Monday, February 27, 2012

முருங்கைக்கீரை பொரியல்



தேவையானவை:

முருங்கைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல்1 கப்
பச்சைமிளகாய் 2
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம்1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கடலைபருப்பு1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி


செய்முறை:

நறுக்கிய முருங்கைக்கீரையை நன்றாக அலசி வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயை வதக்கவும்.
முருங்கைக்கீரையை பிழிந்து இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும்.தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கீரை வெந்ததும் சீரகத்தை அப்படியே பச்சையாகவும் மிளகை பொடித்தும் சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
வேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கலாம்.:



Wednesday, February 22, 2012

பஞ்சாபி "பீஸ்" புலாவ்



தேவையானவை:
பாசுமதி அரிசி1 கப்
பச்சை பட்டாணி1 கப்
வெங்காயம்1
தக்காளி2
பச்சைமிளகாய்2
-------
ஏலக்காய்2
கிராம்பு2
இஞ்சி பூண்டு விழுது1தேக்கரண்டி
மிளகாய் தூள்1மேசைக்கரண்டி
பிரியாணி மசாலா1 மேசைக்கரண்டி
தயிர்1/2கப்
புதினா,கொத்தமல்லித்தழை சிறிதளவு
முந்திரிபருப்பு5
உப்பு,எண்ணெய் தேவையானது
செய்முறை:


பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.(ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர்)
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவேண்டும்.
-------
குக்கரை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி ஏலக்காய்,கிராம்பு சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்க்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வெந்ததும் தக்காளி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின்னர்
பச்சை பட்டாணியையும் தேவையான உப்பும் சேர்க்கவேண்டும்.
மிளகாய் தூள்,பிரியாணி மசாலா இரண்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன் ஊறவைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்து,,தயிர்,புதினா கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும் இறக்கவேண்டும்.
முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.

Sunday, February 19, 2012

எள் பச்சடி




தேவையானவை:
எள் 1 கப்
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்3
------
 வெங்காயம் 2
புளிக்கரைசல் 1/2 கப்
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணய் தேவையானது
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
-------
செய்முறை:
எள்ளை முதலில் தண்ணீரில் உறவைத்து (15 நிமிடம்) வடிகட்டி வெறும் வாணலியில் வ்றுக்கவேண்டும்.
உளுத்தம்பருப்பு,கடலை பருப்பு,மிளகாய் வற்றல் மூன்றையும் எண்ணையில் வறுக்கவேண்டும்.
பின்னே எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் பொடி பண்ணவேண்டும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து நறுக்கிய வெங்காயம்,பெருங்காயத்தூள்  சேர்த்து வதக்கவேண்டும்.
புளிக்கரைசலில் அரைத்த பொடியைக் கலந்து இதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் சிறிதளவு தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவ வேண்டும்.

Wednesday, February 15, 2012

..கோவக்காய் பொரியல்



தேவையானவை:

                               
 கோவைக்காய் 1/4 கிலோ
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
----
அரைக்க:
பட்டை 1
கிராம்பு1
மராட்டிமொக்கு1
கடலைபருப்பு1தேக்கரண்டி
தனியா1தேக்கரண்டி
சீரகம்1தேக்கரண்டி
மிளகு1தேக்கரண்டி
வற்றல் மிளகாய்2
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலைசிறிதளவு
-----
செய்முறை:


கோவக்காயை நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்
.
அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.

ஒரு microwave bowl ஐ எடுத்துக்கொண்டு அதில் கோவக்காயுடன் சிறிது தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள்சேர்த்து மொத்தம் 12 நிமிடம் வைக்கவேண்டும்.
நான்கு,நான்கு நிமிடங்களாக வைக்கவேண்டும்.மூன்றாவது தடவை வைக்கும் போது தேவையான உப்பு சேர்த்து வைக்கவேண்டும்.நன்கு வெந்துவிடும்
.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெந்த கோவக்காயை சேர்த்து வதக்கவேண்டும்.அதனுடன் அரைத்து வைத்துள்ள பொடியைசேர்த்து பிரட்டவேண்டும்.ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்ட முறுகலாக வரும்.

கோவைக்காய்  பொரியல் சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற side dish. சாதத்தோடும் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

Sunday, February 12, 2012

பச்சைமிளகாய் சட்னி



தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Sunday, February 5, 2012

நேந்திரம் பாயசம்




தேவையானவை:
நேந்திரம் பழம் 2
பொடித்த வெல்லம் 1 1/2 கப்
தேங்காய் பால் 1 கப்
நெய் 1/4 கப்
முந்திரி பருப்பு 10
சுக்குசிறிதளவு
ஏலக்காய் 1 தேக்கரண்டி
                   நேந்திரம் பழம்

செய்முறை
:
நேந்திரம் பழத்தை உரித்து இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைக்கவேண்டும்.
ஆவியிலிருந்து எடுத்து மிக்சியில் போட்டு விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
பொடித்த வெல்லத்தை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அரைத்த பழ விழுதை நன்கு வதக்கவேண்டும்.
 பழம் வதங்கிய பிறகு வெல்ல பாகை ஊற்றி கிளறவேண்டும்.
பழமும்,பாகும் சேர்ந்து நல்ல வாசனை வரும்போது தேங்காய் பாலை ஊற்றவும்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் (இரண்டு நிமிடம் கழித்து) இறக்கவும்.
முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
ஏலக்காய் பொடியையும் சுக்கை இடித்தும் சேர்க்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...