Wednesday, December 30, 2009

தேங்காய் பால் குருமா


தேவையானவை:

தேங்காய் பால் 2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
காரட் 2
தக்காளி 2
தண்ணீர் 1/4 கப்

அரைக்க:

தேங்காய் துருவியது 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1/4 கப்
முந்திரிபருப்பு 10
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை,லவங்கம்,சோம்பு எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்துக்கொள்ளவும்.
காரட்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கக்ிகொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டிய பொருட்களை வறுக்கவும்.
பின்னர் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு,காரட்,தக்காளி,தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுதுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இந்த குருமா இட்லி,தோசை,சப்பாத்தி ஆகியவற்றிற்கு சிறந்த side dish.

Monday, December 28, 2009

கல்கண்டு பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 கப்
பால் 2 கப்
கல்கண்டு 2 கப்
---
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
குங்குமப்பூ சிறிதளவு

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு அரிசியையும் பயத்தம்பருப்பையும் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
இதில் வென்னீர் விட்டு நன்றாக களைந்து கொள்ளவும்.
பாலில் சிறிது தண்ணீர் சேர்த்து களைந்த அரிசியையும் பருப்பையும் அதில் கலந்து
குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கால் கப் தண்ணீர் விட்டு
கல்கண்டை போட்டு கம்பிப்பாகு பதத்திற்கு காய்ச்சவும்.
இதில் வெந்த அரிசியையும் பருப்பையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
மீதமுள்ள நெய்,ஏலக்காய்தூள் சேர்க்கவும்
குங்குமப்பூ வை சிறிது பாலில் கலந்து சேர்க்கவும்
எல்லாவற்றையும் நன்றாக கிளறி இறக்கவும்.

Monday, December 21, 2009

French Fries


தேவையானது:

பெரிய உருளைக்கிழங்கு 4
உப்பு சிறிதளவு
தண்ணீர் 4 கப்
எண்ணைய் தேவையானது

செய்முறை:

பெரிய கெட்டியான உருளைக்கிழங்காக வாங்கிக்கொள்ளவும்.
தோலை சீவிவிட்டு 2 அங்குல நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
முதலில் குளிர்ந்த தண்ணீரில் உருளைக்கிழங்கு துண்டுகளை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்னர் வடிகட்டவும்.

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவைக்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் சிறிதளவு உப்பு சேர்த்து வடிகட்டிய உருளைக்கிழங்கு துண்டுகளை
போடவும்.15 நிமிடம் கழித்து வடிகட்டி பேப்பர் டவலால் ஒத்தி எடுக்கவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் உருளைக்கிழங்குத்துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக
போட்டு நன்றாக பிரௌன் கலர் வந்ததும் எடுக்கவும்.

இதற்கு side dish Tomato ketchup or chilli sauce

Tuesday, December 15, 2009

கேழ்வரகு லட்டு

கேழ்வரகு மாவு 2 கப்
உப்பு ஒரு சிட்டிகை
----
வேர்க்கடலை 1 கப்
கருப்பு எள் 1 கப்
வெல்லம் 1 1/2 கப் (பொடித்தது)
நெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கேழ்வரகு மாவை சிட்டிகை உப்பு தேவையான தண்ணீருடன் நன்றாக சப்பாத்தி மாவு போல
பிசைந்துகொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக்கி
கையால் அடை போல தட்டி இருபுறமும் எண்ணைய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
அடை கொஞ்சம் ஆறியவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பொடி பண்ணவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

வேர்க்கடலையையும் கறுப்பு எள்ளையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்து
வெல்லத்துடன் சேர்த்து மிக்சியில் பொடி பண்ணவும்..
இந்த பொடியுடன் கேழ்வரகு பொடியை சிறிது நெய் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
இது ஒரு வாரம் வரை கெடாது.
பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல சத்துள்ள சிற்றுண்டி.

Wednesday, December 9, 2009

பசலைக்கீரை சூப்

தேவையானவை:

பசலைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
பால் 1 கப்
மைதாமாவு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
cream 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை: சூப்

பொடியாக நறுக்கிய பசலைகீரையை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைக்கவேண்டும்.
கீரை நன்றாக வெந்ததும் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
வதக்கவேண்டும்.பின்னர் மைதாமாவை தூவி low flameல் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
அரைத்துவைத்துள்ள பசலை விழுது,பால்,சிறிது உப்பு,மிளகு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் cream சேர்க்கவேண்டும்.

Sunday, December 6, 2009

பாவ் பாஜி



தேவையானவை:

பாவ் பிரட் 2
வெங்காயம் 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 கப் (பொடியாக நறுக்கியது)
குடமிளகாய் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது
பச்சைப்பட்டாணி 1 கப்
முட்டைக்கோஸ் 1 கப் (பொடியாக நறுக்கியது)
துருவிய காரட் 1 கப்
உருளைக்கிழங்கு 2 (வேகவைத்தது)
பூண்டு 4 பல் (துருவியது)
பச்சைமிளகாய் 3 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சம் பழ சாறு 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

மசாலா பவுடர் :

தனியாதூள்,சீரகத்தூள்,காரப்பொடி,பாவ் பாஜி மசாலா
ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க:

கொத்தமல்லித்தழை 1/2 கப் (அரிந்தது)


பாஜி செய்முறை:

பொடியாக நறுக்கிய தக்காளியை வாணலியில் எண்ணைய் விட்டு நன்கு வதக்கி பேஸ்டு மாதிரி
செய்து கொள்ளவேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்,பூண்டு
இரண்டையும் நன்றாக வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்.

வேகவைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து அதனுடன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய்,பீன்ஸ்,முட்டைக்கோஸ்
துருவிய காரட்,
பச்சைப் பட்டாணி,
தக்காளி பேஸ்டு
எல்லாவற்றையும் உப்புடன் சேர்த்து வெங்காயத்தோடு நன்கு கலந்து வதக்கவேண்டும்.

காய்கறிகள் நன்றாக வதங்கிய பின் ஒரு கப் தண்ணீர் விட்டு எல்லா மசாலா பவுடர்களையும்
சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.

அடுப்பை அணைத்து எலுமிச்சம் பழ சாற்றினை ஊற்றி நன்கு கிளறவேண்டும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
பாவ் தயாரிக்க:

பாவ் பிரட்டை குறுக்காக வெட்டி அதில் இறுபுறமும் வெண்ணைய் தடவி தோசைக்கல்லில்
பொன்னிறமாக வரும் வரை ரோஸ்டு செய்யவேண்டும்.

சூடாக இருக்கும் போதே ரெடியாக உள்ள பாஜியுடன் சாப்பிடவேண்டும்.

Thursday, December 3, 2009

பப்பாளியின் பயன்கள்


பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.

பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

குழந்தைகளுக்கு பப்பாளிப்பழம் கொடுத்தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பல் எலும்பு போன்றவை வலுவடையும்.

பப்பாளியை உணவில் சேர்த்துக்கொண்டால் தேவையற்ற சதைகள் குறையும்.
(பப்பாளி கூட்டு பண்ணலாம்)

பப்பாளியின் பாலை புண் உள்ள இடங்களில் பூசினால்குணமாகும்.

பப்பாளி இலையை அரைத்து பூசினால் கட்டி உடையும்.வீக்கமும் குறையும்.

பிரசவமான பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்கு சுரக்கும்.
பப்பாளி விதையை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

நன்கு பழுத்த பழத்தை கூழ் போல பிசைந்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முக சுருக்கம் மாறி
முகம் பொலிவு பெறும்.

