Tuesday, October 28, 2008

சுகியன்

தேவையானவை:

பூரணம் தயாரிக்க:

கடலைபருப்பு 1 கப்
வெல்லம் 1 கப் (பொடி செய்தது)
முந்திரிபருப்பு 10
தேங்காய் துருவல் 3/4 கப்
ஏலப்பொடி 2 டீஸ்பூன்
நெய் தேவையானது

மேல்மாவு தயாரிக்க:

உளுத்தம்பருப்பு 1 1/2 கப்
பச்சரிசி 1 கப்
உப்பு அரை டீஸ்பூன்

செய்முறை:


கடலைபருப்பை குக்கரில் வேகவைக்கவும்.அதனுடன் தேங்காய்துருவல்,பொடிசெய்த வெல்லம்

ஏலப்பொடி சேர்த்து பிசையவும்.வாணலியில் சிறிது நெய் விட்டு பிசைந்த கலவையை போட்டு ஐந்து நிமிடம்
கிளறவும்.ஆறின பின் mixy ல் விழுது போல அரைத்து எடுக்கவும். இதில் உடைத்த முந்திரிபருப்புகளை கலக்கவும்.நன்றாகக் கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.

அரிசியையும் உளுத்தம்பருப்பையும் அரை மணி நேரம் ஊறவைத்து தனித்தனியே நைசாக அரைத்துஅரை டீஸ்பூன் உப்பு போட்டு கலக்கவும்.
செய்துவைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கிஎடுத்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

Wednesday, October 22, 2008

காலிஃப்ளவர் கறி

தேவையானவை:

காலிஃப்ளவர் 1
வெங்காயம் 2
உருளைக்கிழங்கு 2
தக்காளி 1
மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள்
ஒவ்வொன்றும் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)

garam masala 1 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது 2 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:

காலிஃப்ளவரை சின்ன சின்ன பூவாக கிள்ளி எடுத்துக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கு,வெங்காயம்,தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து காலிஃப்ளவர்,மஞ்சள்தூள்,உப்பு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் விடவேண்டாம்.சிறிது வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.உருளைக்கிழங்கை தனியே வதக்கி எடுத்து வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணைய் வைத்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து இரண்டு கப் தண்ணீர் விடவும்.
தனியே எடுத்துவைத்துள்ள காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கை சேர்த்து கொதிக்கவிடவும்.நன்றாக கொதித்தவுடன் garam masala பொடியை தூவி இறக்கவும்.
கடைசியில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையை தூவவும்.

Thursday, October 16, 2008

நவரத்ன குருமா.

தேவையானவை:

காரட் 1/4 கப்
பீன்ஸ் 1/4 கப்
உருளைக்கிழங்கு 1/4 கப்
பச்சைப் பட்டாணி 1/4கப் பனீர் துண்டுகள் 10
முந்திரி 5
வெங்காயம் 2
தக்காளி 2
மஞ்சள் தூள்,மிளகாய் பொடி,தனியா பொடி,garam masala
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.
தேங்காய் பால் 1 கப்
தயிர் or cream 1/2 கப்
எண்ணைய்,உப்பு தேவையானது.

பொடி செய்ய:

சோம்பு 1 டீஸ்பூன்
தனியா 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
ஏலக்காய் 2

Paste பண்ண:
பச்சை மிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4

செய்முறை:

முதலில் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் பொடியாக நறுக்கி பச்சை பட்டாணியுடன் சேர்த்து வதக்கி நன்றாக வெந்தவுடன் தனியே எடுத்துவைக்கவும்.
பனீர் துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
பொடி செய்ய கொடுத்துள்ளவைகளை நன்றாக எண்ணையில் வறுத்து பொடி பண்ணவும்.
பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வெந்ததும் நறுக்கிய தக்காளியைப்போட்டு
வதக்கவும்.பொடிபண்ணிய பவுடரையும்,paste யும் போட்டு சிறிது வதங்கிய வுடன் மஞ்சள்தூள்,மிளகாய் தூள்,தன்யா பொடி மூன்றையும் சேர்க்கவும்.இந்த கலவையில்
வெந்த காய்கறிகளையும் சிறிது தண்ணீரும்,உப்பும் சேர்த்து நன்றாகக்கலந்து கொதிக்கவக்கவும்.
தேங்காய்பால்,தயிர் இரண்டையும் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்.அடுப்பை அணைக்கும் முன் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில் கறிவேப்பிலை தாளித்து வறுத்த முந்திரியை சேர்க்கவும்.

