Monday, November 29, 2010

சீரக சாதமும்...பட்டர் வெஜ் மசாலாவும்..

சீரக சாதம்: 
தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

செய்முறை:

பாசுமதி அரிசியை மூன்று கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.

பொரித்த சீரகத்தை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கலாம்.



பட்டர் வெஜ் மசாலா:

தேவையானவை:

வெண்ணைய் 1டேபிள்ஸ்பூன்

வெங்காயம் 1

உருளைக்கிழங்கு 1

கார்ன் 1/2 கப்

காரட் 1

பீன்ஸ் 10

குடமிளகாய் 1

தக்காளி 2

-------

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

சீரகத்தூள் 1 டீஸ்பூன்

தனியாதூள் 1 டீஸ்பூன்

காரப்பொடி 1/2 டீஸ்பூன்

மசாலாதூள் 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

--------

தாளிக்க:

பட்டை சிறு துண்டு

லவங்கம் 2

கசகசா 1 டீஸ்பூன்

சோம்பு 1 டீஸ்பூன்

-----

செய்முறை:

வெங்காயம்,உருளைக்கிழங்கு,காரட்,பீன்ஸ்,குடமிளகாய்,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்க்கிகொள்ளவும்.

கடாயில் வெண்ணைய் வைத்து உருகினதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது

இரண்டையும் நன்றாக வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கியுள்ள காய்கறிகள்,கார்ன்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்

காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்க்கவேண்டும்.

அதனுடன் சீரகத்தூள்,தனியா தூள்,காரப்பொடி,மசாலாதூள்,சிறிது தண்ணீருடன் சேர்த்து வதக்கவேண்டும்.

(தண்ணீர் அதிகம் விடவேண்டாம்)

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

Wednesday, November 24, 2010

பீட்ரூட் பொரிச்ச கூட்டு

தேவையானவை: பீட்ரூட் 2

பயத்தம்பருப்பு 1/2 கப்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்

அரைக்க:

மிளகாய்வற்றல் 4

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 5

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு



செய்முறை:


பீட்ரூட்டை தோலுரித்து சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம்பருப்பு,பீட்ரூட்,இரண்டையும் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.

(குக்கரில் முதலில் பயத்தம்பருப்பு அதன்மேல் பீட்ரூட் வைத்தால் பருப்பு நன்றாக வெந்துவிடும்)

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பு,பீட்ரூட் கலவையை உப்புடன்

சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

(இதே முறையில் பூசணிக்காய்,சௌ சௌ,கொத்தவரங்காய் போன்ற காய்களிலும் செய்யலாம்.)

Sunday, November 21, 2010

வெஜிடபிள் குருமா

தேவையானவை
காலிஃப்ளர் 2 கப் (பூக்களாக அரிந்தது)
வெங்காயம் 2
பீன்ஸ் 1 கப் (சிறு துண்டுகள்)
காரட் 1/2 கப் (சிறு துண்டுகள்)
உருளைக்கிழங்கு 1 கப் (சிறு துண்டுகள்)
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
தயிர் 1/2 கப்
பால் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

---------

அரைக்க:

நிலக்கடலை 10

பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய்துருவல் 1/2 கப்

பட்டை 1 துண்டு

லவங்கம் 2

சோம்பு 1 டேபிள்ஸ்பூன்

கசகசா 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 3

---------

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் வைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் காலிஃப்ளவர்,பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் மஞ்சள்தூளுடன் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு,இஞ்சி பூண்டு விழுது,தனியா தூள் சேர்க்கவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து

கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தயிர் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைக்கவேண்டும்.

இறக்கியவுடன் பால் சேர்க்கவேண்டும்.

வெஜிடபிள் குருமா சப்பாத்தி,பூரிக்கு ஏற்ற side dish.

தண்ணீருக்கு பதிலாக vegetable stock சேர்த்தால் சுவை கூடும்.

Tuesday, November 16, 2010

மேத்தி பாஜி

தேவையானவை:
வெந்தயக்கீரை அரிந்தது 2 கப்

வெங்காயம் 1

தக்காளி 2

பச்சை பட்டாணி 1 கப்

சீரகத்தூள் 1 டீஸ்பூன்

தனியாதூள் 1 டீஸ்பூன்

மசாலாதூள் 1 டீஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:


வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து இஞ்சி பூண்டு விழுது வதக்கி பின்னர்

வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் தக்காளியையும் வதக்கி பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை,பட்டாணி,சிறிது உப்பு

சேர்த்து எல்லாம் நன்றாக வெந்ததும் சீரகத்தூள்,தனியா தூள்,மசாலா தூள் சிறிது தண்ணீருடன் சேர்த்து

கொதிக்கவைக்கவேண்டும்.

மேத்தி பாஜி சப்பாத்தி,பூரி க்கு ஏற்ற side dish.சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம்.

