Sunday, August 29, 2010

பட்டர் குல்சா


தேவையானவை:
மைதாமாவு 2 கப்
dry yeast 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்
வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது வென்னீர் எடுத்துக்கொண்டு அதில் dry yeast யும் சர்க்கரையையும் சேர்த்து கலக்கவேண்டும்.
பத்து நிமிடம் தனியே வைக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் மைதாமாவு,உப்பு.yeast கலவை மூன்றையும் சேர்த்து கை விரல்களால் கிளறி வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து
மாவை தளர பிசைய வேண்டும்.ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் சேர்த்து பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

பிசைந்த மாவை உருண்டைகளாக்கி சற்று கனமாக இடவேண்டும்.பின்னர் ஒவ்வொன்றாக தவாவில் போட்டு மூடவேண்டும்.
இரண்டு நிமிடம் கழித்து மேலே உப்பி வரும்.வெளியே எடுத்து இருபுறமும் வெண்ணைய் தடவவேண்டும்.

இதற்கு side dish Peas Masala,ஆலூ மட்டர்.

Tuesday, August 24, 2010

வெந்தய ரெய்தா


தேவையானவை:

வெந்தய கீரை 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி துருவல் 1 டீஸ்பூன்
தயிர் 1/4 கப்
எலுமிச்சைசாறு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையானது.
செய்முறை:

பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் இஞ்சிதுருவல்,தயிர்,எலுமிச்சைசாறு.
கறிவேப்பிலை,கொத்தமல்லித் தழை உப்பு சேர்த்து அரை மணிநேரம் ஊறவைத்து சாப்பிடவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.இரும்பு சத்து,நார் சத்து உள்ளது.
அல்சருக்கு நல்ல பலன் அளிப்பது.உடலுக்கு குளுமை.

Tuesday, August 17, 2010

சமையலில் பப்பாளி


பப்பாளியை பலவிதங்களில் சமைக்கலாம்.

பப்பாளி தேங்காய் கறி:

பப்பாளியை தோலை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேபப்பிலை தாளித்து வேகவைத்த பப்பாளித் துண்டுகளை பிரட்டி
தேங்காய் துருவலை சேர்க்கவும்.

பப்பாளி,சன்னா கூட்டு:

பப்பாளியை துண்டுகளாக்கி வேகவைக்கவும்.
ஊறவைத்த கொண்டக்கடலை 1/2 கப்,பயத்தம்பருப்பு 1/4 கப். இரண்டையும் குக்கரில் வேகவைக்கவும்.
தேங்காய் துருவல் 1/2 கப்,மிளகு 5,பச்சைமிளகாய் 3.சீரகம் 1 டீஸ்பூன் அரைத்து வேகவைத்த பப்பாளித்துண்டுகளுடன் சேர்க்கவும்.
குக்கரில் இருந்து கொண்டக்கடலையையும்,பயத்தம்பருப்பையும் இதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
நன்றாக கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

பப்பாளி அல்வா:

பப்பாளி பழத்துண்டுகள் 1 கப்,சர்க்கரை 1/2 கப்,நெய் 1/2 கப்.

பப்பாளித் துண்டுகளை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்து கிளறவெண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவேண்டும்.
ஏலத்தூள்,வறுத்த முந்திரி சேர்க்கலாம்.

பப்பாளி ஸ்மூதி:

பப்பாளி பழத் துண்டுகள் 1 கப்,வாழைப்பழம் நறுக்கியது 1 கப்,ஆரஞ்சு சாறு 1 கப்,பசலைக்கீரை நறுக்கியது 1/2 கப்,தேன் 1 டேபிள்ஸ்பூன்

பப்பாளி பழத்துண்டுகளுடன் வாழைப்பழம்,பசலைக்கீரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக ஆரஞ்சு சாற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றிதேன் கலந்து கொடுக்கவும்.

Monday, August 9, 2010

பரங்கிக்காய் புளிக் கறி


.

பரங்கித் துண்டுகள் 2 கப்
(மஞ்சள் பூசணி)
புளி எலுமிச்சையளவு
வெங்காயம் 1
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
பரங்கித் துண்டுகளை புளித் தண்ணீரில் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
காய் நன்றாக வெந்ததும் வடிகட்டவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் வடிகட்டிய பரங்கித் துண்டுகளை சேர்க்கவும்.
தேங்காய் துருவலையும்,பச்சைமிளகாயையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இதனுடன் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
கடைசியில் பொடித்த வெல்லம் சேர்க்கவேண்டும்.
இறக்கிய பின் கொத்தமல்லித் தழையை தூவவும்.

இது இனிப்பு,புளிப்பு,காரம் மூன்றும் கலந்த சுவையான பொரியல்.

Tuesday, August 3, 2010

கடுகு கீரை சப்ஜி (Mustard Greens Sabji)

வட இந்தியாவில் ரொட்டி,நான்,பரோட்டா மூன்றுக்கும் side dish ஆக கடுகு கீரை சப்ஜி பிரபலமானது.
இப்பொழுது சென்னையில் பஞ்சாபி தபா வில் 'Sarson Ka Saag' என்ற பெயரில் கிடைக்கிறது.


கடுகு கீரை:



தேவையானவை:

கடுகு கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன்
பனீர் துண்டுகள் 10
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடுகு கீரையையும் பசலைக்கீரையையும் நன்றாக அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் அரிந்து கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
----
கடுகு கீரையையும்,பசலைக்கீரையையும் தனித்தனியாக Microwave Bowl ல் சிறிது தண்ணீர் தெளித்து வைத்து Microwave oven "H" ல் இரண்டு நிமிடம் வைக்கவும்.
ஆறினவுடன் இரண்டையும் சேர்த்து மிக்சியில் விழுது போல அரைத்துக்கொள்ளவும்,
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி நான்கையும் வதக்கவும்.
இதனுடன்அரைத்து வைத்துள்ள விழுது,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடலைமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து இந்த கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும்.
பத்து நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த பனீர் துண்டுகளை சேர்க்கவும்.
இறக்கிய பின் வெண்ணய் மேலே போடவும்.

Sunday, August 1, 2010

ஓட்ஸ் பகாளாபாத்


ஓட்ஸ் 1 கப்
பால் 1 கப்
தயிர் 1 கப்
முந்திரிபருப்பு 5

தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

ஓட்ஸை microwave bowl ல் சிறிது தண்ணீருடன் oven ல் 2 நிமிடம் 'H' ல் வேகவைக்கவும்.
வெளியே எடுத்து சிறிது ஆறியவுடன் ஒரு கப் பாலை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
அரை மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் தயிர் தேவவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,பொடியாக நறுக்கிய
பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.
முந்திரிபருப்பை பொன்னிறமாக வறுத்து கலக்கவும்.
Fridge ல் ஒரு மணிநேரம் வைத்து பின் சாப்பிடலாம்.
மாதுளம் முத்துகள்,உலர்ந்த திராட்சை சேர்க்கலாம்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...