Tuesday, January 3, 2012

தூள் முறுக்கு....




தேவையானவை:

அரிசி மாவு 1 கப்
பொட்டுக்கடலை மாவு  1 கப்
கடலை மாவு 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணய் தேவையானது
-----------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலை மாவு மூன்றையும் சேர்த்து அதனுடன் சீரகத்தை உள்ளங்கையால் தேய்த்து தேவையான  உப்பு,பெருங்காயத்தூளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவேண்டும பிசைந்த மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் தேங்குழல் படியில் முறுக்கு அச்சில் பிசைந்த மாவை சிறிதளவு சேர்த்து எண்ணெயில் பிழியவேண்டும்.இருபுறமும் சிவந்ததும் எடுக்கவேண்டும்.

இந்த முறுக்கு செய்வதற்கும் எளிது ருசியாகவும் இருக்கும்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

எளிய குறிப்பு தூள்:)!

நன்றி மேடம். செய்து பார்க்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சுவையான பதிவு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று

சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது

ஹேமா said...

திடீர் முறுக்கா.முறுக்குப் பிடிக்கும்.இங்கே பக்கெட்டுக்களில் வாங்கிக்கொள்ளலாம் !

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி "என் ராஜபாட்டை"- ராஜா..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Hema.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.

அமைதிச்சாரல் said...

ஆஹா.. ஈஸியாயிருக்கே.