Tuesday, December 1, 2009

அப்பம்


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)
வாழைப்பழம் 1 (சிறியது)
கோதுமைமாவு 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

பச்சரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி
பொடித்த வெல்லம்,வாழைப்பழம் இரண்டையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
(அரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்).
அதனுடன் கோதுமைமாவு,ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்

ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து எண்ணைய் காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியால்
அப்ப மாவை ஒவ்வொன்றாக ஊற்றி இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவேண்டும்

Monday, November 30, 2009

காரட் சூப்


தேவையானவை:

காரட் 4
வெங்காயம் 1
பூண்டு 3 பல்
வெஜிடபிள் ஸ்டாக் 2 கப் **
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
சோளமாவு 1 டீஸ்பூன்
தேங்காய் பால் 1/2 கப்
உப்பு தேவையானது

செய்முறை:

காரட், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட வாணலியை எடுத்துக்கொண்டு அதில் வெண்ணைய் விட்டு நறுக்கிய காரட்,வெங்காயம்
இரண்டையும் வதக்கவும்.
பின்னர் நறுக்கிய பூண்டு,இஞ்சி,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும்..
வெஜிடபிள் ஸ்டாக் 2 கப்பை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
சூப் நீர்த்து இருந்தால் சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையில்
சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்க்கவும்.

வெஜிடபிள் ஸ்டாக்:

வெங்காயம் 1
தக்காளி 2
முட்டைக்கோஸ் (நறுக்கியது 1 கப்)
உருளைக்கிழங்கு 1
பூண்டு 4 பல்
பிரிஞ்சி இலை 1
மிளகு 1 டீஸ்பூன்
கிராம்பு 2

வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொண்டு
நான்கு கப் தண்ணீரில் நறுக்கிய முட்டைகோஸுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
அதனுடன் பூண்டு,பிரிஞ்சி இலை,மிளகு,கிராம்பு,சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு
வடிகட்டவும்.வடிகட்டியது இரண்டு கப் இருக்கவேண்டும்.

Friday, November 27, 2009

வேப்பம்பூ ரசம்


தேவையானவை: 
புளி நெல்லிக்காய் அளவு
வேப்பம்பூ 1/2 கப் (காய்ந்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

அரைக்க:
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2

தாளிக்க:

கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து
சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

வேப்பம்பூ ரசம் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

Tuesday, November 24, 2009

பலாக்காய் சொதி

தேவையானவை:

சிறிய பிஞ்சு பலாக்காய் 1
சிறிய வெங்காயம் 10
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது


அரைக்க:

மிளகு 5
சீரகம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
பூண்டு 3 பல்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/4 கப்

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முதலில் பலாக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து
வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளப் பொருட்களை எண்ணையில் வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து சிறிய வெங்காயத்தை வதக்கி அதனுடன் வேகவைத்துள்ள
பலாத்துண்டுகளையும் பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள விழுதை வேண்டிய உப்பு,சிறிதளவு தண்ணருடன் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தேங்காயெண்ணையில் தாளிக்க வேண்டும்.
நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

Friday, November 20, 2009

சேனைக்கிழங்கு பிரட்டல்


தேவையானவை:

சேனைக்கிழங்கு 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
காரப்பொடி 1 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

சேனைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் தண்ணீர் வைத்து சேனைக்கிழங்கை மஞ்சள்தூளுடன் வேகவைக்கவும்.
முக்கால் வெந்ததும் உப்பு சேர்க்கவும்.
முழுவதும் வெந்ததும் வடிகட்டவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வடிகட்டிய
சேனைக்கிழங்கை போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.
பின்னர் காரப்பொடி,கடலைமாவு,அரிசிமாவு மூன்றையும் தூவி சிறிது எண்ணைய் விட்டு
கிளறவும்.
உதிரியாக வரும்.

Tuesday, November 17, 2009

ஸ்டீல் கட் ஓட்ஸ் தோசை


இது நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம்.
மாவுச்சத்து,புரதச்சத்து,வைட்டமின் "B" யும் தாது உப்புக்கள்
பொட்டாசியம்,பாஸ்பரசும் உள்ளது.
நார்ச்சத்து உள்ளதால் இது நம்முடைய அன்றாட உண்வில் பெரும் பங்களிக்கிறது.
சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

தோசைக்கு தேவையானவை:

ஸ்டீல் கட் ஓட்ஸ் 2 கப்
ரவா 1/4 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
மிளகு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

.ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.
ஸ்டீல் கட் ஓட்ஸை அதில் போட்டு ஒரு இரவு முழுக்க ஊறவிடவும்.

மற்ற எல்லா பொருட்களையும் 2 மணிநேரம் காலையில் ஊறவைத்தால் போதும்.

முதலில் ஊறிய ஸ்டீல் கட் ஓட்ஸை அரைத்து எடுத்துவைக்கவும்.
பின்னர் மற்றப்பொருட்களையெல்லாம் உப்புடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அதனுடன் அரைத்த ஓட்ஸ் மாவை கலந்து ஒரு சுற்று சுற்றவும்.

அடுப்பில் தோசைக்கல்லை போட்டு ஒரு குழிக்கரண்டியால் மாவை நடுவில் ஊற்றி தோசை மாதிரி
வார்க்கவும்.சிறிது எண்ணைய் விட்டு இரண்டுபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவேண்டும்.

side dish வெங்காய சட்னி.

Sunday, November 15, 2009

ஓட்ஸ் புட்டிங் (மைக்ரோவேவ் சமையல்)


தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
தண்ணீர் 1 கப்
சர்க்கரை 1/4 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 10
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Food colour 1/2 டீஸ்பூன் (lemon yellow)

செய்முறை:

ஓட்ஸை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ரவை போல உடைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு microwave bowl யை எடுத்துக்கொண்டு வறுத்த ஓட்ஸ் ரவையுடன் ஒரு கப் தண்ணீர் விட்டு
மூன்று நிமிடம் microwave "High" ல் வைக்கவேண்டும்.

வெளியே எடுத்து சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்து நன்கு கிளறி மீண்டும் மூன்று நிமிடம்
microwave "High" வைக்கவேண்டும்.

Food colour யை சிறிது பாலில் கலந்து சேர்க்கவேண்டும்.

கடைசியாக முந்திரிபருப்பை வறுத்து ஏலக்காய் தூளோடு போடவேண்டும்

Wednesday, November 11, 2009

வாழைத்தண்டு மோர்கூட்டு


தேவையானவை:

வாழைத்தண்டு 1
கெட்டி மோர் 1 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
----
அரைக்க:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
----
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்
சேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
கடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

Monday, November 9, 2009

அவசர ரசம் (மைக்ரோவேவ் சமையல்)

ரச பேஸ்டுக்கு தேவையானவை:

மிளகு 4 டீஸ்பூன்
சீரகம் 4 டீஸ்பூன்
தனியா 5 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 10
புளி 2 எலுமிச்சை பழ அளவு

வாணலியில் சிறிது எண்ணை விட்டு மிளகு,சீரகம்,தனியா,மிளகாய்வற்றல் நான்கையும் நன்கு வறுத்துக்கொள்ளவும்.
புளியை கோதில்லாமல் எடுத்து எண்ணைய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் பேஸ்டு போல அரைத்து ஒரு டப்பாவில் போட்டு
fridge ல் வைக்கவும்.இந்த பேஸ்டு பத்து நாள் கெடாமல் இருக்கும்.

ஒரு டேபிள்ஸ்பூன் பேஸ்டுக்கு தேவையானவை:

தக்காளி 2
பெருங்காயம் சிறு துண்டு
தண்ணீர் 3 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு

தாளிக்க:

கடுகு 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2

செய்முறை:

மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் பேஸ்ட் யை 3 கப் தண்ணீரில்
தக்காளி,உப்பு.பெருங்காயம் சேர்த்து மைக்ரோவேவ் 'high' ல் 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
பின்னர் எடுத்து நன்கு கிளறி மீண்டும் 'high' ல் 5 நிமிடம் வைத்து கொதிக்கவைக்கவும்.

வெளியே எடுத்து வேண்டுமென்றால் அரை கப் தண்ணீர் சேர்க்கலாம்.
பின்னர் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லித்தழை தூவவேண்டும்.

Friday, October 30, 2009

கத்திரிக்காய் கொத்சு


தேவையானவை:

பெரிய கத்திரிக்காய் 1
புளி எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
---
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

பெரிய கத்திரிக்காயின் மேல் கொஞ்சம் எண்ணைய் தடவி அடுப்பில் சுட வேண்டும்.
பின்னர் தோலுரித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து சிறிது தண்ணீர் விட்டு
விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
புளி நன்றாகக் கொதித்தவுடன் அரைத்த விழுதினை சேர்க்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் கத்திரிக்காய் விழுதினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைக்கவேண்டும்.
மிகக் காரமாக உணர்ந்தால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.
வெண்பொங்கல்,அரிசி உப்புமா இரண்டிற்கும் ஏற்ற side dish இது.

