Showing posts with label ஸ்நாக். Show all posts
Showing posts with label ஸ்நாக். Show all posts

Tuesday, February 17, 2015

எள்ளு முறுக்கு





தேவையானவை:

பச்சரிசி மாவு 1 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
கடலை மாவு 1/4 கப்
எள் 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:


வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு அதனுடன் மிளகாய் தூள்,பெருங்காய்த்தூள்,தேவையான உப்பு சேர்த்து  நன்கு கொதிக்கவைக்கவும்.
பின்னர் அதனுடன் கடலை மாவு,பொட்டுக்கடலை மாவு,எள் சேர்த்து கிளறவும்.கிளறிய மாவு முறுக்கு மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
வேண்டுமென்றால் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் முறுக்கு வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Wednesday, October 31, 2012

வேர்க்கடலை சுண்டல்




தேவையானவை:

வேர்க்கடலை 2 கப்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:

வேர்க்கடலையை இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும்.(மூன்று விசில்)
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றை தாளித்து குக்கரிலிருந்து வேர்க்கடலையை வடிகட்டி இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும்.

Monday, July 23, 2012

" CRISP " வடை




தேவையானவை:

பொட்டுக்கடலை 1 கப்
வறுத்த வேர்கடலை 1 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
ஆப்பசோடா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:

பொட்டுக்கடலை,பச்சைமிளகாய்,இஞ்சி,தேவையான உப்பு எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.தனியே எடுத்து வைக்கவும்.
வறுத்த வேர்க்கடலையை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பொட்டுக்கடலை பொடி,வேர்க்கடலை பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து
வடை மாவு பதத்திற்கு பிசையவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டி மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
வேண்டுமென்றால் வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் கலந்து வடைகளாக தட்டலாம்.
சுவையான "CRISP" வடை ரெடி.

Sunday, October 23, 2011

ரிப்பன் தேன்குழல்



தேவையானவை:

கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
 வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு,அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலக்கவேண்டும்.
உப்பையும் பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விடவேண்டும்.
அதனுடன் காரப்பொடி,மிளகு தூள்,வெண்ணைய் எல்லாவற்றையும் தேவையான தண்ணீருடன் சேர்த்து கெட்டியாக பிசையவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Tuesday, February 22, 2011

ஓட்ஸ் குக்கீஸ்



தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்

மைதா 1 கப்

பட்டைத்தூள் 1 டீஸ்பூன்

(cinnammon powder)

சர்க்கரை 1 கப்

வெண்ணைய் 1/2 கப்

ஆப்பசோடா 1 டீஸ்பூன்

Flax seeds 1 டேபிள்ஸ்பூன்


                                                             FLAX   SEED

செய்முறை:

Flax seed ஐ மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதா மாவு,ஓட்ஸ் பட்டைத்தூள்,,ஆப்பசோடா நான்கையும் போட்டு நன்கு கலக்கவேண்டும்.

இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையையும் வெண்ணையையும் கலக்கவேண்டும்.

அதனுடன் அரைத்த flax seed விழுதினை சேர்த்து பிசையவேண்டும்.

சர்க்கரை,வெண்ணைய்,flax seed விழுது கலவையோடு மைதா மாவு,ஓட்ஸ் மிக்சரை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

சப்பாத்தி மாவு மாதிரி வந்தபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டவேண்டும்.

Ovan ஐ 350 யில் preheat செய்து cooking time 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.


சுவையான ஓட்ஸ் குக்கீஸ் ரெடி.

Thursday, February 17, 2011

ஸ்வீட் பொடேடோ ஃப்ரை

 
தேவையானவை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு 2

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 2 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

---

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோலை உரித்துவிட்டு நீட்ட வாக்கில் 2 அங்குல துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதில் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய் தூள் சேர்த்து ஆலிவ் ஆயில் ஊற்றி நன்கு பிசிற வேண்டும்.

----

Ovan ஐ 425 F ல் preheat செய்து cooking time 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவேண்டும்.

முறுகலான ஸ்வீட் பொடேடோ ஃப்ரை ரெடி.

Thursday, December 2, 2010

கோதுமை மாவு பிஸ்கட்

தேவையானவை: 

கோதுமை மாவு 1 கப்

பொடித்த சர்க்கரை 1/2 கப்

வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா 1/2 டீஸ்பூன்

எண்ணைய் தேவையானது



செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்

கோதுமை மாவு,சர்க்கரை,வெண்ணைய்,பேக்கிங் சோடா,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும்

சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி இடுவது போல இட்டு

பின்னர் சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள சதுரங்களை பொறித்து எடுக்கவும்.

குழந்தைகளுக்கு இதனை மாலை சிற்றுண்டியாகக் கொடுத்தால்

விரும்பி சாப்பிடுவார்கள்.   மாலை டிபன்

Tuesday, November 2, 2010

முறுக்கு..ஓமப்பொடி....தீபாவளி ஸ்பெஷல்-4.

