Saturday, February 22, 2014

பாதாம், பொட்டுக்கடலை லட்டு



தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்  1/2 கப்
பொட்டுக்கடலை 1 கப்
பொடித்தவெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
நெய் 1/4 கப்
-------

செய்முறை:


பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி Microwave "H'  ல் ஒரு நிமிடம் வைத்து எடுக்க தோலை எளிதில் எடுத்து விடலாம்.
பின் உரித்த பாதாம் பருப்பை மீண்டும் Microwave "H' ல் 5 நிமிடம் வைக்கவேண்டும். (இரண்டு நிமிடம் வைத்து எடுத்து ஒரு கிளறு கிளறி மீண்டும் 2 நிமிடம் பின்னர் கடைசியில் ஒர் நிமிடம் வைத்து
எடுக்க வேண்டும்.)வறுத்தது போல் ஆகிவிடும். வறுத்த பாதாம் பருப்பை மிக்சியில் பொடித்துக் கொள்ளவேண்டும்.
வால்நட்,பொட்டுக்கடலை இரண்டையும் தனித்தனியே வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய பாதம்,வால்நட்,பொட்டுக்கடலை,பொடித்த வெல்லம் ஏலத்தூள், சேர்த்து நன்றாக கிளறி நெய்யை உருக்கி ஊற்றி லட்டுகளாக பிடிக்கவேண்டும்.

Sunday, February 16, 2014

வரகு ( Kodo Millet) எலுமிச்சை சாதம்



தேவையானவை
 வரகு அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
நிலக்கடலை 10
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'

செய்முறை:

ஒரு கப் வரகு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.


 குக்கரில் இருந்து எடுத்த வரகு .சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.
வரகு அரிசி எலுமிச்சை சாதம் மிகவும் சுவையுடன் இருக்கும்.

Sunday, February 9, 2014

உருளைக்கிழங்கு ..பாதாம் ரோஸ்ட்



தேவையானவை:

சின்ன உருளைக்கிழங்கு 20
பாதாம்பருப்பு 20
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
கரம் மசாலா 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
----------------
செய்முறை:


பாதாம் பருப்பை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஊறவைத்த பாதாம் பருப்பு,உருளைக்கிழங்கு,சிறிது உப்பு, தண்ணீர், சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.
வெங்காயம்,தக்காளி,பூண்டு,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,பூண்டு சேர்த்து வதக்கவண்டும்.
மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள்,இஞ்சிபூண்டு விழுது,கரம் மசாலா,தேவையான உப்பு சேர்த்து கிளறவேண்டும்.
குக்கரிலிருந்து எடுத்த உருளைக்கிழங்கை தோலுரித்து இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
பாதாம்பருப்பையும் கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழையை தூவி இறக்கவேண்டும்.

இது குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் ருசியுடன் இருக்கும்.

Tuesday, February 4, 2014

கொள்ளு குருமா



தேவையானவை:
கொள்ளு 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
அரைக்க:
மிளகாய் வற்றல் 2
தனியா 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கசகசா 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
---------------
செய்முறை:

கொள்ளை முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.
கொள்ளை குக்கரில் வைத்து (3 விசில்) எடுக்கவும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
------
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து இஞ்சி பூண்டு விழுதை வதக்கவேண்டும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,குறுக்கே வெட்டிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காய்ம் நன்றாக வெந்ததும் வேகவைத்த கொள்ளு,அரைத்த விழுது,தேவையான உப்பு,சிறிது தண்ணீர் எல்லாம் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கவேண்டும்.

கொள்ளு, புரதம்,இரும்பு சத்து நிறைந்த ஒரு முழு உணவு.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...