Tuesday, July 31, 2012

எள்ளுப் பொடி




தேவையானவை:
கறுப்பு எள் 1கப்
மிளகாய் வற்றல் 5
உளுத்தம்பருப்பு 2 மேசைக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது

-------
செய்முறை:

எள்ளை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி வெறும் வாணலியில் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து வறுக்கவேண்டும்.
நன்றாக வெடிக்கும். வெடிப்பது நின்றவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.

மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு கடலைபருப்பு ,பெருங்காயத் துண்டு  நான்கையும் எண்ணையில் வறுக்கவேண்டும்.
கறிவேப்பிலையையும் அதே வாணலியில் லேசாக பிரட்டவேண்டும்.
மிக்சியில் முதலில்  வறுத்த மிளகாய் வற்றல்.உளுத்தம்பருப்பு,பெருங்காயத்துண்டு  கடலைபருப்பு,கறிவேப்பிலை,  பொடிசெய்துவிட்டு
அதனுடன் வறுத்த எள்ளு,தேவையான உப்பு சேர்த்து பொடி செய்யவேண்டும்.

இந்த எள்ளுபொடியை சாதத்துடன் சிறிது நல்லெண்ணய் சேர்த்து பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

Sunday, July 29, 2012

ராகி சத்து மாவு




தேவையானவை:
ராகி மாவு 1 கப்
வறுத்த வேர்க்கடலை 3/4 கப்
எள் 1/2 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
-------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு சிறிது உப்பு,வெது வெதுப்பான தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு பிசறி
குக்கரில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.ஆறினவுடன் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
எள்ளை வறுக்கவும்.
வறுத்த வேர்கடலை,வறுத்த எள்,பொடித்த வெல்லம்,ஏலக்காய் பொடி நான்கையும் மிக்சியில் பொடி செய்யவும்.
பொடித்த மாவை ஆவியில் வேகவைத்த ராகி மாவுடன் கலந்து எடுத்து வைக்கவும்.
ராகி சத்து மாவில் சிறிதளவு நெய் சேர்த்து உருண்டைகளாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சத்து மிகுந்தது இது.

Monday, July 23, 2012

" CRISP " வடை




தேவையானவை:

பொட்டுக்கடலை 1 கப்
வறுத்த வேர்கடலை 1 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
ஆப்பசோடா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:

பொட்டுக்கடலை,பச்சைமிளகாய்,இஞ்சி,தேவையான உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.தனியே எடுத்து வைக்கவும்.
வறுத்த வேர்க்கடலையை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பொட்டுக்கடலை பொடி,வேர்க்கடலை பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து
வடை மாவு பதத்திற்கு பிசையவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டி மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
வேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் கலந்து வடைகளாக தட்டலாம்.
சுவையான "CRISP" வடை ரெடி.

Sunday, July 15, 2012

தினை தோசை




தேவையானவை:
தினை 1 கப்
brown rice 1 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
                      தினை    



தினை,brown rice  இரண்டையும் தனித்தனியாகவும் உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு இரண்டையும் ஒன்றாகவும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.தோசைமாவு பதத்திற்கு அரைத்து தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த மாவை ஐந்து மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்..
இதில் அதிக அளவு புரோட்டின் சத்து உள்ளது.


இதற்கு பொருத்தமான் சட்னி வேர்க்கடலை சட்னி.

தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:
தேவையானவையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் தாளிக்க வேண்டும்.

Monday, July 9, 2012

வெங்காய பகோடா



தேவையானவை:
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1/2 கப்
வெங்காயம் 2
மிளகாய் பொடி 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
கொத்தமல்லி,கறிவேப்பிலை சிறிதளவு
ஆப்ப சோடா 1 சிட்டிகை
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
செய்முறை:

வெங்காயத்தை நீட்ட வாக்கில் மெல்லிய slice களாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை ஆப்ப சோடா,பெருங்காயத்தூள்,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும்  சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசையவேண்டும்.

அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.

மொறு மொறு வெங்காய பகோடா ரெடி.

Friday, July 6, 2012

ரைஸ் பக்கோடா



தேவையானவை:
சாதம் 1 கப்
கடலைமாவு 1/2 கப்
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:

வெங்காயம்,இஞ்சி,பச்சை,மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வடித்த சாதம்,கடலைமாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை,தேவையான உப்பு,காய வைத்த எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசையவேண்டும்.

அடுப்பில் கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிசைந்துவைத்துள்ள மாவை பக்கோடாவுக்கு போடுவதுபோல் கிள்ளி போட்டு சிவந்ததும் எடுக்கவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...