Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Saturday, December 29, 2012
காலிஃப்ளவர் ஃப்ரை
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
-----------------------------
தேவையானவை:
காலிஃப்ளவர் பூக்கள் 2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
--------
தக்காளி பேஸ்டு 2 மேசைக்கரண்டி
இஞ்சிபூண்டு விழுது 1 தேக்கரண்டி
மசாலா தூள் 1 தேக்கரண்டி
காரப்பொடி 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து நறுக்கிய காலிஃப்ளவரை மஞ்சள் தூள் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கவேண்டும்.
பாதி வெந்ததும் அதனை எடுத்து ஒரு தட்டில் பரவலாக போடவேண்டும்.
ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தக்காளி பேஸ்டு,இஞ்சிபூண்டு விழுது,மசாலா தூள்,காரப்பொடி,உப்பு எல்லாவற்றையும் எண்ணெயில் கலந்து தட்டில் பரவலாக போட்டுள்ள காலிஃப்ளவரில் பிசற வேண்டும்.
இதனை மீண்டும் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு நன்றாக பிரட்டினால் காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி.
Thursday, December 27, 2012
தக்காளி ரசம்/ சூப்
தேவையானவை:
தக்காளி 3
பூண்டு 2 பல்
ரசப்பொடி 1 தேக்கரண்டி
மிளகு தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
நெய் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மூன்று தக்காளிகளும் மூழ்கும் வரை தண்ணீர் வைத்து ஐந்து நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.ஐந்து நிமிடம் கழித்து தக்காளிகளை வெளியே எடுத்து தோலுரித்து மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.
-------
அரைத்ததை ஒரு பாத்திரத்தில் வைத்து அதனுடன் நசுக்கிய பூண்டு,ரசப்பொடி,மிளகு தூள்,தேவையான உப்பும் சேர்த்து
கொதிக்கவேண்டும்.
ரசம் கொதித்த பின் நெய்யில் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்.
இந்த ரசம் செய்வது மிகவும் எளிது.
ரசமாகவும் உபயோகப்படுத்தலாம் அல்லது பிரெட் துண்டுகளை வறுத்துப் போட்டு சூப் ஆகவும் உபயோகப்படுத்தலாம்.
Friday, December 21, 2012
மெக்சிகன் ரைஸ்
தேவையானவை:
பாசுமதி அரிசி 2 கப்
--------
குடமிளகாய் 3
(பச்சை,மஞ்சள் சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
Spring onion 1 கட்டு
வெங்காயம் 2
Jalapeno slices 5
--------
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
தக்காளி பேஸ்டு 1/2 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
------
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:
பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
spring onion ஐ பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Jalapeno slices ஐ அப்படியே போடலாம்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடமிளகாய்,spring onio,jalapeno slices மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,சீரகம்,தக்காளி பேஸ்டு,காரப்பொடி எல்லாம் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல்
வைக்கலாம்.
Tuesday, December 18, 2012
பூசணி கூட்டு
தேவையானவை:
பூசணி துண்டுகள் 2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
அடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.
கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும் பூசணித்துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.
பூசணிக்கூட்டை சாதத்தோடு சேர்ந்து சாப்பிடலாம்.சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.
Tuesday, December 11, 2012
இஞ்சி பாத்
தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 3
கொத்தமல்லி 1 கப் (ஆய்ந்தது)
புளி ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
நிலக்கடலை 10
நெய் 1 தேக்கரண்டி
-----
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
------
செய்முறை:
பாசுமதி அரிசியை இரண்டு கப் தண்ணீரில் இருபது நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் அப்படியே ele cooker ல் வைத்தால் உதிரியாக வரும்.
====
இஞ்சியை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இதனுடன் பச்சைமிளகாய்,புளி,கொத்தமல்லி மூன்றையும் நல்லெண்ணையில் வதக்கவேண்டும்.
வதக்கியதை உப்புடன் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை சாதத்துடன் கலக்கவேண்டும்.
கடைசியில் நிலக்கடலையை நெய்யில் வறுத்து போடவேண்டும்.
Sunday, December 9, 2012
THAI GREEN BEANS
தேவையானவை:
பீன்ஸ் 2 கப் (நீட்டவாக்கில் நறுக்கியது)
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
Spring Onion 1/2 கப்
சோயா சாஸ் 2 மேசைக்கரண்டி
வினிகர் 1 மேசைக்கரண்டி
Red Chilli Pste 1 மேசைக்கரண்டி
வெள்ளை எள் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
நல்லெண்ணெய் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை:
பீன்ஸை நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.(ஒரு பீன்ஸை இரண்டாக நறுக்கவும்)
,இஞ்சி,பூண்டு பொடியாக நறுக்கவும்.
Spring Onion ல் வேர் பாகத்தை மட்டும் எடுத்து பொடியாக நறுக்கவும்.
எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும்.
------
வாணலியில் நல்லெண்ணைய் வைத்து பீன்ஸை வதக்கவும்.(அதிகமாக வதக்கவேண்டாம்-crunchy ஆக இருக்கவேண்டும்)
தனியே எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயில் பொடியாக நறுக்கிய இஞ்சி,பூண்டு,,spring onion,கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் சோயா சாஸ்,வினிகர்,red chilli paste (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) சேர்த்து வதக்கவும்.உப்பு சேர்க்கவேண்டாம்.வினிகர்,சோயா சாஸ் இரண்டிலும் உள்ள உப்பு போதும்.