Thursday, October 29, 2009

பச்சைமிளகாய் சட்னி

தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Wednesday, October 28, 2009

முட்டைகோஸ் கறி


தேவையானவை:

முட்டைக்கோஸ் 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

அரைக்க:

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.
ஒருபாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து மஞ்சள்தூள்,முட்டைக்கோஸ் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
பாதி வெந்ததும் உப்பு போடவும்.
நன்றாக வெந்ததும் வடிகட்டவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வடிகட்டிய முட்டைக்கோஸை
வதக்கவும். அரைத்து வைத்துள்ளதை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.

Microwave ல் செய்வதென்றால்

Microwave பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு மஞ்சள் தூள்,முட்டைகோஸ் சேர்த்து 5 நிமிடம் "High" ல் வைக்கவேண்டும்,
மீண்டும் எடுத்து ஒரு கிளறு கிளறி உப்பு சேர்த்து 5 நிமிடம் "High" ல் வைக்கவேண்டும்.
இதில் தண்ணீர் அதிகம் வைக்கவேண்டாம்.தெளித்தாலே போதும்.
வடிகட்டி மேற்கூறியவாறு செய்யவேண்டும்.

Sunday, October 25, 2009

ஹைதராபாத் வெஜ் பிரியாணி



தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
பீன்ஸ் 15
காரட் 2
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 2
தக்காளி 3
எண்ணைய்,உப்பு தேவையானது.
---
இஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டேபிள்ஸ்பூன்
காரப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
தயிர் 1/4 கப்
-----
தாளிக்க:
கிராம்பு 4
ஏலக்காய் 2
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
பட்டை 1 துண்டு
பிரிஞ்சி இலை 1
கசகசா 1 டேபிள்ஸ்பூன்
-----

செய்முறை:

* பாசுமதி அரிசியை நன்றாகக் களைந்து ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் கணக்கில் வைத்து 45 நிமிடம் ஊறவைக்கவும்.
*பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,வெங்காயம் நான்கையும் பொடியாக நறுக்கவும்.
*தக்காளியை பொடியாக நறுக்கி எண்ணைய் விட்டு பேஸ்டு போல் செய்துகொள்ளவும்.
---
1.வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க கொடுத்துள்ள மசாலா சாமான்களை தாளிக்கவும்.
2.அதனுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
3.பின்னர்
நறுக்கிவைத்துள்ள காய்கறிகள்
தக்காளி பேஸ்டு
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள்தூள்,தனியா தூள்,காரப்பொடி
தேவையான உப்பு
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
4.காய்கறிகள் முக்கால் வெந்தவுடன் தயிர் விட்டு கலந்து அடுப்பை அணைக்கவும்.
5.ஊறவைத்த அரிசியில் காய்கறிக்கலவையைக் கலந்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்கவேண்டும்.
அரிசியும் காய்கறிக்கலவையும் சம சீராக (தண்ணீர் அதிகம் கூடாது) இருக்கவேண்டும்.
6.பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதல் 10 நிமிடம் medium high லும் அடுத்த 10 நிமிடம் medium low விலும்
வைக்கவேண்டும்.

தம் கட்டுதல்:
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதற்குள் பிரியாணி பாத்திரத்தை
10 நிமிடம் வைக்கவேண்டும்.இப்படி செய்தால் பிரியாணி பொல பொல என்று உதிரியாக இருக்கும்.

வெள்ளரிக்காய் ரெய்தா:
வெள்ளரிக்காய் 2; புதினா சிறிதளவு; பச்சைமிளகாய் 4; உப்பு ; தயிர் 1 கப்

வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.தயிர் சேர்க்கவும்.
புதினா,பச்சைமிளகாய்,உப்பு மூன்றையும் பச்சையாக அரைத்து தயிரில் கலக்கவும்.








:

Friday, October 23, 2009

பயத்தம்பருப்பு தோசை


தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:

புழுங்கலரிசி,பயத்தம்பருப்பு,வெந்தயம் மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்னர் வடிகட்டி தேவையான உப்புடன் நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பச்சைமிளகாயையும்,இஞ்சியையும் பொடியாக நறுக்கிப்போடவும்.
கொத்தமல்லித்தழையை நன்கு அரிந்து பொடியாக நறுக்கிப் போடவும்.

அடுப்பில் தோசைக்கல் சூடானவுடன் மாவை ஊற்றி எண்ணைய் சிறிது விட்டு
இரு பக்கமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

இதற்கு side dish வெங்காயச் சட்னி.

Wednesday, October 21, 2009

கேழ்வரகு புட்டு(நூறாவது பதிவு )


தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் தேவையானது
ஏலக்காய் 4

செய்முறை:

* கேழ்வரகு மாவையும் உப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக
தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.உதிரியாக இருக்கவேண்டும்.
இந்த கலவையை இட்லி குக்கரில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.

* குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் பரவலாகப் போட்டு அதில்
பொடித்த சர்க்கரை,நெய்,தேங்காய் துருவல்,ஏலக்காய் (ஏலக்காயை நெய்யில் வறுத்து போடவும்)
சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

Monday, October 19, 2009

டோக்ளா (குஜராத்)


தேவையானவை:

புழுங்கலரிசி 1கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
----
தயிர் 3 கப்
பச்சைமிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
சமையல் சோடா 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு ,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:

1.அரிசி,உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து நிழலில் காயவைக்கவும்.
ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும்.

2.உடைத்த ரவையுடன் தயிர்,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நான்கு மணிநேரம் கழித்து சமையல் சோடாவை சிறிது எண்ணையில் கலந்து சேர்க்கவும்.
3.பச்சைமிளகாய்,இஞ்சி இரண்டையும் நைசாக அரைத்து சேர்க்கவும்.

4.ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து அதில் ஒரு தட்டில் சிறிது எண்ணைய் தடவி மாவை ஊற்றி
மூடவும்.15 நிமிடம் கழித்து எடுத்து வில்லைகள் போட்டு அரிந்த கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
(இட்லி குக்கரிலும் வைக்கலாம்.)

5.இதற்கு சரியான side dish புதினா அல்லது தக்காளி சட்னி.

(சற்று காரம் வேண்டுபவர்கள் மிளகுத்தூளை சிறிது மேலே தூவிக்கொள்ளலாம்.)

Thursday, October 15, 2009

தீபாவளி லேகியம்


தேவையானவை:

மிளகு 2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
தனியா 2 டீஸ்பூன்
ஓமம் 3 டேபிள்ஸ்பூன்
கண்டதிப்பிலி 10 குச்சிகல்
ஜாதிக்காய் 1 (சிறியது)
சுக்கு 25 கிராம்
ஏலக்காய் 3
நெய் 1/4 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
தேன் 1/4 கப்

செய்முறை:

மேலே கூறியவற்றில் நெய்,தேன் இரண்டையும் தவிர்த்து மற்ற எல்லாப்பொருட்களையும் மிக்ஸியில்
உடைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் எல்லா பொருட்களையும் போட்டு 15 நிமிடம்
ஊறவைக்கவும்.
சிறிது தண்ணீருடன் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த விழுதை கிளறவும்.
கட்டிதட்டாமல் இருக்க விடாமல் கிளறவேண்டும்.
தண்ணீர் வற்றியவுடன் பொடித்த வெல்லத்தைப் போடவேண்டும்.
பின்னர் நெய்யை விட்டு நன்கு கிளறவேண்டும்.
நெய் தனியாக பிரிந்ததும் தேனை விட்டு கிளறி எடுத்து வைக்கவேண்டும்.

Wednesday, October 14, 2009

மைக்ரோவேவ் மைசூர் பாக்


தேவையானவை:

கடலைமாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 1 1/2 கப்
நெய் 1 கப்
பால் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடலை மாவு,பொடித்த சர்க்கரை,நெய் மூன்றையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் நன்கு கலந்து கீழ்கண்டவாறு வைக்கவும்.

