Wednesday, November 27, 2013

பார்லி ஓட்ஸ் தோசை



தேவையானவை:
பார்லி 1 கப்
ஓட்ஸ் 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
கறுப்பு உளுந்து 3/4 கப்
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய் 3
பெருங்காயம் ஒரு துண்டு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------

பார்லியை முதல் நாளே ஊறவைக்கவேண்டும்.
ஓட்ஸை அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
புழுங்கலரிசியை நான்கு மணி நேரமும் கடலைப்பருப்பு, கறுப்பு உளுந்து இரண்டையும் இரண்டு மணி நேரமும் ஊறவைக்கவண்டும்.
ஊறவைத்த பார்லி,ஓட்ஸ்,புழுங்கலரிசி,கடலைப்பருப்பு,கறுப்பு உளுந்து, எல்லாவற்றையும் சிவப்பு மிளகாய்,பச்சை மிளகாய்,பெருங்காய்ம்,கொத்தமல்லித்தழை தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை நான்கு ஐந்து மணி நேரம் புளிக்க வைத்தால் போதும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றி
மெல்லிசாக வார்க்கவேண்டும்.இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

தக்காளி சட்னி,வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். 

Tuesday, November 19, 2013

வெந்தய குருமா



தேவையானவை:
வெந்தயம்1/2 கப்
பூண்டு10 பல்
வெங்காயம்2
பச்சைமிளகாய்2
தக்காளி2
புளிஎலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம்2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழைசிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
உளுத்தம்பருப்பு1/4 கப்
சீரகம்1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்3
தேங்காய் துருவல்1/2 கப்
-----
தாளிக்க:
கடுகு1 தேக்கரண்டி
கறிவேப்பிலைஒரு கொத்து
------
             ஊறவைத்து வேகவைத்த வெந்தயம்



செய்முறை:
                                         குருமா



வெந்தயத்தை 8 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி வேகவைத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக் கொள்ளவும்.
புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
--------
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணய் சேர்த்து  தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பூண்டு,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் நான்கையும் வதக்கவேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் வேகவைத்துள்ள வெந்தயம்,அரைத்த விழுது,புளித்தண்ணீர்,உப்பு எல்லாம் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவேண்டும்.
வெந்தய குருமாவை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.
வெந்தய குருமா நீரிழிவுகாரர்களுக்கு சிறந்தது.

Monday, November 11, 2013

FLAX SEED உருண்டை



தேவையானவை:                               Flax Seed

Flax seed 1 கப்
பொட்டுக்கடலை 1 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
நெய் 1/4 கப்
-------


செய்முறை:

Flax seed ஐ வெறும் வாணலியில் வறுத்து (வறுக்கும் போது எள் மாதிரி வெடிக்கும்) பொடி செய்துகொள்ளவேண்டும்.
பொட்டுக்கடலையையும் எண்ணெயில்லாமல் வறுத்து பொடி செய்துகொள்ளவேண்டும்.
பொடி செய்த Flax seed,பொட்டுக்கடலை,பொடித்த வெல்லம்,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும். நெய்யை உருக்கி பொடித்த மாவுடன் கலந்து உருண்டைகளாக பிடிக்கலாம்.

நெய் சேர்க்காமல் தண்ணீர் தெளித்தும் உருண்டைகளாக பிடிக்கலாம்.
Flax seed சாப்பிட்டால் கொலாஸ்ட்ரல் அளவு குறையும்.

Wednesday, November 6, 2013

சீரக சாதமும்...பட்டர் வெஜ் மசாலாவும்..


சீரக சாதம்:

தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

உப்பு தேவையானது

செய்முறை:


பாசுமதி அரிசியை மூன்று கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.

பொரித்த சீரகத்தை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கலாம்.
----------
பட்டர் வெஜ் மசாலா:

தேவையானவை:

வெண்ணைய் 1டேபிள்ஸ்பூன்

வெங்காயம் 1

உருளைக்கிழங்கு 1

கார்ன் 1/2 கப்

காரட் 1

பீன்ஸ் 10

குடமிளகாய் 1

தக்காளி 2

-------

இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

சீரகத்தூள் 1 டீஸ்பூன்

தனியாதூள் 1 டீஸ்பூன்

காரப்பொடி 1/2 டீஸ்பூன்

மசாலாதூள் 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

--------

தாளிக்க:

பட்டை சிறு துண்டு

லவங்கம் 2

கசகசா 1 டீஸ்பூன்

சோம்பு 1 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயம்,உருளைக்கிழங்கு,காரட்,பீன்ஸ்,குடமிளகாய்,தக்காளி எல்லாவற்றையும் பொடியாக நறுக்க்கிகொள்ளவும்.

கடாயில் வெண்ணைய் வைத்து உருகினதும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது

இரண்டையும் நன்றாக வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கியுள்ள காய்கறிகள்,கார்ன்,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்

காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்க்கவேண்டும்.

அதனுடன் சீரகத்தூள்,தனியா தூள்,காரப்பொடி,மசாலாதூள்,சிறிது தண்ணீருடன் சேர்த்து வதக்கவேண்டும்.

(தண்ணீர் அதிகம் விடவேண்டாம்)

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் இறக்கியபின் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டும்.

கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...