வதக்கிய பீன்ஸை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும்.
கடைசியில் எள்ளை தூவவேண்டும்.
Wednesday, December 5, 2012
தேங்காய்பால் குருமா
,
தேவையானவை:
தேங்காய்பால் 1 கப்
பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
சின்ன வெங்காயம் 10
உப்பு,எண்ணைய் தேவையானது
--
அரைக்க:
தேங்காய் துருவல் 1/2 கப்
முந்திரிபருப்பு 5
பச்சைமிளகாய் 2
கசகசா 1 டீஸ்பூன்
---
தாளிக்க்:
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை சிறு துண்டு
செய்முறை:
பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டு இரண்டாக நறுக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
---
வாணலியில் எண்ணைய் வைத்து சோம்பு,பட்டை தாளித்து வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,பட்டாணி நான்கையும் சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் நன்கு வெந்ததும்
தேவையான உப்பும்,சிறிது தண்ணீருடன் அரைத்த விழுதைக் கலந்து கொதிக்கவிடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து சில நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
தேங்காய்பால் குருமா இட்லி,தோசை,பூரி,சப்பாத்தி எல்லாவற்றிற்கும் சிறந்த sidedish.
Saturday, December 1, 2012
" பெப்பெர் " பிரியாணி
தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
குடமிளகாய் 1
காரட் 2
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
தக்காளி 2
நிலக்கடலை 10
முந்திரி பருப்பு 10
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
நெய் 1 மேசைக்கரண்டி
---------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
மிளகு 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
--------
தாளிக்க:
சோம்பு 1/2 தேக்கரண்டி
கிராம்பு 2
ஏலக்காய் 2
-----
செய்முறை:
பாசுமதி அரிசியை 2 கப் தண்ணீரில் ஊறவைக்கவும்.
குடமிளகாய்,காரட்,உருளைக்கிழங்கு,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
முந்திரிபருப்பு,நிலக்கடலை இரண்டையும் நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
----------
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து முதலில் தக்காளியை நன்றாக வதக்கி பின்னர் மற்ற காய்கறிகளை மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.அதனுடன் தேவையான உப்பும்,மிளகாய் தூளும்,அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
வதக்கிய காய்கறிகளோடு ஊறவைத்த அரிசியை சேர்த்து அப்படியே ele cooker ல் வைக்கலாம்.
கடைசியில் வறுத்த முந்திரி,வேர்க்கடலை சேர்க்கவேண்டும்.
Tuesday, November 27, 2012
வாழைத்தண்டு மோர்கூட்டு
வாழைத்தண்டு 1
கெட்டி மோர் 1 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
----
அரைக்க:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்
சேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
கடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.
தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
Tuesday, November 20, 2012
புரோக்கோலி (Broccoli) உசிலி
தேவையானவை: புரோக்கோலி
புரோக்கோலி 2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் 1 துண்டு
=======
உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை மூன்றும்சிறிதளவு
செய்முறை:
புரோக்கோலியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.அல்லது Blender ல் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.துவரம்
பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்
ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு .கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய புரோக்கொலியை
சேர்த்து வதக்கவும்..உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.அதிகம் வதக்க வேண்டாம்.புரோக்கோலி crunchy ஆக இருந்தால் தான் சுவையாக இருக்கும்.
பின்னர் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.கடைசியில் தேங்காய் துருவலை சிறிது வறுத்து சேர்க்கவேண்டும்.
Friday, November 16, 2012
கேப்சிகம் கோசுமல்லி
தேவையானவை:
குடமிளகாய் 2
பயத்தம்பருப்பு 1/4 கப்
தேங்காய் துருவல் 1/4 கப்
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது
செய்முறை:
குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து வதக்கவும்.
ஊறவைத்த பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் நன்கு வதங்கிய பின் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை தூவி இறக்கவும்.
Tuesday, November 6, 2012
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
தேவையானவை:
சின்ன கத்திரிக்காய் 12
புளி எலுமிச்சைஅளவு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-------
வறுத்து அரைக்க தேவையானது:
சின்ன வெங்காயம் 10
வற்றல் மிளகாய் 7
துருவிய தேங்காய் 1/2 கப்
வேர்க்கடலை 10
சீரகம் 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கசகசா 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
உப்பு சிறிதளவு
--------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
சின்ன கத்திரிக்காயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்
குறுக்கே வெட்டிய கத்திரிக்காய்
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் வெங்காயத்தை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.
கசகசாவை தனியே வெறும் வாணலியில் வறுக்கவும்.
மற்றவற்றை எண்ணெயில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதை குறுக்கே வெட்டிய ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் அடைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் தடவவும்.
அப்படியே வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து வதக்கலாம்.
இல்லாவிடில் Oven ஐ Preheat செய்து விட்டு 25 நிமிடம் வைக்கவும்.(425deg.-F)(இந்த முறையில் செய்தால் கத்திரிக்காய் மொறு மொறு என்று இருக்கும்.) இதனை தனியே எடுத்து வைக்கவும்.
Oven ல் வைத்து எடுத்த கத்திரிக்காய்
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
அடுப்பில் நல்லெண்ணய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து புளித்தண்ணீரில் மீதியுள்ள அரைத்த விழுதை கரைத்து
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.மஞ்சள்தூள்,சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
Wednesday, October 31, 2012
வேர்க்கடலை சுண்டல்
தேவையானவை:
வேர்க்கடலை 2 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:
வேர்க்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும்.(மூன்று விசில்)
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றை தாளித்து குக்கரிலிருந்து வேர்க்கடலையை வடிகட்டி இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும்.
