Wednesday, July 28, 2010

தூதுவளைக் கீரை துவையல்


தூதுவளைக் கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி 1 துண்டு
மிளகாய் வற்றல் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
புளி சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

தூதுவளைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கீரையை நன்கு வதக்கவேண்டும்.

இஞ்சி,மிளகாய் வற்றல்,புளி,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் எல்லாவற்றையும் சிறிது எண்ணையில்
வதக்கவும்.இதனுடன் வதக்கிய கீரை,தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.

Monday, July 26, 2010

தால் டோக்ளி

டோக்ளி செய்வதற்கு தேவையானவை:

கோதுமை மாவு 1/2 கப்
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது

டோக்ளி செய்யும் முறை:
பசலைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொண்டு இட்லி தட்டில் 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.பின்னர் மற்றப் பொருட்களுடன் சேர்த்து நன்கு பிசைந்து நமக்கு வேண்டிய வடிவத்தில் மெல்லியதாக தட்டிக்கொள்ளவும். (பிசையும் போது தண்ணீர் தெளித்தால் போதும்).தட்டிய துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.பொரித்த டோக்ளித் துண்டுகளை தனியே எடுத்து வைக்கவும்.

பொரித்த டோக்ளித் துண்டுகள்




--------
தால் (பருப்பு) க்கு தேவையானவை:

துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
வறுத்த வேர்கடலை 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகப் பவுடர் 1/2 டீஸ்பூன்
தனியா பவுடர் 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 5
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது.

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை 1 கொத்து
பெருங்காயதூள் 1 டீஸ்பூன்

செய்முறை:




துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.பேஸ்டு மாதிரி வந்ததும் தனியே எடுத்து வைக்கவும். 
----
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளித்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன்
வேகவைத்த துவரம்பருப்பு
புளி தக்காளி பேஸ்டு
வறுத்த வேர்க்கடலை,முந்திரிபருப்பு ,
சீரகப் பவுடர்,தனியாத் தூள்,கரம் மசாலா ஆகியவற்றை தேவையான உப்பு தண்ணீருடனும் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
ரெடியாக உள்ள டோக்ளி துண்டுகளை ஒவ்வொன்றாக மெதுவாக சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவைக்கவும்.அதிகமாக கிளறவேண்டாம்.
விருப்பபட்டவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.
தால் டோக்ளி இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற side dish.

Thursday, July 22, 2010

சேமியா பாயசம்


தேவையானவை:

சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்

செய்முறை:

சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பையும்,திராட்சையையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்ததும் பாலை ஊற்றி சிறிது கொதிக்கவிடவும்.
அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பால்,சர்க்கரை,சேமியா மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து
அடுப்பை அணைக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவும்.
------
இப்பொழுது கடைகளில் roasted சேமியா கிடைக்கிறது.அதை வறுக்கவேண்டாம்.

Monday, July 19, 2010

காராச்சேவ் குருமா


தேவையானவை:

காராச்சேவ் 1 கப் (கடையில் வாங்கியது)
கொண்டக்கடலை 1/2 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்
கசகசா 1/2 டீஸ்பூன்
-------
தாளிக்க:

பட்டை 1 துண்டு
லவங்கம் 2
---
செய்முறை:

கொண்டக்கடலையை 4 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கவேண்டும். இதனுடன் வேகவைத்த கொண்டக்கடலை பாதியை (1/4 கப்) யும்,இஞ்சிபூண்டு விழுது,சோம்பு,தேங்காய் துருவல்,கசகசா சேர்த்து விழுது போல் அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து மீதமுள்ள கொண்டக்கடலை கால் கப் சேர்த்து வதக்கவும்.அரைத்த விழுதை உப்புடனும்,சிறிது தண்ணீருடனும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன் காராசேவ் ஒரு கப் சேர்த்து அடுப்பில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்.

காராச்சேவ் குருமா இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி எல்லாவற்றுக்கும் ஏற்ற side dish.

Tuesday, July 13, 2010

பீட்ரூட் அதிரசம்


தேவையானவை:

பீட் ரூட் 1
ஜவ்வரிசி 1/2 கப்
பால் 1/2 கப்
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
ஆப்பசோடா 1/4 டீஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
எண்ணைய் தேவையானது
------
அரைக்க:
மைதா 1/4 கப்
ரவை 1/4 கப்
முந்திரிபருப்பு 5
பால் 1/2 கப்
------
செய்முறை:

பீட் ரூட்டை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஜவ்வரிசியை 1/2 கப் பாலில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ள மைதா,ரவை,முந்திரிபருப்பு மூன்றையும் 1/2 கப் பாலில் அரை மணிநேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
-------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
பீட் ரூட் விழுது,ஜவ்வரிசி விழுது,மைதா ,ரவை விழுதுமூன்றையும் கலந்து அதனுடன் வெல்லம்,சர்க்கரை,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து
மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.(தண்ணீர் விட வேண்டாம்.) இட்லி மாவு பதத்திற்கு வரும்.
------
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் தேவையான எண்ணைய் சேர்த்து காய்ந்ததும் பீட் ரூட் கலவையை
ஒரு கரண்டியால் ஊற்றி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவேண்டும்.
பீட் ரூட் அதிரசம் மிகவும் சுவையாக இருக்கும்.

Friday, July 9, 2010

பூண்டு குழம்பு


தேவையானவை:
பூண்டு 20 பல்
சின்ன வெங்காயம் 10

புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 க
வெல்லம் (பொடித்தது)1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
-------
அரைக்க:
தனியா 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
வெந்தய ம்1 டீஸ்பூன்
கடலை- பருப்பு  1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
வெந்தய ம்1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் நல்லெண்ணைய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து பின்னர் பூண்டு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,
பெருங்காயத்தூள்,தனியாதூள்.சாம்பார் பொடி மூன்றையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
ஒரு கொதிவந்ததும் அரைத்த விழுதையும்  சேர்த்து சிறிது தண்ணீருடன் கொதிக்கவிடவும்..
இறக்குவதற்கு முன்பு காரம் அதிகம் என்று நினைப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.

பூண்டு குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கு சிறந்த side dish.

Monday, July 5, 2010

கொத்தவரங்காய் இனிப்பு கூட்டு


தேவையானவை
கொத்தவரங்காய் 1/4 கிலோ

துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 10
------

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:





கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
---
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு வேகவைக்கவும்.
காய் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியாக வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...