1.முள்ளு முறுக்கு: 


தேவையானவை:

அரிசிமாவு 2 கப்

உளுந்து மாவு 1/2 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

எள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

அரிசிமாவு,உளுந்து மாவு.வெண்ணைய்,எள்,தேவையான உப்பு எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

அடுப்பில் எண்ணைய் வைத்து காய்ந்ததும் சிறிது மாவை எடுத்துக்கொண்டு முறுக்கு அச்சில் ஒற்றை நட்சத்திர தட்டில் போட்டு எண்ணையில்

பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.



2. தேன்குழல்:

தேன்குழல் செய்முறை இங்கு பார்க்கவும்.



3. ஓமப்பொடி:

தேவையானவை:

கடலை மாவு 1 கப்

அரிசிமாவு 1/4 கப்

ஓமம் 1டீஸ்பூன்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

ஓமத்தை அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் நன்றாக விழுது போல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,நெய் இவற்றுடன் அரைத்த ஓமம் விழுதையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்

தெளித்து நன்கு பிசையவும்.அடுப்பில் எண்ணைய் வைத்து ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.



4. ரிப்பன் பகோடா:

தேவையானவை:

கடலை மாவு 3 கப்

அரிசிமாவு 1 கப்

மிளகாய் பொடி 1 டேபிள்ஸ்பூன்

நெய் 2 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:

மேற்கூறியவற்றை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து நாடா அச்சில் போட்டு எண்ணைய் காய்ந்தவுடன்

பிழிந்து சிவந்தவுடன் எடுக்கவும்.

Friday, October 15, 2010

தேன்குழல்

தேவையானவை: அரிசிமாவு 4 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
உளுத்தமாவு 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,உளுத்தமாவு,சீரகம்,நெய்,தேவையான உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து விட்டு ஒவ்வொரு குழலுக்கும் வேண்டிய மாவை அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் போட்டு எண்ணையில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவேண்டும்.
முதலில் போட்டது வெந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது குழலுக்கு மாவு பிசையவும்.




எல்லா மாவையும் முதலிலே பிசைந்தால் எண்ணையில் போடும் போது மிகவும் சிவந்து விடும்.

Monday, June 21, 2010

புதினா ஓமப்பொடி


தேவையானவை:

கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1/2 கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை 10
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையான அளவு.
-----
அரைக்க: 1.

ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 10
காய்ந்த மிளகாய் 4
----

அரைக்க: 2

புதினா 1 கட்டு
காய்ந்த மிளகாய் 4
உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
உப்பு தேவையானது
----

செய்முறை:
ஓமம்,மிளகு,காய்ந்த மிளகாய் மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்து தண்ணருடன் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

புதினாவை நன்கு ஆய்ந்து எண்ணையில் பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.அதனுடன் வறுத்த காய்ந்த மிளகாய்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியில் போட்டு வடிகட்ட வேண்டும்.

கடலைமாவையும் அரிசிமாவையும் ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு உப்பு,நெய் சேர்த்து பிசிறவேண்டும்.
அதில் ஒரு சிறு பகுதியை தனியே எடுத்து அதனுடன் வடிகட்டிய ஓமத்தண்ணீரை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.அடுப்பில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்தவுடன் பிசைந்த மாவை
ஓமப்பொடி அச்சில் வைத்து பிழிய வேண்டும்.சிகப்பாக இருக்கும் இந்த ஓமப்பொடியை பொடிப்பொடியாக உடைத்துக்கொள்ளவேண்டும்.

மீதமுள்ள மாவை வடிகட்டிய புதினா தண்ணீருடன் சேர்த்து பிசைய வேண்டும்.மேற்கூறியவாறு ஓமப்பொடி அச்சில் போட்டு எடுக்கவேண்டும்.இந்த ஓமப்பொடி பச்சைக் கலரில் இருக்கும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தயாராகவுள்ள இரண்டு ( சிகப்பு,பச்சை)ஓமப்பொடிகளையும் கலந்து அதனுடன் வறுத்த நிலக்கடலை,முந்திரிபருப்பு சேர்த்து கலக்கவேண்டும்.

colourful ஆக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Wednesday, March 31, 2010

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்



தேவையானவை:

மரவள்ளிக்கிழங்கு 1 பெரிய துண்டு
காரப்பொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது



செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.ஊறியபின் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பேப்பரில் பரவலாக பிரித்து போடவும்.நன்றாக காய வேண்டும்.
கடாயில் எண்ணைய் வைத்து எண்ணைய் நன்கு காய்ந்தவுடன் அடுப்பை தணித்து காயவைத்த மரவள்ளித்துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும்.பொரித்த சிப்ஸ்களை பேப்பர் டவலால் ஒத்தி எடுத்து தேவையான உப்பு,காரப்பொடி சேர்த்து பிசறவும்

Monday, September 1, 2008

மசாலா தட்டை

தேவையானவை:

மைதாமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:

பூண்டு 6 பல்
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு

செய்முறை:

மைதாமாவை சலித்து ஒரு துணியில் மூட்டை போல கட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து எடுக்கவும்.
பின்னர் நன்றாக உதிர்க்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதுபோல அரைத்து வைக்கவும்.

உதிர்த்த மைதாமாவுடன் அரிசிமாவு,அரைத்த விழுது,வெண்ணய்,உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து
நன்றாக பிசையவும்.ஒரு plastic paper ல் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஒவ்வொரு உருண்டையையும்
தட்டைகளாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...