Wednesday, October 24, 2012
செவியன் (SEVIYAN)
சேமியா வைக்கொண்டு செய்யப்படுவது செவியன்.
இஸ்லாமிய சகோதரர்கள்[ சகோதரிகளால் "ஈத் " பண்டிகைக்கு செய்யப்படும் முக்கியமான் இனிப்புகளில் ஒன்று.
இந்த இனிப்பின் தனித்துவம் என்னவென்றால்,இந்துக்களாலும் "சேமியா பாயசம் " என்ற பெயரில் விசேஷங்களுக்கு செய்யப்படுகிறது.
தவிர்த்து,இது நமது அன்றாட சமையலில் ஒரு DESSERT ஆகவும் செயல்படுகிறது.
தேவையானவை:
சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
செய்முறை:
சேமியா 1 கப்
சர்க்கரை 1 1/2 கப்
பால் 3 கப்
முந்திரிபருப்பு 5
உலர்ந்த திராட்சை 5
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 டீஸ்பூன்
செய்முறை:
சேமியாவை நெய்யில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
முந்திரிபருப்பையும்,திராட்சையையும் பொன்னிறமாக நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை கரைந்ததும் பாலை ஊற்றி சிறிது கொதிக்கவிடவும்.
அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பால்,சர்க்கரை,சேமியா மூன்றும் ஒன்றாக சேர்ந்து வரும்போது ஏலக்காய் தூள் சேர்த்து
அடுப்பை அணைக்கவும்.
கடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவும்.
இந்தப் பதிவை பதிவுலக சிநேகிதி Asiya Omar அவர்களின் "My First Event-Feast of Sacrifice" க்கு அனுப்புகிறேன்.
Monday, October 22, 2012
பனானா -டேட்ஸ்..ஸ்மூத்தி
தேவையானவை:
வாழைப்பழம் 2
பேரீச்சம்பழம் 4
பால் 1 கப்
சர்க்கரை 1 மேசைக்கரண்டி
ஐஸ் கட்டிகள் சிறிதளவு
-------
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் blender ல் போடு அரைக்கவும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
Monday, October 15, 2012
CABBAGE பொரியல்
தேவையானவை:
முட்டைகோஸ் 1
பட்டாணி 1 கப்
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
*கறிப்பொடி 2 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் 1
உப்பு எண்ணெய் தேவையானது
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
முட்டைகோஸை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பச்சைமிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.
------
முட்டைகோஸை சிறிது தண்ணீர். மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து நன்கு கிளறி வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் பச்சைமிளகாய்,பாட்டாணி சேர்த்து வதக்கி அதனுடன் வடிகட்டிய முட்டைகோஸை சேர்த்து வதக்கவும்.
பின்னர் கறிப்பொடி,மசாலா தூள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
கடைசியில் எலுமிச்சம் பழ சாறை பிழையவும்.
*
http://annaimira.blogspot.com/2010/10/blog-post.html
Thursday, October 11, 2012
நவராத்திரியும் நைவேத்தியமும்
நவராத்திரி புரட்டாசி மாசம் மாளய அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் பூஜிக்கும் வழக்கம் உண்டு.தேவியின் பெருமைகளை ஒன்பது நாட்களும் சொல்லி வழிபடுவார்கள்.ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நைவேத்தியம் செய்வார்கள்.ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு நைவேத்தியம் விசேஷம்.அதைச்சொல்வதே இந்த பதிவு.
-----------
ஞாயிற்றுக்கிழமை: கோதுமை
கோதுமை அப்பம்:
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து 3/4 கப் பொடித்த வெல்லத்தை கரைத்துக்கொள்ளவும்.
அதில் கோதுமை மாவு 1 கப்,ரவை 1 மேசைக்கரண்டி,மைதா 1 மேசைக்கரண்டி சேர்த்து கரைக்கவும்.
ஏலப்பொடி,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கரைத்து சிறு சிறு அப்பங்களாக எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.
----------------------------
திங்கட்கிழமை: பாசிப்பயறு (பயத்தம்பருப்பு)
பாசிப்பயறு சுண்டல்:
ஒரு கப் பாசிப்பயற்றை கொஞ்சம் தண்ணீர் விட்டு வேகவைக்கவேண்டும்.நன்றாக வெந்ததும் வடிகட்டவேண்டும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணைய் வைத்து கடுகு பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய பாசிப்பயற்றை தேவையான உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல்,இஞ்சி துருவல்,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவேண்டும்.
----------------------------
செவ்வாய் கிழமை: துவரம்பருப்பு:
துவரம்பருப்பு குணுக்கு:
துவரம்பருப்பு 1 கப்,கடலைபருப்பு 1/4 கப்,உளுத்தம்பருப்பு 1/4 கப்,புழுங்கலரிசி 1 மேசைக்கரண்டி .மிளகாய் வற்றல் 4, இவற்றை 2 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
இதனுடன் தேவையான உப்பு,சிறிது பெருங்காயம் சேர்த்து அரைக்கவேண்டும்.அரைத்த மாவில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கலந்து கறிவேப்பிலை சேர்த்து
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவேண்டும்.
