி வரும்போது இறக்கவேண்டும்

Thursday, September 4, 2008

Herbal Soup

தேவையானவை:

துளசி,புதினா,கொத்தமல்லித்தழை,வெற்றிலை,கறிவேப்பிலை,கற்பூரவல்லி எல்லாம் கொஞ்சம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம் 1
பூண்டு 2 பல்
மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
நெய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
நெய்யை வாணலியில் காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு இரண்டையும் வதக்கவும்.
பிறகு எல்லா இலைகளையும் அப்படியே போட்டு வதக்கவேண்டும்(அல்லது மையாக அரைத்தும் போட்டும் வதக்கலாம்).
மூன்று கப் தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள்,உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் எலுமிச்சம்பழ சாறு விடவேண்டும்.

Monday, September 1, 2008

மசாலா தட்டை

தேவையானவை:

மைதாமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:

பூண்டு 6 பல்
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு

செய்முறை:

மைதாமாவை சலித்து ஒரு துணியில் மூட்டை போல கட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து எடுக்கவும்.
பின்னர் நன்றாக உதிர்க்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதுபோல அரைத்து வைக்கவும்.

உதிர்த்த மைதாமாவுடன் அரிசிமாவு,அரைத்த விழுது,வெண்ணய்,உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து
நன்றாக பிசையவும்.ஒரு plastic paper ல் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஒவ்வொரு உருண்டையையும்
தட்டைகளாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...