Thursday, October 9, 2008

மலாய் பனீர் கோப்தா

தேவையானவை:

பனீர் துருவல் 1 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சைமிளகாய் 3
மைதாமாவு 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
பால் மலாய் (cream) - 1 கப்


செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து பனீர் துருவலுடன் கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொன்டு அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,மைதாமாவு,கொத்தமல்லித்தழை,முந்திரிபருப்பு,உப்பு
ஆகியவற்றுடன் உருளைக்கிழங்கு பனீர் கலவையை கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்யவும்.
அந்த உருண்டைகளை எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

Gravy செய்யும் முறை:

தேவையானவை:
தக்காளி 4
வெங்காயம் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள்,மஞ்சள் பொடி,தனியா பொடி ஒவ்வொன்றும் அரை டீஸ்பூன்
உப்பு தேவையானது

செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவேண்டும்.
தக்காளியை வென்னீரில் போட்டு எடுத்து தோலை எடுத்துவிட்டு வாணலியில் எண்ணைய் வைத்து வதக்கிகொள்ளவேண்டும்.
அதில் பொன்னிறமாக வதக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியாபொடி,உப்பு
ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.நன்றாக கொதித்தவுடன் செய்துவைத்த பனீர் உருண்டைகளை
போட்டு இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து ,
கிரீம் 1 கப் இறக்கும் முன் போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்.

Wednesday, October 1, 2008

புட்டு

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 1/2 கப்
நெய் 1/4கப்
துவரம்பருப்பு 2 டீஸ்பூன்
தண்ணீர் 3/4 கப்
தேங்காய் துறுவல் 2 டீஸ்பூன்
ஏலக்காய் 2
முந்திரிபருப்பு 5
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை:

புழுங்கலரிசியை mixyல் ரவையாக உடைத்துக்கொண்டு மாவில்லாமல் சலித்துக்கொள்ளவும்.
ஒருவாணலியை எடுத்துக்கொண்டு ரவையை எண்ணைய் விடாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்
துவரம்பருப்பை சிறிது நீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

முக்கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை கரைத்து அந்த தண்ணீரை ரவையில் விட்டு பிசிறிக்கொள்ளவும்.அதன் மீது ஊறவைத்த
துவரம்பருப்பையும் போட்டு குக்கரில் இட்லி தட்டில் பரப்பி 15 நிமிடம் வேகவைக்கவும்.(நடுவில் திறந்து பார்த்து வேகவில்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்)
நன்கு வெந்தவுடன் ஒரு பெரிய தட்டில் கொட்டி உதிர்த்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணரில் கரைய விட்டு மண்ணில்லாமல் வடிகட்டவேண்டும்.
பிறகு வெல்லத்துடன் ஏலக்காய்,தேங்காய் துறுவல் சேர்த்து நல்லகெட்டி பாகாய் (ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டால் முத்தாக வரும்)வந்தவுடன் வெந்த ரவையைக்கொட்டி
நன்றாக கிளறி வறுத்த முந்திரி,நெய் இவற்றை விட்டு இறக்கவும்.அடுப்பிலிருந்து இறக்கினவுடன் சற்று இளகினாற்போலத்தான் இருக்கும்.அரைமணி கழித்து பாகு உள்ளே
இழுத்துக்கொண்டு நன்றாக உதிரியாக வந்துவிடும்.
பச்சரிசி ரவையில் கூட புட்டு செய்யலாம்.
நவராத்திரிக்கு சுண்டலுக்கு பதில் புட்டு ஒருநாள் செய்யும் வழக்கம் உண்டு

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...