மைக்ரோவேவ் "High" ல் 2 1/2 நிமிடம் வைக்கவேண்டும்.
முதலில் 30 செகண்டு வைத்துவிட்டு எடுத்து கிளறி மீண்டும் 30 செகண்டு வைத்து கிளறி
மீண்டும் இது மாதிரி மொத்தம் 5 தடவை செய்யவேண்டும்.(அதாவது 2 1/2 நிமிடம்).
----
பின்னர் பாலை விட்டு கலந்து
"High" ல் மீண்டும் 2 1/2 நிமிடம் மேற்கூறியவாறு 30 செகண்டுக்கு ஒரு தடவை எடுத்து கிளறி
வைக்கவேண்டும். (5 தடவை).
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
ஒரு தட்டில் நெய் தடவி மைசூர் பாக் கலவையை கொட்டி வேண்டிய வடிவத்தில்
கட் பண்ணிக்கொள்ளவும்.

Monday, October 12, 2009

குலாப் ஜாமுன்


தேவையானவை:

கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்

செய்முறை:
1.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில்
மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

2.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து
பாகை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
3.வாண்லியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள
குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால்
ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும்.
brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம்.
(நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல்
இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)

Tuesday, October 6, 2009

ரவா உப்புமா


தேவையானவை:

ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
காரட் 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
நெய் 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை:

1.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவையை நன்றாக
பொன்னிறமாக வறுக்கவும்.தனியே எடுத்து வைக்கவும்.
2.வெங்காயத்தையும் காரட்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
----
1.வாணலியில் எண்ணய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை
பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
2.பின்னர் காரட்,பட்டாணி இரண்டையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கறிக் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
---
1.ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
சிறிது உப்பு சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்த ரவையை தூவிக்கொண்டே கிளறவும்.
கட்டி தட்டாமல் வந்தவுடன் காய்கறிக் கலவையை சேர்த்து கிளறவும்.
மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊத்தவும்.
ரவை உப்புமா உதிரியாக நன்றாக வரும்.

Thursday, October 1, 2009

ஆப்பிள் பகோடா


தேவையானவை:

ஆப்பிள் 1
கடலைமாவு 1/2 கப்
அரிசி மாவு 1/4 கப்
உப்பு கொஞ்சம்
எண்ணைய் தேவையானவை



செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
துருவிய ஆப்பிள்,கடலைமாவு,அரிசிமாவு,உப்பு நான்கையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் வேண்டாம்.ஆப்பிளில் இருக்கும் ஈரத்தன்மையே போதுமானது.
கடாயில் எண்ணைய் வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பகோடாக்களாக
போட்டு பொன்னிறமாக வ்ந்ததும் எடுக்கவும்.
இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி

Friday, September 25, 2009

ஓட்ஸ் உப்புமா


தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
காரட் 2
குடமிளகாய் 1
தண்ணீர் 1 1/2 கப்
உப்பு,எண்ணய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு

தாளிக்க:

கடுகு 1டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

வெங்காயம்,பச்சைமிளகாய்,காரட்,குடமிளகாய் நான்கையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பச்சைமிளகாய்,
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் காரட்,குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் 1 1/2 கப் தண்ணீருடன் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஓட்ஸை தூவி நன்றாக கிளற வேண்டும்.
ஓட்ஸ் வெந்தவுடன் அடுப்பை அணைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை
தூவவும்.

Tuesday, September 15, 2009

முளைகட்டின சோயா பீன்ஸ் சுண்டல்





முளைகட்டின சோயா பீன்ஸில் புரோட்டின் அதிகம் உள்ளது.நார்ச்சத்தும் விட்டமின் சி யும் அடங்கியுள்ளது.

தேவையானவை:

சோயாபீன்ஸ் 1கப்
குடமிளகாய் 1
வெங்காயம் 1
காரட் 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
--
பொடி செய்ய:
தனியா 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்புமிளகாய் 2
--
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

சோயாவை முளைகட்டும் முறை"

சோயாவை 2 கப் தண்ணீரில் முதல்நாள் இரவு ஊறவைக்கவேண்டும்.அடுத்தநாள் அந்த தண்ணீரை எடுத்துவிட்டு
வேறு தண்ணீர் விட்டு ஊறவைக்கவேண்டும்.இது மாதிரி 2,3 தடவை செய்யவேண்டும்.இரண்டாம் நாள் இரவில் சோயாவை
தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு ஈரத்துணியில் வைக்கவேண்டும்.அடுத்தநாள் காலையில் ஒவ்வொரு சோயா பருப்பும் அழகாக
முளைகட்டியிருக்கும்.
---
செய்முறை:
குடமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
பொடிசெய்வதற்கு சொன்ன பொருட்களை லேசாக எண்ணையில் வறுத்து
பொடி செய்து கொள்ளவும்.
முளைகட்டி சோயா பருப்பை தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.வடிகட்டவும்.
வாணலியை எடுத்துக்கொண்டு எண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்
சேர்த்துவதக்கவும்.
குடமிளகாய்,துருவிய காரட் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
வேகவைத்த சோயா பருப்பை சேர்த்து நன்றாக கிளறவும்.
கடைசியில் பொடி செய்த பொடியை தூவவும்.

Tuesday, September 1, 2009

அவல் உப்புமா


தேவையானவை:

அவல் 1கப்
பச்சைமிளகாய் 2
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
----
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
எலுமிச்சம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

1.அவலை தண்ணீரில் நன்றாகக் களைந்து வடிகட்டிவைக்கவும்.
கெட்டி அவல் என்றால் 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
3.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
----
1.வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
பச்சைமிளகாயை குறுக்காக வெட்டி சேர்த்து வதக்கவும்.
2.அவலை நன்றாக பிழிந்து அதனுடன் உப்பு,மஞ்சள்பொடி,மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து
வெங்காயம்,பச்சைமிளகாயுடன் கலந்து நன்கு கிளறவும்.
அவல் சீக்கிரத்தில் வெந்துவிடும்.
3.அடுப்பை அணைத்து எலுமிச்சம்பழம் பிழியவும்.
கொத்தமல்லித் தழையை தூவவும்.

Thursday, August 20, 2009

அன்னாசி ரசம்

தேவையானவை:

அன்னாசி 2 பெரிய துண்டுகள் (தோல் சீவியது)
துவரம்பருப்பு 1/2 கப்
புளி ஒரு சிறு எலுமிச்சைபழ அளவு
பெருங்காயம் ஒரு துண்டு
உப்பு தேவையானது
-----
அரைக்க:

வற்றல் மிளகாய் 2
தனியா 1/2 டீஸ்பூன்
மிளகு 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
செய்முறை:
1.அன்னாசிப்பழத்துண்டுகளை சிறிது தண்ணீருடன் mixy ல் அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.
2.துவரம்பருப்பை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
3.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் சீரகத்தை பச்சையாகவும் மற்றவற்றை சிறிது எண்ணையில் வறுத்து எல்லாவற்றையும்
ஒன்றாக சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
4..புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.அதில் உப்பு,பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும்.
5.புளி தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரைத்த விழுதையும்,வெந்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
6.கடைசியில் வடித்து வைத்துள்ள அன்னாசி பழச்சாறை விட்டு ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இந்த ரசத்திற்கு தக்காளி சேர்க்கவேண்டாம்.

Friday, August 7, 2009

மெரினா சுண்டல்


தேவையானவை:

பச்சப்பட்டாணி 2 கப்
பச்சமிளகாய் 4
துருவிய தேங்காய் 1/2 கப்
மாங்காய் 1
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
துருவிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.பச்சைப்பட்டாணியை 6 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும்
அடுப்பை அணைத்து வடிகட்டிவைக்கவும்.
2.பச்சைமிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
3.மாங்காயை துருவிக்கொள்ளவும்.
------
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
வடிகட்டிய பட்டாணி,உப்பு,பச்சைமிளகாய்,துருவிய தேங்காய்,துருவிய மாங்காய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும்.
-----
இந்த சுண்டல் தான் கடற்கரையில் விற்கும் சுண்டல்.

