Saturday, November 7, 2015

முந்திரி கேக்





தேவையானவை:

முந்திரிப் பருப்பு -  2 கப்
சர்க்கரை -  2 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

நெய் - 50 கிராம்

செய்முறை:


முந்திரிப் பருப்பை வாணலியில் நெய் விட்டு, நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும்
 அடுப்பில் வாணலியை வைத்து சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
பதம் சரியாக வந்தவுடன் அரைத்த முந்திரியை சிறிது சிறிதாக கொட்டி கிளற வேண்டும்.  சிறிது  நெய் சேர்த்து கை விடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.·   கெட்டியாக இருக்கும் பொழுது எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி  ஆறியதும் வில்லைகளாக  போடவும்.

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

Kanchana Radhakrishnan said...

கல்கி தீபாவளி மலரில் வெளியாகியுள்ள தாங்கள் எடுத்த புகைப்படம் அருமை.
தங்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது தீபாவளி வாழ்த்துகள்

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான செய்முறை விளக்கம்! என் மகளுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்!

Kanchana Radhakrishnan said...

Thanks ‘தளிர்’ சுரேஷ்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...