Sunday, November 14, 2010

வாங்கி பாத்

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

சின்ன கத்திரிக்காய் 10

வெங்காயம் 2

பட்டாணி 1கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

காரப்பொடி 1 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

வேர்க்கடலை 10

கறிவேப்பிலை சிறிதளவு

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

--------

பொடி பண்ண:

தனியா 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல் 4

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

கடலை பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

வேர்க்கடலை 1 டேபிள்ஸ்பூன்

துருவிய தேங்காய் 1 கப்

பெருங்காயம் 1 துண்டு

---------

தாளிக்க:

சோம்பு 1 டீஸ்பூன்

கசகசா 1 டீஸ்பூன்

பட்டை 1 துண்டு

லவங்கம் 4

-----

செய்முறை:


கத்திரிக்காயை 1" நீட்டவாக்கில் நறுக்கிகொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

பாசுமதி அரிசியை இரண்டு கப்புக்கு 3 கப் தண்ணீர் வைத்து அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

பொடி பண்ண கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
--------

பாசுமதி அரிசியை ele.cooker ல் வைத்து ஆறினவுடன் ஒரு அகண்ட பாத்திரத்தில் ஆறவைக்கவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

கத்திரிக்காயை உப்பு,மஞ்சள்தூள்,காரப்பொடி சேர்த்து பிசிறி எண்ணையில் வறுத்து எடுக்கவும்.

அதனுடன் பட்டாணி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.

ஆறவைத்த சாதத்துடன் வறுத்த கத்திரிக்காய்,வெங்காயம்,பட்டாணி தேவையான உப்பு, தயாராக வைத்துள்ள பொடி சேர்த்து கிளறவேண்டும்
கடைசியில் முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.












.

Sunday, November 7, 2010

காலிஃப்ளவர் குருமா

தேவையானவை:
காலிஃப்ளவர் 2 கப் (சிறு பூக்களாக உதிர்த்தது)

வெங்காயம் 1

உருளைக்கிழங்கு 1

பட்டாணி 1/2 கப்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

இஞ்சிபூண்டு விழுது 1 டீஸ்பூன்

தனியா தூள் 1 டீஸ்பூன்

சீரகதூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,எண்ணைய் தேவையானது

-----

அரைக்க:

தேங்காய் துருவல் 1/2 கப்

பாதாம் பருப்பு 4

தக்காளி 1

முந்திரிபருப்பு 4

-----

தாளிக்க:

பட்டை 1 சிறிய துண்டு

கிராம்பு 2

சோம்பு 1 டீஸ்பூன்

------


செய்முறை:

வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.

வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும். குருமா

காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கு,பட்டாணி மூன்றையும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

அரைத்த விழுது,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுது,தனியா,சீரகதூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்..

Wednesday, November 3, 2010

Tuesday, November 2, 2010

முறுக்கு..ஓமப்பொடி....தீபாவளி ஸ்பெஷல்-4.

1.முள்ளு முறுக்கு: 


தேவையானவை:

அரிசிமாவு 2 கப்

உளுந்து மாவு 1/2 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

எள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

அரிசிமாவு,உளுந்து மாவு.வெண்ணைய்,எள்,தேவையான உப்பு எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

அடுப்பில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் சிறிது மாவை எடுத்துக்கொண்டு முறுக்கு அச்சில் ஒற்றை நட்சத்திர தட்டில் போட்டு எண்ணையில்

பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.



2. தேன்குழல்:

தேன்குழல் செய்முறை இங்கு பார்க்கவும்.



3. ஓமப்பொடி:

தேவையானவை:

கடலை மாவு 1 கப்

அரிசிமாவு 1/4 கப்

ஓமம் 1டீஸ்பூன்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஓமத்தை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நன்றாக விழுது போல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,நெய் இவற்றுடன் அரைத்த ஓமம் விழுதையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்

தெளித்து நன்கு பிசையவும்.அடுப்பில் எண்ணைய் வைத்து ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.



4. ரிப்பன் பகோடா:

தேவையானவை:

கடலை மாவு 3 கப்

அரிசிமாவு 1 கப்

மிளகாய் பொடி 1 டேபிள்ஸ்பூன்

நெய் 2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

மேற்கூறியவற்றை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து நாடா அச்சில் போட்டு எண்ணைய் காய்ந்தவுடன்

பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.

Monday, November 1, 2010

கோதுமை பர்ஃபி - தீபாவளி ஸ்பெஷல்-3.

தேவையானவை:
கோதுமை மாவு 1 கப்

பொடித்த வெல்லம் 1/2 கப்

கச கசா 1 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

நெய் 1/4 கப்

செய்முறை:

ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் கச கசாவை சமமாக தூவவேண்டும்.

வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி அதில் கோதுமைமாவை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொடித்த வெல்லத்தையும்,ஏலக்காய் தூளையும்,மீதியுள்ள நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...