Monday, February 15, 2016

தக்காளி புலாவ்



தேவையானவை:

பாசுமதி அரிசி 2கப்
வெங்காயம் 3
தக்காளி 6
கொத்தமல்லித் தழை 1 கட்டு
பச்சைமிளகாய் 3
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள்  1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 3
நெய் 1 தேக்கரண்டி
------
செய்முறை:
பாசுமதி அரிசியை நன்றாகக் களைந்து 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
தக்காளி,கொத்தமல்லித்தழை பச்சைமிளகாய்,,இஞ்சி பூண்டு விழுது நான்கையும் நன்றாக விழுது போல அரைக்கவேண்டும்.
ஊறவைத்த அரிசியை வடிகட்டி அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து வைக்கவேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய்யில் பட்டை லவங்கம் இரண்டையும் தாளிக்கவேண்டும்.
அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மிளகாய் தூள்,தனியாத்தூள் சேர்த்து வதக்கி அரிசி,தக்காளிக் கலவையை தேவையான உப்புடன் சேர்த்து பிரட்டவேண்டும்.
நான்கு கப் தண்ணீர் விட்டு அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும். அல்லது ele.cooker ல் வைக்கலாம்.

சுவையான தக்காளி புலவ் ரெடி.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...