Sunday, August 2, 2009

கொழுக்கட்டை

வரலட்சுமி விரத நோன்பிற்கும் வினாயக சதூர்த்திக்கும் தேங்காய்,உளுந்து ஆகிய இரண்டு வகை கொழுக்கட்டைகள் செய்வது வழக்கம்.
இதற்கு மேல்மாவு இரண்டிற்கும் ஒன்று.

மேல்மாவு செய்வதற்கு தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
(பச்சரிசி 3 கப்பை தண்ணீரில் இரண்டு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி நிழலில் துணியை போட்டு உலர்த்தி எடுக்கவும்.
பின்னர் mixie ல் அரைத்து சலிக்கவும். )சலித்தமாவு 2 கப் இருக்கவேண்டும்.
தண்ணீர் 4 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்

செய்முறை:
* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் 4 கப் தண்ணீர் விட்டு அதனுடன் எண்ணைய்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்தவுடன் சலித்துவைத்துள்ள அரிசிமாவை பரவலாக தூவிக்கொண்டே கிளறவேண்டும்.கட்டிதட்டாமல் நன்றாக கிளறி
ஒரு தட்டில் எடுத்து வைத்து அதன் மேல் ஈரத்துணியால் மூடவேண்டும்.இப்போழுது மேல்மாவு ரெடி.

தேங்காய் பூரணம் செய்வதற்கு தேவையானவை:

துருவிய தேங்காய் 1 கப்
துருவிய வெல்லம் 1 கப்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்



செய்முறை:
1.அடுப்பில் வாணலியை வைத்து அதில் துருவிய தேங்காய்,வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
(தண்ணீர் விடக்கூடாது)ஈரப்பசை இல்லாமல் "பிசுக்" எனக்கையில் ஒட்டிக்கொள்ளும் பதத்தில் இறக்கி
ஏலக்காய் பொடியை தூவவேண்டும். தேங்காய் பூரணம் ரெடி.
2. ரெடியாக வைத்துள்ள மேல்மாவை நல்லெண்ணையை கையில் தடவிக்கொண்டு பிசைந்து உருண்டைகளாக
உருட்டிக்கொள்ளவும்.
3.ஒரு உருண்டையை கையில் எடுத்து கிண்ணம் போல் செய்து நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
பின்னர் இட்லி தட்டில் ஆவியில் வைத்து 7 நிமிடத்தில் எடுக்கவும்.

உளுத்தம்பூரணம் செய்வதற்கு தேவையானவை:

உளுத்தம்பருப்பு 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு




செய்முறை:

1.இரண்டு பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி மற்றவைகளுடன் சேர்த்து நைசாக
அரைத்துக்கொள்ளவும்.
2.அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.
3.ஆவியில் வைத்ததை எடுத்து உதிர்த்துக்கொண்டு வாணலியில் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து
அதனுடன் சேர்த்து கிளறி எடுத்து வைக்கவும்.
4.ரெடியாக வைத்துள்ள மேல்மாவினை உருண்டைகளாக்கி ஒரு உருண்டையை உள்ளங்கையில் வைத்து
பட்டையாக தட்டி அதனுள் உளுந்து பூரணத்தை வைத்து சோமாசி போல் மூடவும்.
பின்னர் இட்லிதட்டில் 7 நிமிடம் வைத்து எடுக்கவும்.

Wednesday, July 29, 2009

வெண்டைக்காய் மோர்க்குழம்பு

தேவையானவை:

வெண்டைக்காய் 10
தயிர் 2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிதளவு (ஆய்ந்தது)

அரைக்க:
துவரம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
துருவிய தேங்காய் 1/2 கப்
பச்சை மிளகாய் - 2

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

1.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2.இரண்டு கப் தயிரில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு கடைந்து கொள்ளவும்.அதில் உப்பு,மஞ்சள்பொடி,பெருங்காயத்தூள்
ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும்.
3.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணிரில் ஊறவைத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
4.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து
பின்னர் வெண்டைக்காயை வதக்கவும்.
5.கடைந்து வைத்துள்ள மோர் கலவையை அரைத்து வைத்துள்ள விழுதுடன் சேர்த்து வாணலியில் ஊற்றவும்.
சில நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும்.
கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.

Thursday, July 23, 2009

Strawberry அல்வா


தேவையானவை:

Strawberry 15
பால் 1கப்
சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
தேன் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:


1.Strawberry யை சிறு துண்டுகளாக நறுக்கி துருவிக்கொள்ளவும்.
2.துருவியதை பாலுடன் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் கழித்து சர்க்கரை,நெய்,தேன் விட்டு அடுப்பை slim ல் வைத்து
விடாமல் கிளறவேண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்தவுடன் இறக்கவும்

Friday, July 10, 2009

காசி அல்வா


தேவையானவை:
1.பூசணிக்காய் 1 (முற்றியது)
2.சர்க்கரை 1 1/2 கிலோ
3.தண்ணீர் 4 டம்ளர்
4.நெய் 1 ஸ்பூன்
5.திராட்சை,முந்திரி,பாதாம் சிறிதளவு
6.ஏலப்பொடி,ஜாதிக்காய் பொடி சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயை தேங்காய் துருவியில் துருவி நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து
வேகவைககவும்.பின்னர் வெள்ளைத்துணியில் வடிக்கட்டி பிழிந்தெடுக்கவேண்டும்.
2 கிலோ என்பது 1 1/2 கிலோவாக ஆகியிருக்கும்.

அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவேண்டும்.நன்றாக கிளறவேண்டும்.
சர்க்கரை பாகாக உருகி மொத்தமாக இறுகி அல்வா மாதிரி வரும்.

வாணலியில் நெய் வைத்து திராட்சை,உடைத்த முந்திரி,பாதாம் வறுத்து அல்வாவில்
போட்டு கடைசியாக ஏல்ப்பொடி,ஜாதிக்காய் பொடி சேர்க்கவேண்டும்.

Monday, July 6, 2009

Cranberry Rice


தேவையானவை:
                                            cranberry
பாசுமதி அரிசி 1 கப்
cranberry (dried) 1 கப்
வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
துருவிய காரட் 1/2 கப்
புளி எலுமிச்சை ஆளவு
------
இஞ்சி பூண்டு விழுது 1 டீஎஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
தனியா பொடி 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
---
பொடித்த வெல்லம் 1 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது
--
தாளிக்க:
ஏலக்காய் 1
கிராம்பு 2
லவங்கப்பட்டை ஒரு துண்டு
சோம்பு 1 டீஸ்பூன்
--
செய்முறை:

1.பாசுமதி அரிசியை 1 1/2 கப் தண்ணீரில் 40 நிமிடம் ஊறவைக்கவும்.
2.புளியை அரைகப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வைக்கவும்.
3.வாணலியை எடுத்துக்கொண்டு அதில் எண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
4.அதனுடன் cranberry சேர்த்து மிருதுவாக வரும்வரை வதக்கவும்.
5.பின்னர்
பட்டாணி,துருவிய காரட்,
புளித்தண்ணீர்,உப்பு
இஞ்சி பூண்டு விழுது,
காரப்பொடி,தனியா பொடி,சீரகப்பொடி
ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
6.அதில் பொடி செய்த வெல்லத்தை போட்டு நன்றாக கிளறவும்.
7.வதக்கிய கலவையை ஊறவைத்த அரிசியுடன் கலந்து அப்படியே Electric cooker ல் வைக்கவும்.
(cranberry ன் உவர்ப்பு தன்மையை குறைக்க புளித்தண்ணீரும் வெல்லமும் சேர்க்கப்படுகிறது,)

Tuesday, June 23, 2009

குணுக்கு


தேவையானவை:

பச்சரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
கடலைபருப்பு 1/2 கப்
சிவப்பு மிளகாய் 4
பச்சைமிளகாய் 4
வெங்காயம் 1
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை ஆய்ந்தது சிறிதளவு
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:

1.அரிசியையும் எல்லா பருப்புகளையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டவேண்டும்.அதனுடன் சிவப்பு மிளகாய்,
பச்சைமிளகாய்,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவேண்டும்.
2.அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலக்கவும்.
3.வாணலியில் எண்ணைய் வைத்து அரைத்தமாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தக்காளி sauce உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Wednesday, June 17, 2009