-----------------------
புதன் கிழமை: காராமணி
காராமணி சுண்டல்
ஒரு கப் காராமணியை மூன்று மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை,சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள் தாளித்து வடிகட்டிய காராமணியை சேர்த்து வதக்கவேண்டும்.
சீரகம்,மிளகு,தனியா ஒவ்வொன்றும் ஒரு தேக்கரண்டி எடுத்து வறுத்து பொடி பண்ணி சேர்க்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
-------------------------
வியாழக்கிழமை: கொண்டக்கடலை :
கொண்டக்கடலை சுண்டல்:
ஒரு கப் கொண்டக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவேண்டும்.
மறு நாள் குக்கரில் உப்பு சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,இரண்டு வற்றல் மிளகாய் தாளித்து வடிகட்டிய கொண்டக்கடலையை சேர்த்து வதக்கவும்.
தேங்காயை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி சேர்க்கலாம்.
வேண்டுமென்றால் இஞ்சியைத் துருவி போடலாம்.
-------------------------
வெள்ளிக்கிழமை: புட்டு:
பச்சரிசியை மிஷினில் நைசாக மாவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.வாணலியில் இந்த மாவை எண்ணைய் விடாமல் சிவப்பாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
ஆறிய பின் மாவை சலித்து ஒரு பெரிய தட்டில் கொட்டி மிதமான வென்னீர் விட்டு பிசையவேண்டும். (உதிர்த்தால் உதிராக இருக்கும்படி பிசையவேண்டும்)
இந்த மாவை இட்லி தட்டில் ஆவியில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் சிறிது விட்டு (ஒரு கப் மாவிற்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) துருவிய வெல்லம் சேர்த்து உருண்டைப்பாகு வந்தவுடன்
ஆவியில் வைத்த மாவை சேர்த்து கிளறவும்.
வாணலியில் 1/4 கப் நெய் வைத்து காய்ந்ததும் புட்டு மாவுடன் ஏலப்பொடி சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.
தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும்.
முந்திரிபருப்பை வறுத்துப் போடவும்.
---------------------
சனிக்கிழமை: எள்
எள் பர்ஃபி:
எள்ளை நீர் விட்டு நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வெறும் வாணலியில் போட்டு வெடிக்கும் வரை வறுக்கவேண்டும்.
வறுத்த எள் ஒரு கப், வறுத்த வேர்க்கடலை ஒரு கப் இரண்டையும் 'நற நற' என்று பொடி பண்ண வேண்டும்.
வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து (ஒரு கப் பொடி பண்ணிய கலவைக்கு ஒரு கப் பொடித்த வெல்லம்) பொடித்த வெல்லம் ஏலத்தூள் சேர்த்து
கம்பிப்பாகு வந்ததும் பொடி பண்ணியதைப் போட்டு நன்கு கிளறி ஒரு தட்டில் நெய்யை பரவலாகத் தடவி கிளறியதைக் கொட்டி வில்லைகளாக போடலாம்.
Monday, October 8, 2012
காலிஃப்ளவர் மசாலா
தேவையானவை:
காலிஃப்ளவர் 1
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மசாலா தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
---------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் காலிஃப்ளவரை வைத்து அதன் மேல் வென்னீர் இரண்டு கப் காலிஃப்ளவர் மூழ்கும் வரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து
பத்து நிமிடம் மூடி வைக்கவேண்டும். பின்னர் தனித்தனி பூக்களாக எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க வேண்டியவைகளை எண்ணெயில் தாளிக்கவேண்டும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதனுடன் தக்காளியையும் பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவேண்டும்.
அதனுடன் காலிஃப்ளவரை மஞ்சள் தூளுடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
காலிஃப்ளவர் வெந்ததும் உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள்,சாம்பார் பொடி சேர்த்து வதக்கவேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கியபின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.
Thursday, October 4, 2012
காரட்..புதினா சூப்
தேவையானவை:
காரட் 5
பால் 1 கப்
புதினா 10 இலைகள்
மிளகு தூள் 1 தேக்கரண்டி
சர்க்கரை 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
--------
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொதிக்கவிடவும்.
பாலை ஒரு பாத்திரதில் வைத்து பொங்கும் நிலை வருவதற்கு முன்பு அதில் புதினா இலைகளை சேர்த்து மூடி வைக்கவும்.
15 நிமிடம் கழித்து புதினா இலைகளை ஒரு கரண்டியால் எடுத்து விடவும்.
வேகவைத்த காரட்டை தண்ணீருடன்,புதினா சேர்த்த பால்,சிறிது உப்பு எல்லாவற்றையும் ஒரு blender ல் போட்டு அரைக்கவும்.
வேண்டுமென்றால் சிறிது பால் சேர்த்துக்கொள்ளலாம்.
Blender ல் இருந்து எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து மேலே மிளகு தூள் தூவவும்.
Friday, September 28, 2012
QUINOA (திணை) உப்புமா
தேவையானவை: திணை
திணை 1 கப்
வெங்காயம் 1
காரட் 2
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சைமிளகாய் 2
மஞ்ச்ள்பொடி 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
-------
செய்முறை:
திணையை எண்ணெய் விடாமல் வாணலியில் 5 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் திணையை சேர்க்கவும்.
சிறிது உப்பு சேர்த்து திணை வெந்ததும் ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்,
கடாயை அடுப்பில் வைத்து
சிறிது எண்ணெயில் கடுகு சீரகம் பொரிக்கவேண்டும்.
