Thursday, March 24, 2011

தென்மாவட்ட கொத்சு



இந்த கொத்சு தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்பு.

தேவையானவை:

கத்திரிக்காய் 6

சின்ன வெங்காயம் 10

புளி ஒரு எலுமிச்சை அளவு

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

நெய் 2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

உப்பு,நல்லெண்ணைய் தேவையானது
---------
பொடி செய்ய:

கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல் 6

தனியா 1 டேபிள்ஸ்பூன்
-----
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
----
செய்முறை:

கத்திரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து ஆறியபின் விழுதுபோல அரைத்துக்கொள்ளவேண்டும்.

அதே நெய்யில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
----
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணைய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து புளியை
ஒரு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் கொதிக்கவைக்கவேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்த கத்திரி விழுது,பொன்னிறமாக வதக்கிய வெங்காயம்,அரைத்த பொடி மூன்றையும்
சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தபின் நல்லெண்ணையில் பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை பொறித்து சேர்க்கவேண்டும்.

12 comments:

ராமலக்ஷ்மி said...

எளிமையான நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.

Kanchana Radhakrishnan said...

செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி.

ஹேமா said...

சுலபமாகச் செய்துகொள்ளலாம்.
நிச்சயம் செய்து பார்த்துச் சொல்கிறேன் !

Priya Sreeram said...

this is a good recipe- will try this one ,bookmarking it !

GEETHA ACHAL said...

எளிதில் செய்ய கூடியதாக இருக்கு...

கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டுமா...

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஹேமா.
.

Kanchana Radhakrishnan said...

//
GEETHA ACHAL said...
எளிதில் செய்ய கூடியதாக இருக்கு...

கண்டிப்பாக நெய் சேர்க்க வேண்டுமா...

நெய் வேண்டாம் என்று நினைப்பவர்கள் கத்திரிக்காயை எண்ணையில் பொறித்துக் கொள்ளலாம்.
வருகைக்கு நன்றி கீதா.

Jayanthy Kumaran said...

Hy Kanchana,
this dish sounds healthy n must have tasted divine..
first time here..lovely space with interesting recipe collections.
Happy to follow u..:)
Do stop by mine sometime..
Tasty Appetite

Menaga Sathia said...

சுலபமான சூப்பர் குறிப்பு!!

Kanchana Radhakrishnan said...

Thanks for coming Jay.

ஸாதிகா said...

கத்தரிக்காய் கொத்ஸு.நீண்ட நாட்களாக செய்து பார்த்திட வேண்டுமென ஆவல்.பகிர்வுக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...