Sunday, June 30, 2013

முள்ளங்கி...காரட் பொரியல்



தேவையானவை:
முள்ளங்கி 2
காரட் 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
நிலக்கடலை 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு சிறிய துண்டு
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


முள்ளங்கி,காரட் இரண்டையும் நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
------
முள்ளங்கி.காரட் இரண்டையும் சிறிது மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
microwave லும் வைத்து வேகவைக்கலாம்.microwave oven ல் இரண்டையும் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து ' H 'ல் ஐந்து நிமிடம் வைத்தால் போதும்.வெந்துவிடும்.

வாணலியில் சிறிது  எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வேகவைத்த முள்ளங்கி,காரட் இரண்டையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.அரைத்து வைத்துள்ள பொடியை தேவையான அளவு தூவி நன்கு கிளறி இறக்கவும்.

(இந்த பொடியை தண்ணீர் விடாமல் அரைப்பதால் இரண்டு,மூன்று நாள் வைத்துக்கொள்ளலாம்,எல்லாப் பொரியலுக்கும் உபயோகப்படுத்தலாம்.)

முள்ளங்கி,காரட் பொரியல் சற்றே மாறுபட்ட வித்தியாசமான ருசியுடன் இருக்கும்.

Thursday, June 20, 2013

கார்ன் ரவை கிச்சடி


தேவையானவை:
                                                           சோள ரவை

சோள ரவை 1 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி சிறிதளவு
நெய் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
--------
செய்முறை:

சோள ரவையை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
------
வாணலியில் தேவையான எண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து  நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் அதனுடன் தக்காளி,பட்டாணி,இஞ்சி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும் தேவையான உப்பு சேர்த்து .வறுத்து வைத்துள்ள சோள ரவையை பரவலாக தூவி நன்கு கிளறவும்.கடைசியில் நெய் ஊற்றி இறக்கவும்.(நெய் அவசியமில்லை)
கொஞ்சம் ஆறின பிறகு எலுமிச்சம்பழத்தை பிழிந்து கொத்தமல்லித்தழையை தூவவும்.

Monday, June 17, 2013

சாமை (little millet) கஞ்சி



புன்சை சிறுதானியங்களில் சிறந்த தானியமாகக் கருதப்படுவது சாமை.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது சாமை.
அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.
இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
-------
சாமை கஞ்சிக்கு தேவையானது:
                                                                         சாமை

சாமை 1 கப்
சின்ன வெங்காயம் 10
மோர் 1 கப்
உப்பு தேவையானது
------
செய்முறை:

ஒரு கப் சாமையை மூன்று கப் தண்ணீருடன் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைத்து எடுக்கவேண்டும்.
ஆறின பிறகு குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் வைத்து மோரைக்கடைந்து தேவையான உப்புடன் சேர்க்கவேண்டும்.சாமையும் மோரும் சேர்ந்து கட்டியில்லாமல் கலக்கவேண்டும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சாமை கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

Thursday, June 13, 2013

தினை தோசை

தேவையானவை:              தினை
                          

தினை 1 கப்
Brown rice 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு/' 1/2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
=======
செய்முறை:

                                     
தினையை தனியாக இரண்டு மணிநேரம்  ஊறவைக்கவும்.
 Brown rice,உளுத்தம்பருப்பு,வெந்தயம் மூன்றையும் தனித்தனியே மூன்று மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த தினை Brown rice ,உளுத்தம்பருப்பு,வெந்தயம் (தண்ணீருடன் சேர்த்து) எல்லாவற்றையும் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த மாவு நான்கு மணிநேரத்தில் புளித்துவிடும்.பின்னர் தோசையாக வார்க்கலாம்.
இதற்கு இஞ்சி,பச்சைமிளகாய்,தேங்காய் சேர்த்து அரைத்த சட்னி பொருத்தமாக இருக்கும்.

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

Sunday, June 9, 2013

சப்போட்டா..ஆப்பிள்... ஸ்மூதி



தேவையானவை:
சப்போட்டா 2
ஆப்பிள் 1
பப்பாளி 1 துண்டு
பால் 1/2 கப்
---------
செய்முறை:


சப்போட்டாவின்  தோலையும் உள்ளே இருக்கும் விதையையும் எடுத்துவிடவும்.
ஆப்பிள் தோலை எடுக்காமல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பப்பாளியின் தோலை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
மிக்சியில் சப்போட்டா,ஆப்பிள்,பப்பாளி மூன்றையும் பாலுடன் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
இதற்கு சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சுவையான சப்போட்டா..ஆப்பிள்..ஸ்மூதி ரெடி.

Tuesday, June 4, 2013

வாழைத்தண்டு..மாதுளை...சாலட்



தேவையானவை:
வாழைத்தண்டு 1 கப் (பொடியாக நறுக்கியது)
மாதுளம் முத்துகள் 1 கப்
 சிவப்பு திராட்சை 5
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு சிறிதளவு
-----
செய்முறை:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த வாழைத்தண்டு துண்டுகள்,மாதுளம் முத்துகள், சிவப்பு திராட்சை,மிளகு தூள்,சிறிதளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு  கலக்க வேண்டும். கடைசியில் எலுமிச்சை சாற்றினை பிழியவேண்டும்.
காலை உணவாக இதை சாப்பிடலாம்.உடலில் சர்க்கரையின் அளவையும் சீராக்கும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...