தேவையானவை:
வரகரிசி 1 கப்
பயற்றம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பொடித்தவெல்லம் 1 1/4
தண்ணீர் 4
நெய் 1/4 கப்
பால் 1/2 கப்
-----------------------
ஜாதிக்காய் 1 துண்டு
குங்குமப்பூ 1 டீஸ்பூன்
ஏலக்காய் 4
முந்திரிபருப்பு 10
கேசரிப்பவுடர் 1 /2டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு பயற்றம்பருப்பை எண்ணைய் விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
வரகரிசியை சிறிது நெய்யில் நன்றாக வறுக்கவும்.
வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தம்பருப்பு, வறுத்த வரகரிசி நான்கு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ( ஐந்து விசில்) எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து ரெடியாக உள்ள வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து கிளறவும். வரகரிசியும் வெல்லமும் ஒன்று சேர்ந்து சர்க்கரை பொங்கல் பக்குவம் வரும்.
ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் கேசரிப்பவுடர்,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும் மீதமுள்ள பாலையும் பொங்கலில் சேர்க்கவும்.,முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.