அதனுடன் மஞ்சள்பொடி,இஞ்சி பூண்டு விழுது,குறுக்கே வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவேண்டும்.
பட்டாணி,பொடியாக நறுக்கிய காரட்,உருளைக்கிழங்கு தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவேண்டும்.
காய்கறிகள் எல்லாம் நன்கு வெந்தவுடன் வேகவைத்த திணையை சேர்க்கவேண்டும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து உப்புமாவை நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கழித்து அணைக்கவேண்டும்.
எலுமிச்சம்பழச் சாறை சற்று ஆறியதும் பிழயவும்.
கொத்தமல்லிதழையை மேலே அலங்கரிக்கவும்.
Monday, September 24, 2012
பார்லி கிச்சடி
தேவையானவை:
பார்லி 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்கம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:
பார்லியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் தனித்தனியே பார்லியையும் பயத்தம்பருப்பையும் வேகவைக்கவேண்டும்.(2 விசில்)
அடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் பெருங்காயத்தை பொரித்து குறுக்கே வெட்டிய பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த பார்லியையும் பயத்தம்பருப்பையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
கிச்சடி கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவ பார்லி கிச்சடி ரெடி.
Thursday, September 20, 2012
கொத்தமல்லி சட்னி
தேவையானவை:
கொத்தமல்லி 1 கட்டு
பச்சைமிளகாய் 2
பெருங்காயம் 1 சிறிய துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி
------
செய்முறை:
கொத்தமல்லியை நன்கு ஆய்ந்து தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.
பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
மிக்சியில் ஆய்ந்த கொத்தமல்லி,பச்சைமிளகாய்,பெருங்காயம்,புளி தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.
பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
இட்லி,தோசைக்கு ஏற்றது.
Thursday, September 13, 2012
டால் மாக்கனி
தேவையானவை:
கறுப்பு உளுந்து 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
----
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
----
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்
வெங்காய தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
---
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--
செய்முறை:
கருப்பு உளுந்தை குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
--
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு முதலில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளியை சேர்த்து வதக்கவும்.
குக்கரில் இருந்து கறுப்பு உளுந்தை எடுத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வெங்காயம் தக்காளியுடன் கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் மேலே குறிப்பிட்ட காரப்பொடி,தனியாதூள்.சீரகதூள்,ஆம்சூர் பவுடர்,வெங்காய தூள் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் பாலை விட்டு இறக்கவும்.
இறக்கிய பின் வெண்ணைய் போடவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி,பூரி,நான்,புல்கா ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற side dish.
கறுப்பு உளுந்து 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
----
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
----
காரப்பொடி 1 டீஸ்பூன்
தனியாத்தூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் 1 டீஸ்பூன்
வெங்காய தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
---
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
பால் 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
--
செய்முறை:
கருப்பு உளுந்தை குக்கரில் வைத்து வேகவைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
--
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணைய் விட்டு முதலில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளியை சேர்த்து வதக்கவும்.
குக்கரில் இருந்து கறுப்பு உளுந்தை எடுத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வெங்காயம் தக்காளியுடன் கலக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் மேலே குறிப்பிட்ட காரப்பொடி,தனியாதூள்.சீரகதூள்,ஆம்சூர் பவுடர்,வெங்காய தூள் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
கடைசியில் பாலை விட்டு இறக்கவும்.
இறக்கிய பின் வெண்ணைய் போடவும்.
கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
இது சப்பாத்தி,பூரி,நான்,புல்கா ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற side dish.
Sunday, September 9, 2012
காலிஃபிளவர் குருமா
தேவையானவை:
காலிஃபிளவர் 1 (சிறியது)
பட்டாணி 1/2 கப்
வெங்காயம் 2
உருளைக்கிழங்கு 2
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-----
அரைக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 1
கசகசா 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
பூண்டு 3 பல்
துருவிய தேங்காய் 1/4 கப்
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
-------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வெந்நீர் இரண்டு கப் சிறிது உப்பு சேர்த்து காலிஃபிளவர் மூழ்கும் வரை வைக்கவேண்டும்.
பத்து நிமிடம் கழித்து எடுத்து காலிஃபிளவரை சிறு சிறு பூக்களாக எடுக்கவேண்டும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து ஒன்றிரண்டாக மசித்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயத்தை நீட்ட வாக்கில் நறுக்கிகொள்ளவேண்டும
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
-----
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,பட்டாணி இரண்டையும் மஞ்சள்தூளுடன் வதக்கவேண்டும்.
அதனுடன் காலிஃபிளவரை சிறிது உப்புடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
காலிஃபிளவர் வெந்ததும் மிளகாய் தூள்,மசித்த உருளைக்கிழங்கு,அரைத்த விழுது சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.
காலிஃபிளவர் குருமா சப்பாத்தி,பூரிக்கு ஏற்றது.
Monday, September 3, 2012
பருப்பு உருண்டைக் குழம்பு
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைபருப்பு 1/2 கப்
புளி ஒரு எலுமிச்சை அளவு
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
தக்காளி 2
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
சோம்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்ற்ல் 2
பச்சைமிளகாய் 2
தனியா தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 1
பூண்டு 2 பல்
------
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
கசகசா 1/2 தேக்கரண்டி
பருப்பு உருண்டைகளை ஆவியில் வைத்து எடுத்தது
செய்முறை:
துவரம்பருப்பையும் கடலைப்பருப்பையும் அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.இதனுடன் அரைக்கக்கொடுத்துள்ள சோம்பு,மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்.
