Monday, February 29, 2016

முருங்கை..முந்திரி..குருமா



தேவையானவை:

முருங்கைக்காய் 5
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
முந்திரிப் பருப்பு 10
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
---
தாளிக்க:

தேங்காயெண்ணய் 1 மேசைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
கறிவேப்பிலை ஒருகொத்து
------

செய்முறை:


முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளேயிருக்கும் கதுப்பை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம்,பூண்டு,பச்சைமிளககாய்,இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் முந்திரிபருப்பு,கசகசா இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய்.பச்சைமிளகாயுடன் விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து பொடியாக நறுக்கியுள்ள வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் முருங்கைக்காய்   கதுப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது வதக்கி தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து தேங்காயெண்ணையில் கடுகு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து குருமாவுடன் சேர்க்கவேண்டும்.

முருங்கை..முந்திரி..குருமா பூரி,சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Monday, February 22, 2016

தினை இட்லி


தேவையானவை:

தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----
செய்முறை:



தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம்

தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.

Monday, February 15, 2016

தக்காளி புலாவ்



தேவையானவை:

பாசுமதி அரிசி 2கப்
வெங்காயம் 3
தக்காளி 6
கொத்தமல்லித் தழை 1 கட்டு
பச்சைமிளகாய் 3
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள்  1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 3
நெய் 1 தேக்கரண்டி
------
செய்முறை:
பாசுமதி அரிசியை நன்றாகக் களைந்து 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
தக்காளி,கொத்தமல்லித்தழை பச்சைமிளகாய்,,இஞ்சி பூண்டு விழுது நான்கையும் நன்றாக விழுது போல அரைக்கவேண்டும்.
ஊறவைத்த அரிசியை வடிகட்டி அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து கலந்து வைக்கவேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய்யில் பட்டை லவங்கம் இரண்டையும் தாளிக்கவேண்டும்.
அதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் மிளகாய் தூள்,தனியாத்தூள் சேர்த்து வதக்கி அரிசி,தக்காளிக் கலவையை தேவையான உப்புடன் சேர்த்து பிரட்டவேண்டும்.
நான்கு கப் தண்ணீர் விட்டு அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும். அல்லது ele.cooker ல் வைக்கலாம்.

சுவையான தக்காளி புலவ் ரெடி.

Monday, February 8, 2016

உசிலி உப்புமா.





அரிசி : 1 கப்

பயற்றம் பருப்பு : 1/2 கப்

மிளகு 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் : 1/2 கப்

கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு : 1/2 தேக்கரண்டி:

வற்றல் மிளகாய் : 3
பெருங்காயம் : சிறிதளவு
கடுகு :1/4 தேக்கரண்டி
பெருங்காய்த்தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் : தேவையானது
---------
செய்முறை



முதலில் அரிசி , பயற்றம் பருப்பு இவற்றை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும்.
 ஒரு வெண்கலப் பானையில் அரைக் கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, தாளித்து,  கடலைப்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றைப் போட்டு
டகிளறுங்கள்.அதில் வற்றல்மிளகாயை பிய்த்துப்போடவும்..பின்னர் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி , தேங்காய் துருவலையும் போட வேண்டும் தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் போது உப்பு சேர்த்து பின் வறுத்த, அரிசி, பயற்றம் பருப்பை சிறிது சிறிதாக போட்டு கிளறி கறிவேப்பிலை சேர்க்கவும்.
 ஒரு குழிவான பாத்திரத்தில் நீர் விட்டு அதனால் வெண்கலப்பானையை மூடி வைத்தால் அடி பிடித்துக் கொள்ளாமல் இருக்கும், பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்

Monday, February 1, 2016

STUFFED குடமிளகாய்



தேவையானவை:

குடமிளகாய் 4
உருளைக்கிழங்கு 4
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
கார்ன் மாவு 1/4 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பில சிறிதளவு
------
செய்முறை:
குடமிளகாயை மேலே வெட்டி கிண்ணம் போல் செய்துகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
அதனுடன் தேவையான உப்பு,மஞ்சள்தூள்,காரப்பொடி சேர்த்து நன்கு முறுகலாக சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்.

ஒவ்வொரு குடமிளகாய் கிண்ணத்தின் உள்ளே சிறிதளவு  எண்ணெய் தடவி உருளை பொரியலை வைத்து கார்ன் மாவு பேஸ்டால் நன்றாக மூடவும்.
(கார்ன் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைக்கவேண்டும்)

ovenஐ 275* யில் preheat  செய்ய வேண்டும்.
ரெடியாக உள்ள stuffed குடமிளகாய்களை ஒரு ட்ரேயில் வரிசையாக வைக்கவேண்டும்.
cooking time 15 நிமிடம் 350* யில் வைத்து எடுக்கவேண்டும்.

சுவையானது.குழந்தைகளுக்கு அப்படியே கொடுக்கலாம்,

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...