தக்காளி சாதம்




தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்
தக்காளி 5
பச்சைப்பட்டாணி 1/2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3
சாம்பார் பொடி 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் ,நெய் தேவையானது
-----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----

செய்முறை:

1.பாசுமதி அரிசியை ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் வீதம் 40 நிமிடம் ஊறவைத்து குக்கரில் வைக்கவும்.
பின்னர் சாதத்தை ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.பச்சைமிளகாயை குறுக்குவாட்டில் கீறவும்.
4.தக்காளியை வென்னீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து தோலுரித்து விழுதாக அரைக்கவும்.
5.முந்திரிபருப்பை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
6.வெந்தயத்தை எண்ணைய் விடாமல் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
----
1,வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய் வதக்கவும்.
2.வெங்காயம் பொன்னிறாமாக வதங்கியதும் தக்காளி விழுது,பட்டாணி,உப்பு,சாம்பார் பொடி,மசாலா பொடி ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும்.
3.ஆறவைத்துள்ள சாதத்தில் கலக்கவும்.
4.வறுத்த முந்திரிபருப்பை சேர்க்கவும்.
5.கடைசியாக பொடி பண்ணிய வெந்தயத்தை தூவவும்.

Monday, June 8, 2009

எலுமிச்சம்பழ சாதம்.




தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'

செய்முறை:

1.பாசுமதி அரிசியை 40 நிமிடம் (ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர்)ஊறவைக்கவும்.
அப்படியே Electric cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.

2.சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

3.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
4.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.

(சாதாரண பச்சைஅரிசியிலும் செய்யலாம்.பாசுமதி சற்று சுவையைக் கூட்டும்)

Tuesday, June 2, 2009

பாகற்காய்-காராமணி பிரட்டல்


தேவையானவை:

பாகற்காய் 2
காராமணி 1/2 கப்
வெங்காயம் 1
--
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
தனியாப்பொடி 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

தாளிக்க;-
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
--
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

பாகற்காயை தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
காராமணியை அரைமணி நேரம் தண்ணிரில் ஊறவைத்து மஞ்சள் பொடி போட்டு வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கவும்.
--
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து
நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் வேகவைத்த காராமணியை பாகற்காய் துண்டுகளோடு சேர்க்கவும்.
நன்றாக கிளறவும்.பாகற்காய் சிறிது வெந்ததும் உப்பு,காரப்பொடி,சீரகப்பொடி,தனியாபொடி,பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

Friday, May 29, 2009

உருளை குருமா


தேவையானவை:

உருளைக்கிழங்கு 2
பட்டாணி 1\2 கப்
வெங்காயம் 2
தேங்காய் பால் 1/2 கப்
----
மஞ்சள் பொடி 1/2 டீஸ்பூன்
தனியா பொடி 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி 1/2 டீஸ்பூன்
காரப்பொடி 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:
முந்திரி 4
பாதாம் 4
கசகசா 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
---
தாளிக்க:
கடுகு,கடலைபருப்பு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கசகசாவையும் பாதாமையும் தனித்தனியாக ஊறவைத்து அரைக்கக்கொடுத்துள்ள மற்ற பொருட்களுடன் சேர்த்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப்போட்டு
பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் உருளைக்கிழங்கு பட்டாணி சேர்த்து வதக்கவும்.
மஞ்சள்பொடி,தனியாபொடி,சீரகப்பொடி,காரப்பொடி ஆகிய நான்குடன் உப்பு,தண்ணீர் ,அரைத்த விழுது ஆகியவற்றை கலந்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கொதித்தவுடன் தேங்காய்பாலை விட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சப்பாத்தி, பூரி க்கு இது நல்ல சைட் டிஷ் ஆகும்.

Saturday, May 23, 2009

வறுத்த உப்புமா


தேவையானவை:

அரிசி மாவு 2 கப்
புளி எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் கால் கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
சிவப்பு மிளகாய் 2
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

செய்முறை:

புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி மாவுடன் உப்பு,மஞ்சள்தூள் கலந்து
வடிகட்டிய புளித்தண்ணீரை ஊற்றி பிசையவும். இட்லி மாவு பதத்திற்கு வரவேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,சிவப்பு மிளகாய்,பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அரிசிமாவு கலவையை ஊற்றி நன்றாக கிளறவும்.
அடுப்பை slim ல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக எண்ணைய் ஊற்றி கிளறவும்.
நன்றாக உதிரியாக வரும்.
இதை புளி உப்புமா என்றும் கூறுவார்கள்.

Saturday, April 25, 2009

கேஸர் பேடா


தேவையானவை: 
பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

செய்முறை:

ஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
விடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.
அடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.
பிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.

Thursday, April 9, 2009

பேபி கார்ன் லாலிபாப்


(மஞ்சுளா ரமேஷ் சினேகிதி & "Sevai Magik Automatic Sevai Cooker-போட்டியில் ( April 2009 ) பரிசு பெற்ற என் சமையல் குறிப்பு.)



தேவையானவை:

பேபிகார்ன் 10
எலுமிச்சம்பழம் 2
உருளைக்கிழங்கு 2
காரட் 2
பச்சமிளகாய் 2
வெங்காயம் 2
தக்காளி 3

புளி சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
சோளமாவு 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் க்ரெம்ஸ் அரை கப்
உப்பு,எண்ணைய் தேவையான அளவு.

செய்முறை:

1.பேபிகார்ன் மேலிருக்கும் தோலை நன்றாக உரித்துவிட்டு எலுமிச்சம்பழ சாறு பிழிந்து ஊறவைக்கவும்.
2.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
3.வெங்காயத்தை நறுக்கி எண்ணையில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.
4.காரட்டையும்,பச்சைமிளகாயையும் துருவிக்கொள்ளவும்.
5.கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கவும்.
6.தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து எண்ணையில் நன்றாக வதக்கி சிறிது புளித்தண்ணீர் விட்டு விழுதாய் ஆக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு தக்காளி விழுதைப்போட்டு அதனுடன்
a..மசித்த உருளைக்கிழங்கு
b.துருவிய காரட்,பச்சைமிளகாய்
c.நறுக்கிய கொத்தமல்லித்தழை
d.வெங்காய விழுது
e.இஞ்சி,பூண்டு விழுது,
f.தனியா தூள்,மிளகாய் தூள்.
தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய விழுதில் சிறிது சர்க்கரை,சோளமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த கலவையை ஊறவைத்த பேபிகார்ன் தலையில் (விரலுக்கு மருதாணியை குப்பி போல் இடுவது போல) இடவும்..பின் அவற்றை ப்ரெட் க்ரெம்ஸில் பிரட்டவும்.
ஒரு ஆப்பக்காரையை எடுத்து ...அதில் சிறிது எண்ணைய் விட்டு...அடுப்பை slim ல் வைத்து,பேபிகார்னின் லாலிபாப் பகுதியை பொரித்து எடுக்கவும்..ஒவ்வொன்றாக அப்படி செய்யவும்....

சற்றே உரைப்புடன் புளிப்பும் கலந்து ..இனிப்புடன் கூடிய இந்த பேபிகார்ன் லாலிபாப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Sunday, April 5, 2009

வெஜ் ஆம்லெட்



தேவையானவை:

கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/2 கப்
--
வெங்காயம் 2
காரட் 1
பீன்ஸ் 10
குடைமிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,பீன்ஸ்,குடைமிளகாய்,இஞ்சி,பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடியாக நுறுக்கிக்கொள்ளவும்.
-
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசி மாவு உப்பு மூன்றையும் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகள்,துருவிய காரட்,கொத்தமல்லித்தழை மூன்றையும் மாவில் கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, கல் சூடானதும் நடுவில் மாவை ஆம்லெட் size க்கு ஊற்றவும்.
இருபக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

Sunday, March 29, 2009

சேமியா புலாவ்


தேவையானவை:

சேமியா 2 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
தக்காளி 3
பீன்ஸ் 15
காரட் 3
பச்சை பட்டாணி 1/2 கப்
-----
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை .
----
எண்ணைய்,உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்
வெங்காயம்,பீன்ஸ்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் பச்சைமிளகாய்,துருவிய காரட்,பீன்ஸ்,பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும் காய்கறிகள்நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு
சேர்க்கவும்.தேவையான அளவு உப்புடன்,இஞ்சிபூண்டு விழுது,மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.
பொல பொல வென்று வந்ததும் இறக்கவும்.