தனியாதூள்,வெங்காயம் (1) பூண்டு (2 ) பல் எல்லாவற்றையும் உப்புடன் நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காய் துருவல், கசகசா இரண்டையும் தனியே நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் துவரம்பருப்பு,கடலைபருப்பு விழுது,கறிவேப்பிலை சேர்த்து உருண்டைகளாக்கி குக்கரில் ஆவியில் வேகவைத்து எடுக்கவேண்டும்
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் மீதமுள்ள வெங்காயம்,பூண்டு,தக்காளி மூன்றையும் பொடியாக நறுக்கி மஞ்சள். தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
தேங்காய் துருவல்,கசகசா விழுதினை சேர்க்க வேண்டும்.
கடைசியில் வேகவைத்த பருப்பு உருண்டைகளை சேர்த்து சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
(பூண்டு சேர்க்காமலும் செய்யலாம்.)
Tuesday, August 28, 2012
பால் பாயசம் (எளிய முறை)
தேவையானவை:
பால் 5 கப்
சர்க்கரை 1 கப்
அரிசி 2 தேக்கரண்டி
ஏலக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
ஜாதிக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 5
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் அரிசியையும் சேர்த்து வைக்கவும்.
' weight ' போடவும். சிறிது நேரத்தில் ' weight ' போடும் இடத்திலிருந்து சிறிது சிறிதாக தண்ணீர் வர ஆரம்பித்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்துவிட்டு
சரியாக 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து சர்க்கரை சேர்க்கவும். (மீண்டும் கொதிக்க வைக்கவேண்டாம்)
ஏலக்காய்,ஜாதிக்காய் பவுடர் தூவி நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட சுவையான பால் பாயசம் ரெடி.
Saturday, August 25, 2012
தக்காளி சூப்
தேவையானவை:
பழுத்த தக்காளி 6
கேரட் 2
முட்டைகோஸ் 1/2 கப் துருவியது
பெரிய வெங்காயம் 1
பூண்டு 2 பல்
கார்ன் மாவு 1/4 கப்
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
துருவிய சீஸ் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
பிரிஞ்சி இலை 1
கிராம்பு 2
------
செய்முறை:
தக்காளி,வெங்காயம்,கேரட்,பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிரிஞ்சி இலை,கிராம்பு தாளித்து அதனுடன் நறுக்கிய தக்காளி,கேரட்,முட்டைகோஸ்,வெங்காயம்,பூண்டு
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.கார்ன் மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதனுடன் கலந்து கொதிக்கவைடவும்.
மேலும் இரண்டு கப் தண்ணீருடன் தேவையான உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவிடவும்.
ஆறியதும் மிக்சியில் அரைத்து வடிகட்டினால்...சுவையான தக்காளி சூ[ப் ரெடி.
பரிமாறும் சமயம் அதன் மேலாக மிளகு தூள், வெண்ணெய்,,துருவிய சீஸ்,கொத்தமல்லித்தழை தூவி கொடுக்கலாம்.
Monday, August 20, 2012
பச்சை பட்டாணி புலவ்
தேவையானவை:
பாசுமதி அரிசி 1 கப்
பச்சை பட்டாணி 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
தேங்காய் பால் 1 1/2 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
ஏலக்காய் 2
கிராம்பு 2
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி அரை கப் தண்ணீரில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியி;ல் சிறிது எண்ணெய் வைத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிகொள்ளவும்.
------
வாணலியில் நெய் வைத்து பட்டை ஏலக்காய்,கிராம்பு தாளித்து அதில் பாசுமதி அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் வைத்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி தக்காளி விழுதையும்,இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவேண்டும்..
பின்னர் பச்சை பட்டாணி,தேவையான உப்பு,தேங்காய் பால் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.
இதனுடன் வறுத்த பாசுமதி அரிசியை கலந்து அப்படியே ele.cooker ல் வைக்கலாம்.
குக்கரில் இருந்து எடுத்து அதில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி தூவவேண்டும்.
Thursday, August 9, 2012
கடப்பா
தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 2
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் 1/4 கப்
பூண்டு 4 பல்
கசகசா 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
------
செய்முறை:
பயத்தம்பருப்பை இரண்டு கப் தண்ணீருடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். (நான்கு விசில்)
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.
வெங்காயத்தை நீட்ட வாக்கில் நறுக்கிகொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வேகவைத்த பயத்தம்பருப்பு,தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் மசித்த உருளைக்கிழங்கு,அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி மீண்டும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
அடுப்பிலிருந்து இறக்கிய பின் எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
இந்த ' கடப்பா ' தோசை,இட்லி,பூரி ஆகியவற்றிற்கு சிறந்த side dish.
Tuesday, July 31, 2012
எள்ளுப் பொடி
தேவையானவை:
கறுப்பு எள் 1கப்
மிளகாய் வற்றல் 5
உளுத்தம்பருப்பு 2 மேசைக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
எள்ளை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து வறுக்கவேண்டும்.
நன்றாக வெடிக்கும். வெடிப்பது நின்றவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு கடலைபருப்பு ,பெருங்காயத் துண்டு நான்கையும் எண்ணையில் வறுக்கவேண்டும்.
கறிவேப்பிலையையும் அதே வாணலியில் லேசாக பிரட்டவேண்டும்.
