Monday, May 30, 2016

சாமை கிச்சடி



                                       
தேவையானவை:
                             
 சாமை 1 கப்
பயத்தம்பருப்பு 1/4கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
தண்ணீர்  4 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



 சாமை,பயத்தம்பருப்பு  இரண்டையும்  தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில்  சாமை யை  3 கப் தண்ணீரிலும் ,பயத்தம்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து  1 கப் தண்ணீர் வைத்து ( 5 விசில்) எடுக்கவும்.
.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி குக்கரில் இருந்து எடுத்த சாமை,பயத்தம்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் ஒன்று  சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

Thursday, May 26, 2016

பூசணி கூட்டு



தேவையானவை:
பூசணி துண்டுகள் 2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.
கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும் பூசணித்துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
பூசணிக்கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

Monday, May 16, 2016

வரகரிசி தயிர் சாதம்




தேவையானவை:                        

                                                                                        வரகரிசி
                                                                           


வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 1/2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
சீரகம் 1 தேக்கரண்டி
தயிர் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:




வரகரிசியை ஒரு கப்புக்கு 3 1/2 கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வரகரிசி நன்றாக ஆறியதும் அரைத்த விழுதை அதனுடன் கலக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து மேலும் மீதமுள்ள தயிரை ஊற்றி பிசையவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்

Wednesday, May 11, 2016

மரவள்ளிக்கிழங்கு பொரியல்




தேவையானவை:


மரவள்ளிக்கிழங்கு 2 துண்டுகள்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம்1
காய்ந்த மிளகாய்2
தேங்காய் துருவல்1/4 கப்
கடுகு1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணய் தேவையானது
-------
செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை தேவையான உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
நன்கு வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வடிகட்டிய மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.

Wednesday, May 4, 2016

ராகி புட்டு



தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...