Thursday, March 26, 2009

அஞ்சறைப்பெட்டி

1.கடுகு:

கடுகு தாளிக்காத சமையல் ருசியுடன் இருக்காது.

விடாமல் விக்கல் வந்தால்,சிறிது கடுகினை எடுத்து அரை கப் வென்னீரில் ஊறவைத்து காய்ச்சவேண்டும்.அதை வடிகட்டி தேன் இரண்டுஸ்பூன் கலந்து அருந்தினால் விக்கல் நின்றுவிடும்.

2.பெருங்காயம்:

வாயுத்தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கைகண்ட மருந்து.ஒரு கப் மோரில் சிறிது பெருங்காயத்தூளைக் கலந்து சாப்பிட சிறிது நேரத்தில் ஏப்பம் வரும்.காற்று வெளியேறி சரியாகிவிடும்.
கைக்குழந்தைகள் வயிற்று வலியால் அவதிபட்டால் துளி பெருங்காயத்தை உரசி வயிற்றில் தடவினால் குணமாகும்.
இளம் தாய்க்கு பெருங்காயம் ஒரு அருமையான மருந்து.தினம் சாப்பிட்டவுடன் சிட்டிகை பெருங்காயப்பொடியை தேனில் குழைத்து வெற்றிலையில் மடித்து சாப்பிட்டால் கருப்பையில் உள்ள கசடுகள் வெளியேறும்.

3.கசகசா:

தேங்காய்க்கு பதிலாக சமையலில் உபயோகப்படுத்தலாம்.
தூக்கமே வராமல் அவதிப்படுபவர்கள் கசகசாவை பாலில் ஊறவைத்து விழுதாய் அரைத்து அதை மறுபடி ஒரு கப் பாலில் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும்.
மாதக்கணக்கில் சாப்பிிடக்கூடாது. உடல் பருமனாகிவிடும்.

மார்பு சளிக்கு கசகசாவை இரண்டு கப் தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி கொடுத்தால் சளி அகலும்.

பொலிவான முகம் வேண்டுமா.கசகசாவை பாலில் ஊறவைத்து பேஸ்ட் போல அரைத்து முகம்,கைகளில் தடவி 15 நிமிடம் ஊறியபின் கழுவவேண்டும்..

Saturday, March 21, 2009

தவலை அடை



தேவையானவை:
பச்சரிசி 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்

சிவப்பு மிளகாய் 5
பச்சை மிளகாய் 5
இஞ்சி ஒரு துண்டு
தேங்காய் ஒரு பெரிய துண்டு
பெருங்காயத்தூள் ஒரு டீஸ்பூன்
கொத்தம்மல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு 1 டீஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது.

செய்முறை:

1.பச்சரிசி,துவரம்பருப்பு,கடலைபருப்பு மூன்றையும் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.சிவப்பு மிளகாய்,உப்பு,பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
2.உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு இரண்டையும் தனித்தனியாக ஊறவைக்கவும்.
உளுத்தம்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைக்கவும்.பயத்தம்பருப்பை வடிகட்டவும்.
3.தேங்காய்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடிப்பொடியாக நறுக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு மேலே குறிப்பிட்ட மூன்றையும் சேர்த்து கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணைய் வைத்து கடுகை போட்டு வெடிக்கவிட்டு அதில் சேர்க்கவும்.
கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி போடவும்.
தோசைக்கல்லை அடுப்பில்வைத்து கலந்த அடை மாவை சற்று கனமாக ஊற்றி நடுவில் இரண்டு ஓட்டை போட்டு எண்ணைய் விடவும்.
நன்றாக வெந்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, March 11, 2009

வெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )


பங்குனி மாதம் முதல்தேதி (14.3.2009) அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----

முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.
--

வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:
காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

Tuesday, March 3, 2009

பாகற்காய் பிட்லை

தேவையானவை:

மிதி பாகற்காய் 200 gm
கொண்டைக்கடலை 1/2 கப் (channa)
துவரம்பருப்பு 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
----
அரைக்க:

தனியா 2 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 10
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
பெருங்காயம் சிறிதளவு
---
தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல்,கறிவேப்பிலை
-----

செய்முறை:

1.துவரம்பருப்பை மஞ்சள்பொடி சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
2.மிதி பாகற்காயை காம்பை எடுத்துவிட்டு குறுக்காக வெட்டவும்.
3.கொண்டக்கடலையை முந்தினநாள் இரவே ஊறவைக்கவும்.
4.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணய் விட்டு வறுத்து நைசாக இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
----
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணைவிட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் குறுக்காக வெட்டிய பாகற்காய்,ஊறவைத்த கொண்டக்கடலை இரண்டையும் சேர்த்து வதக்கவும்.
மிதி பாகற்காய் நன்றாக வெந்ததும் வேகவைத்த துவரம்பருப்பு,அரைத்த விழுது,உப்பு மூன்றையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
புளியை கரைத்துவிடவும். நன்றாக கொதிவந்ததும் இறக்கவும்.

Monday, February 16, 2009

கத்திரிக்காய் காரக்குழம்பு


தேவையானவை:

சிறிய பிஞ்சு கத்திரிக்காய் 15
சின்ன வெங்காயம் 10
பூண்டு 8 பல்
தக்காளி 2
---
புளி ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
நல்லெண்ணைய் கால் கப்
---
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
---
அரைக்க:
தேங்காய் துருவல் அரை கப்
முந்திரி 8
----

செய்முறை:

சின்ன கத்திரிக்காயை குறுக்குவாட்டில் அரை அங்குலம் நறுக்கிக்கொள்ளவும்.(கத்திரிக்காய் முழு உருவில் இருக்க வேண்டும்)
சின்ன வெங்காயம்,பூண்டு இரண்டையும் உரித்துக்கொள்ளவும்.
தக்காளியை எண்ணைய் விட்டு பேஸ்டு போல வதக்கிக்கொள்ளவும்.
புளியை இரண்டுகப் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும்.
தேங்காய் துருவல்,முந்திரி இரண்டையும் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
-----
வாணலியில் நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
பின்னர் கத்திரிக்காய்,சின்ன வெங்காயம்,பூண்டு மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவும்.
செய்துவைத்த தக்காளி விழுதை போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து விடவும்.
பின்னர் மஞ்சள்தூள்,தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
எண்ணைய் பிரிந்து வந்ததும் அரைத்த விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்

Thursday, February 5, 2009

மருந்துக் குழம்பு

தேவையானவை:

சின்ன வெங்காயம் 1 கப்
பூண்டு 1/2 கப்
தக்காளி 2
புளி எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை,எண்ணைய்,உப்பு -தேவையான அளவு.
-----
அரைக்க:

மிளகு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
கண்ட திப்பிலி 2 குச்சி
சுக்கு ஒரு சிறிய துண்டு
வால்மிளகு அரை டீஸ்பூன்
அரிசி திப்பிலி 1 டீஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
தனியா 2 டீஸ்பூன்
கண்ட திப்பிலி,அரிசி திப்பிலி,வால்மிளகு எல்லாம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

தாளிக்க:
கடுகு,உளுந்து,வெந்தயம்,சீரகம்- சிறிதளவு.

-------

செய்முறை:

வெங்காயம்,பூண்டு இரண்டையும் உரித்து சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து நைசாக பொடி பண்ணவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுந்து,சீரகம்,வெந்தயம் தாளித்து பூண்டு,வெங்காயம் இரண்டையும் நன்றாக வதக்கவும்.
புளிக்கரைசலுடன் தக்காளி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை,உப்பு எல்லாவற்றையும் கலந்து வதக்கிய வெங்காயம்,பூண்டோடு சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் கொதித்தவுடன் அரைத்துவைத்துள்ள பொடியை தூவவும்.
நன்றாக கிளறி கொதித்தவுடன் இறக்கவும்.
----
மருத்துவ குணம் அடங்கிய இந்தக்குழம்பு அஜீர்ணத்தை நீக்கி உடலில் சுறுசுறுப்பை உண்டாக்கும்.