மிக்சியில் முதலில் வறுத்த மிளகாய் வற்றல்.உளுத்தம்பருப்பு,பெருங்காயத்துண்டு கடலைபருப்பு,கறிவேப்பிலை, பொடிசெய்துவிட்டு
அதனுடன் வறுத்த எள்ளு,தேவையான உப்பு சேர்த்து பொடி செய்யவேண்டும்.
இந்த எள்ளுபொடியை சாதத்துடன் சிறிது நல்லெண்ணய் சேர்த்து பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.
Sunday, July 29, 2012
ராகி சத்து மாவு
தேவையானவை:
ராகி மாவு 1 கப்
வறுத்த வேர்க்கடலை 3/4 கப்
எள் 1/2 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
-------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு சிறிது உப்பு,வெது வெதுப்பான தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு பிசறி
குக்கரில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.ஆறினவுடன் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
எள்ளை வறுக்கவும்.
வறுத்த வேர்கடலை,வறுத்த எள்,பொடித்த வெல்லம்,ஏலக்காய் பொடி நான்கையும் மிக்சியில் பொடி செய்யவும்.
பொடித்த மாவை ஆவியில் வேகவைத்த ராகி மாவுடன் கலந்து எடுத்து வைக்கவும்.
ராகி சத்து மாவில் சிறிதளவு நெய் சேர்த்து உருண்டைகளாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சத்து மிகுந்தது இது.
Monday, July 23, 2012
" CRISP " வடை
தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
வறுத்த வேர்கடலை 1 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
ஆப்பசோடா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
பொட்டுக்கடலை,பச்சைமிளகாய்,இஞ்சி,தேவையான உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.தனியே எடுத்து வைக்கவும்.
வறுத்த வேர்க்கடலையை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பொட்டுக்கடலை பொடி,வேர்க்கடலை பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து
வடை மாவு பதத்திற்கு பிசையவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டி மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
வேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் கலந்து வடைகளாக தட்டலாம்.
சுவையான "CRISP" வடை ரெடி.
Sunday, July 15, 2012
தினை தோசை
தேவையானவை:
தினை 1 கப்
brown rice 1 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
தினை
தினை,brown rice இரண்டையும் தனித்தனியாகவும் உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு இரண்டையும் ஒன்றாகவும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.தோசைமாவு பதத்திற்கு அரைத்து தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த மாவை ஐந்து மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்..
இதில் அதிக அளவு புரோட்டின் சத்து உள்ளது.
இதற்கு பொருத்தமான் சட்னி வேர்க்கடலை சட்னி.
தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
செய்முறை:
தேவையானவையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் தாளிக்க வேண்டும்.
Monday, July 9, 2012
வெங்காய பகோடா
தேவையானவை:
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
வெங்காயம் 2
மிளகாய் பொடி 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
கொத்தமல்லி,கறிவேப்பிலை சிறிதளவு
ஆப்ப சோடா 1 சிட்டிகை
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
செய்முறை:
வெங்காயத்தை நீட்ட வாக்கில் மெல்லிய slice களாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை ஆப்ப சோடா,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசையவேண்டும்.
அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.
மொறு மொறு வெங்காய பகோடா ரெடி.
Friday, July 6, 2012
ரைஸ் பக்கோடா
தேவையானவை:
சாதம் 1 கப்
கடலைமாவு 1/2 கப்
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது
செய்முறை:
வெங்காயம்,இஞ்சி,பச்சை,மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடித்த சாதம்,கடலைமாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.
அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.
Wednesday, June 27, 2012
பீன்ஸ் கொள்ளு பொரியல்
தேவையானவை:
பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
------
கொள்ளு 1/4 கப்
கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
பெருங்காயம் 1 துண்டு
-------
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
-----
செய்முறை:
கொள்ளை முதல் நாள் இரவே தண்ணீரில் உறவைக்கவேண்டும்.
கடலைபருப்பு,பொட்டுக்கடலை இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
ஊறிய கொள்ளை வடிகட்டி அதனுடன் ஊறவைத்த கடலைபருப்பு,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,பெருங்காயம்
தேவையான உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்கவேண்டும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் ஆவியில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
பின் அதை தட்டில் போட்டு உதிர்க்கவும். கட்டியாக இருந்தால் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
பீன்ஸை Microwave bowl ல் வைத்து Microwave "H" ல் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும்.
வெளியே எடுத்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வேகவைத்த பீன்ஸ் யை சேர்க்கவும்.
அதனுடன் உதிர்த்த கொள்ளு பருப்பை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.
பீன்ஸ் கொள்ளு பொரியலை சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Monday, June 25, 2012
GHEE ரைஸ்
தேவையானவை:
பச்சரிசி 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 5
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 2
ஏலக்காய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:
அரிசியை நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வைக்கவேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து நெய் சேர்த்து வடிகட்டிய அரிசியை நன்றாக பிரட்டவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பட்டை,லவங்கம்.ஏலக்காய்,கறிவேப்பிலை நான்கையும் எண்ணையில் வறுக்க வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காய்த்தை சேர்த்து வதக்கவேண்டும்.
குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் பிரட்டிய அரிசி,வதக்கிய வெங்காயம்,பட்டை,லவங்கம்,ஏலக்காய்
தேங்காய் பால்,தண்ணீர்,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு விசில் வந்ததும் இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.
பின்னர் வறுத்த முந்திரிபருப்பை சேர்க்கலாம்.
