Monday, April 29, 2013

எலுமிச்சை இளநீர்




தேவையானது:

இளநீர் 2 கப்


எலுமிச்சம்பழம் 1
துளசி இலை 1/4 கப்
தேன் 2 தேக்கரண்டி
இளநீர் வழுக்கை 1/2 கப்
-------

செய்முறை:



இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சம்பழத்தை அதில் பிழியவேண்டும்.
துளசி இலையை இடித்து போட்டு அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்..
இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
துளசி இலைக்கு பதில் புதினா இலையையும் சேர்க்கலாம்.

எலுமிச்சை இளநீர் வெயிலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.

Monday, April 22, 2013

இஞ்சி மோர்




தேவையானவை:
மோர் 2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/2 கப்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:

பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லித்தழை மூன்றையும் சிறிது தண்ணீர் தெளித்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டு கப் மோரை மிக்சியில் போட்டு நன்றாக விப்பரில் அடித்துக்கொள்ளவேண்டும்.

கடைந்த மோரில் அரைத்த விழுது தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
பெருங்காய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடித்தால் தாகம் அடங்கும்.

Monday, April 15, 2013

குதிரைவாலி (Banyard Millet) பொங்கல்



:பாரம்பரிய சிறுதானிய வகைகளில் ' குதிரைவாலி" யும் ஒன்று.இதில் புரதம்,இரும்புச்சத்து,உயிர்ச் சத்துக்கள் அதிகம்.
அளவில்லாத நார்சத்தை சுமந்து இருக்கும் " குதிரைவாலி " ஒரு அற்புதமான தானியம்.

தேவையானவை                                                                                      
                                                 குதிரைவாலி

                                                     
குதிரைவாலி 1 கப்
பயத்தம் பருப்பு 1/4 கப்
மிளகு 15
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
தண்ணீர் 3 கப்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானது
-------
செய்முறை:

பயத்தம்பருப்பை தனியே குக்கரில் வேகவைத்து எடுத்துவைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் ஒரு கப் குதிரைவாலியை
சேர்த்து அடுப்பை ஸ்ம்மில் வைத்து வேகவைக்கவேண்டும்.பத்து நிமிடத்தில் வெந்துவிடும்.(குக்கரிலும் வைக்கலாம்.ஒரு கப்                                                    
குதிரைவாலி மூன்று கப் தண்ணீர் வீதம் 3 விசில்)
தனியே வேகவைத்து எடுத்து வைத்த பயத்தம்பருப்பை தேவையான உப்புடன்  இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும். அல்லது மிளகை அப்படியே பொரித்துப் போடலாம்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.
தக்காளி சட்னி,தேங்காய் சட்னி இரண்டும் இதற்கு ஏற்ற side dish.
-------------
' குதிரைவாலியில்' இட்லி தோசை செய்யலாம். குதிரைவாலி 3 கப்., உளுந்து 1 கப், வெந்தயம் 1 தேக்கரண்டி.

Friday, April 12, 2013

மாங்காய்-வேப்பம் பூ பச்சடி




வாழ்க்கை என்பது..இன்பமும்..துன்பமும் கலந்தது என்பதை உணர்த்தவே..சித்திரை மாத பிறப்புக்கு இனிப்பும்..சற்றுக் கசப்பும் உள்ள இந்த பச்சடிகள் செய்வது வழக்கம்

மாங்காய் இனிப்பு பச்சடி:

தேவையானவை:
மாங்காய் 1
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
அரிசிமாவு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
உப்பு தேவையானது

செய்முறை:




மாங்காயை தோலைச் சீவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்சிறிது தண்ணீர் விட்டு மாங்காய் துண்டுகள்,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டு வெல்லம் கரைந்து சேர்ந்த பின் அரிசிமாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும் .அடுப்பை அணைத்து கடுகு பச்சைமிளகாய் தாளித்து கொட்டவும்.

வேப்பம் பூ பச்சடி

தேவையானவை:
வேப்பம் பூ 2 டேபிள்ஸ்பூன்
புளி எலுமிச்சைஅளவு
வெல்லம் 1 டேபிள்ஸ்பூன் (பொடித்தது)
அரிசி மாவு 1 டீஸ்பூன்
--
கடுகு 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 3
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:




வேப்பம் பூ சிறிது எண்ணைய் விட்டு நல்ல கறும் சிவப்பாக வறுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,கிள்ளிய மிளகாய்வற்றல்.பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளிக்கவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்துவிடவும்.உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.பொடித்த வெல்லத்தைப் போட்டு நன்றாக கொதித்தபின் அரிசிமாவை கரைத்துவிடவும்.
 அடுப்பிலிருந்து இறக்கும் பொழுது வறுத்த வேப்பம் பூவை போடவேண்டும்.
(இரண்டும் சேர்த்து ஒரே பச்சடியாக செய்வோரும் உண்டு)

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

Thursday, April 11, 2013

வெள்ளரிப் பச்சடி



தேவையானவை:
வெள்ளரிக்காய் 2
தயிர் 1 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
------
செய்முறை:


வெள்ளரிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை சிறிது தயிர் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்,அரைத்த விழுது,தயிர் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
கடாயில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்மிளகாய் வற்றல் ,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
வெள்ளரிப் பச்சடி வெயிலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

Thursday, April 4, 2013

சுண்டைக்காய் வத்தக்குழம்பு




தேவையானவை:

காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
மிள்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:


சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...