Wednesday, January 28, 2009

தானிய லட்டு

தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்
கோதுமை மாவு 1 கப்
சோயா மாவு 2 டேபிள்ஸ்பூன்
கேழ்வரகு மாவு 1/2 கப்
வேர்கடலை 1 கப்
நெய் 1/4 கப்
முந்திரி 10
ஏலப்பொடி 1 டீஸ்பூன்
வெல்லம் 3 கப் (பொடித்தது)

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு புழுங்கலரிசியை சிவக்க வறுத்து மிக்சியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.
சோயா,கோதுமை,கேழ்வரகு மாவுகளை தனித்தனியே வறுத்துக்கொள்ளவும்.
வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கி பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் எல்லா மாவுகளையும் போட்டு நன்றாக கலக்கவும்.
முந்திரியை துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து சேர்க்கவும்.ஏலப்பொடி சேர்த்து நெய்யை உருக்கி சேர்த்து கலக்கவும்.

வெல்லத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டி இளம் பாகானதும் (வெல்லம் நன்றாக கரைந்து சிறிது நேரம் கழித்து)
கலந்துவைத்துள்ள மாவில் கொட்டி கிளறி எடுத்து உருண்டைகளாக செய்கொள்ளவும்.
இந்த லட்டு புரோட்டின்,இரும்புசத்து ஆகிய சத்துக்கள் நிறைந்தது.

Wednesday, January 21, 2009

தந்தூரி ஆலு

தேவையானவை:

பொடி உருளைக்கிழங்கு 20
தயிர் 2 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சீரக தூள் 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,வெண்ணைய் தேவையானது

செய்முறை:

தயிரை மெல்லிய துணியில் ஊற்றி இரண்டு மணிநேரம் கழித்து வடிகட்டி நன்றாக பேஸ்ட் போல் பிசைந்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை ஆவியில் வேகவைத்து தோலை உரித்துவிட்டு எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் வெண்ணையை உருக்கி இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் தனியா தூள்,சீரக தூள்,மிளகாய் தூள்,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.அடுப்பை அணைத்துவிட்டு
தயிர் பேஸ்டை கலக்கவும். பொரித்த உருளைக்கிழங்குகளை இந்த தயிர் கலவையில் போட்டு பறிமாறவும்.

Tuesday, January 13, 2009

நூடுல்ஸ்

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பட்டாணி 1/4 கப்
காரட் 2
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மசாலா தூள் 1 டேபிள்ஸ்பூன்
புளி நெல்லிக்காய் அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க: கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கி பேஸ்ட் மாதிரி செய்துகொள்ளவும்.காரட்டை துருவிக்கொள்ளவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு பேஸ்டு மாதிரி செய்துகொள்ளவும்.இதுதான் தக்காளி ப்யூரி.
----
கோதுமைமாவை கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.பிசைந்த மாவை முறுக்கு அச்சில் பிழிந்து இட்லிதட்டில் வைத்து 10 நிமிடம் வேகவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து பின்னர் இஞ்சி பூண்டு விழுது,செய்துவைத்த வெங்காய பேஸ்டு,தக்காளி ப்யூரி மூன்றையும் போட்டு வதக்கவும்.
அதனுடன் பட்டாணி,துருவிய காரட்,மசாலா தூள்,உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.கடைசியில் வேகவைத்த நூடுல்ஸை போட்டு கிளறவும்.(ரொம்பவும் கிளறக்கூடாது,கொஞ்சம் பிரட்டினால் போதும்)

Monday, January 5, 2009

ஏழுகறி கூட்டு (திருவாதிரை கூட்டு)

இந்த ஏழுகறி கூட்டு திருவாதிரை அன்று களியுடன் சேர்த்து செய்யப்படுவது.

தேவையானவை:

பூசனிக்காய் ஒரு பத்தை
பரங்கிக்காய் ஒரு பத்தை
சர்க்கரை வள்ளிக்கிழங்கு 1
வாழைக்க்காய் 1
உருளைக்கிழங்கு 2
சேனைக்கிழங்கு (நறுக்கிய துண்டுகள்) 10
அவரைக்காய் 10

பச்சை மொச்சைப்பருப்பு 1/2 கப்
------
துவரம்பருப்பு 1 கப்
புளி பெரிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
-----
அரைக்க:

மிளகாய்வற்றல் 15
தனியா 1/4 கப்
கடலைபருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 கப்
பெருங்காயம் ஒரு துண்டு
------
தாளிக்க:
கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை எல்லாம் சிறிதளவு.

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேகவிடவும்.
அவரைக்காயை தவிர்த்து மற்ற காய்கறிகளை தோலை சீவிவிட்டு ஒரே அளவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அவரைக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணைய் விட்டு நன்றாக வறுத்து விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் விட்டு தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து நறுக்கிய காய்கறிகளை மொச்சையுடன் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
தாராளமாக எண்ணைய் விட்டு வதக்கவும்.காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் புளியை கெட்டியாக கரைத்து விடவும்.நன்றாக கொதித்தவுடன் வேகவைத்த
பருப்பையும்,அரைத்த விழுதையும் உப்புடன் சேர்க்கவும்.நன்றாக கொதி வந்தவுடன் இறக்கவும்.கடைசியில் கொத்தமல்லி சேர்க்கவும்.

Sunday, January 4, 2009

திருவாதிரை களி

ஆருத்ரா தரிசனம் 10-01-09 அன்று வருகிறது.அன்று செய்யப்படுவது இது.

தேவையானவை:

பச்சரிசி 2 கப்
பயத்தம்பருப்பு ஒரு பிடி
கடலைபருப்பு 1/2 கப்
தண்ணீர் 6 கப்

வெல்லம் பொடித்தது 2 1/2 கப்
துருவிய தேங்காய் 1 கப்
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
ஏலக்காய் 5

செய்முறை:

பச்சரிசி,பருப்புகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எண்ணய் விடாமல் சிவக்க வறுத்து மிக்ஸீயில் மூன்றையும் சேர்த்து கரகரப்பாக பொடி ரவையாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 6 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சிறிது கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தைப்போடவேண்டும்.வெல்லம் கரைந்தவுடன்
தேங்காய் துருவலை அப்படியே பச்சையாகப்போட்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் நெய் விடவேண்டும்.தள தள என்று கொதித்தவுடன் அடுப்பை slim ல் வைத்து அரைத்துவைத்த அரிசி பருப்புரவையை தூவிக்கொண்டே கிளறவும்.பின்னர் மூடிவைத்து அடிக்கடி அடிபிடிக்காமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் முந்திரிபருப்பை வறுத்துப்போட்டு மீதமுள்ள நெய்யையும் விட்டு ஏலக்காய் பொடியைியும் போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

இறக்கிய பின் விட்டு விட்டு இரண்டு தடவை கிளறினால் "பொல பொல" என்று உதிர்ந்து வரும்.

அன்று, இதனுடன் குறைந்தது 7 காய்கள் போட்டு கூட்டு செய்வதுண்டு.

Friday, January 2, 2009

பலாக்கொட்டை பகோடா

தேவையானவை:

பலாக்கொட்டை 20
வெங்காயம் 3
பச்சைமிளகாய் 6
பூண்டூ 4 பல்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

பலாக்கொட்டைகளை நன்றாகக்கழுவி குக்கரில் போட்டு வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்தவுடன் தோலை உரித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,தேவையான உப்பு எல்லாவற்றையும் மிக்ஸீயில் போட்டு வடைக்கு அரைப்பதுபோல கெட்டியாக அரைக்கவேண்டும்.அத்துடன் நெய் ,கறிவெப்பிலைசேர்த்து வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பிறகு சாதாரண பக்கோடாவிற்கு போடுவதுபோல் உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவேண்டும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...