வெஜிடபிள் குருமா வுடன் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Tuesday, June 19, 2012
உளுத்தங்கஞ்சி
தேவையானவை:
உடைத்த உளுந்து 1 கப்
அரிசிக்குருணை 1 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
பூண்டு 4 பல்
தேங்காய் பால் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
உடைத்த உளுந்து,அரிசிக்குருணை,வெந்தயம் மூன்றையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் மூழ்குமளவுக்கு வைத்து ஊறவைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த மூன்றையும் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீருடன் குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் வைத்து சீரகம் மிளகு,பூண்டு,கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த உளுந்து அரிசி குருணை
கலவையை உப்புடன் சேர்த்து (தேவையானால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்) கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவேண்டும்.
உளுத்தங்கஞ்சி உடல் களைப்பை போக்கும்.
Friday, June 15, 2012
எலுமிச்சை இளநீர்
தேவையானது:
இளநீர் 2 கப்
எலுமிச்சம்பழம் 1
துளசி இலை 1/4 கப்
தேன் 2 தேக்கரண்டி
இளநீர் வழுக்கை 1/2 கப்
-------
செய்முறை:
இளநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி எலுமிச்சம்பழத்தை அதில் பிழியவேண்டும்.
துளசி இலையை இடித்து போட்டு அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்..
இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
துளசி இலைக்கு பதில் புதினா இலையையும் சேர்க்கலாம்.
எலுமிச்சை இளநீர் வெய்யிலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.
Thursday, June 7, 2012
பிரதமன்
தேவையானவை:
ஜவ்வரிசி 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
தேங்காய் பால் 1 1/2 கப்
ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
முந்திரி 5
பாதாம் பருப்பு 5
வறுத்த வேர்கடலை 5
வறுத்த தேங்காய் துண்டுகள் 10
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் கடலைப்பருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து நன்கு வேகவைத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஜவ்வரிசியை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும் வேகவைத்த கடலைப்பருப்பை இதனுடன் சேர்க்கவேண்டும்.
பின்னர் தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு கடாயில் அரை கப் தண்ணீரில் பொடித்த வெல்லத்தை சேர்த்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி
ஜவ்வரிசி கடலைப் பருப்பு கலவையில் கலந்து கொதிக்கவைக்கவும்.
தேங்காய் துண்டுகளை முதலில் நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.
பின்னர் முந்திரி பாதாம்,வேர்க்கடலை மூன்றையும் ஒன்றிரண்டாக உடைத்து நெய்யில் வறுத்து ஏலக்காய் தூளையும் சேர்க்க
சுவையான "பிரதமன் " ரெடி.
Thursday, May 31, 2012
ஆப்பம்
தேங்காய் பால் ஆப்பம்
தேவையானவை:
பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1/2 கப்
உளுந்து 1 தேக்கரண்டி
தேங்காய் பால் 1/2 கப்
சர்க்கரை 1 தேக்கரண்டி
ஆப்பசோடா 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையானது
-------
செய்முறை:
பச்சரிசி,புழுங்கலரிசி,உளுந்து மூன்றையும் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
வெதுவெதுப்பான வெந்நீரில் சர்க்கரை,ஆப்பசோடா,உப்பு மூன்றையும் கலந்து அரைத்து வைத்த மாவில் கலக்கவும்.
எட்டு மணி நேரம் வைக்கவும்.
ஆப்பம் செய்வதற்கு அரை மணி முன்பு தேங்காய் பாலை சேர்க்கவும்.
ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை கரண்டியால் நடுவில் ஊற்றி சட்டியை இருபுறமும் பிடித்து சுற்றி விடவேண்டும்
(பார்க்க படம்) மூடியால் மூடி அடுப்பை ஸ்லிம்மில் வைத்து எடுக்கவேண்டும்.திருப்பி போடக்கூடாது.
இதற்கு எண்ணெய் சேர்ப்பதில்லை.
வெஜிடபிள் குருமாவுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
----------------------------------------------
இளநீர் ஆப்பம்
தேவையானவை:
இட்லி புழுங்கலரிசி 1 கப்
இளநீர் 1 கப்
உப்ப் தேவையானது
தேங்காய் பால் 1/2 கப்
சர்க்கரை 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
----
செய்முறை:
அரிசியை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து வைக்க வேண்டும்.
அரைத்த மாவில் இளநீர் ஊற்றி கரைத்து வைக்க வேண்டும்.
எட்டு மணி நேரம் கழித்து ஆப்ப மாவு மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும்.
மேலே கூறியபடி ஆப்பம் செய்யவேண்டும்.
தேங்காய் பால்,சர்க்கரை ஏலத்தூள் சேர்த்து ஆப்பத்தில் ஊற்றி சாப்பிடலாம்.
Subscribe to:
Posts (Atom)
36 எரிசேரி
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
-
தேவையானவை: சாதம் 1 கப் கடலைமாவு 1/2 கப் வெங்காயம் 1 இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 2 கொத்தமல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை 1 கொத்து உ...
-
தேவையானவை: பயத்தம்பருப்பு 1 கப் மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி உருளைக்கிழங்கு 2 வெங்காயம் 2 எலுமிச்சம்பழம் 1 உப்பு,எண்ணெய் தேவையானது ---...
-
தேவையானவை: பொடியாக நறுக்கிய பீன்ஸ் 1 கப் தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி ------ கொள்ளு 1/4 கப் கடலைபருப்பு 1 மேசைக்கரண்டி பொட்டுக்...