தேவையானவை:
பார்லி 1 கப்
ஓட்ஸ் 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
கறுப்பு உளுந்து 3/4 கப்
சிவப்பு மிளகாய் 2
பச்சைமிளகாய் 3
பெருங்காயம் ஒரு துண்டு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
பார்லியை முதல் நாளே ஊறவைக்கவேண்டும்.
ஓட்ஸை அரை மணி நேரம் ஊறவைத்தால் போதும்.
புழுங்கலரிசியை நான்கு மணி நேரமும் கடலைப்பருப்பு, கறுப்பு உளுந்து இரண்டையும் இரண்டு மணி நேரமும் ஊறவைக்கவண்டும்.
ஊறவைத்த பார்லி,ஓட்ஸ்,புழுங்கலரிசி,கடலைப்பருப்பு,கறுப்பு உளுந்து, எல்லாவற்றையும் சிவப்பு மிளகாய்,பச்சை மிளகாய்,பெருங்காய்ம்,கொத்தமல்லித்தழை தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை நான்கு ஐந்து மணி நேரம் புளிக்க வைத்தால் போதும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றி
மெல்லிசாக வார்க்கவேண்டும்.இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
தக்காளி சட்னி,வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
13 comments:
உடம்பிற்கு சத்தான சமையல் குறிப்பு... நன்றி அம்மா...
சூப்பர் தோசை!!!
வாவ்..சட்னி கண்ணை பறிகிறது,,,
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
@ Saratha
வருகைக்கு நன்றி Saratha
பார்லி ஓட்ஸ் தோசை செய்முறைக்குறிப்பு தந்திருக்கிறீர்கள். உடலுக்கு நல்லது என்பதால் செய்து சாப்பிடவேண்டும்
சத்துள்ள குறிப்பு. பகிர்வுக்கு நன்றிங்க.
நல்ல குறிப்பு. நன்றி.
@ ஸாதிகா
செய்துபாருங்கள். ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி ஸாதிகா.
@ Viya Pathy
செய்துபாருங்கள். வருகைக்கு நன்றி
Viya Pathy.
@ Aadhi Venkat
Thanks Aadhi.
@ ராமலக்ஷ்மி.
Thanks ராமலக்ஷ்மி.
வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_27.html?showComment=1388106172450#c4072647375032658530
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment