Showing posts with label தீபாவளி ஸ்பெஷல். Show all posts
Showing posts with label தீபாவளி ஸ்பெஷல். Show all posts

Sunday, October 19, 2014

பாதாம் வால்நட் பர்ஃபி


தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்       1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:

பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துகள்

Saturday, October 18, 2014

சுகியன்



தேவையானவை:
கடலை பருப்பு- 2 கப்;
பொடித்த வெல்லம்- 2 கப்
தேங்காய் துருவல் 1 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
பச்சரிசி  1/2 கப்.
 உப்பு  1/4 tsp

எண்ணெய் தேவையானது

செய்முறை:


கடலைப் பருப்பை வேகவைத்து , மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
அரைத்து வைத்த விழுதை  அடுப்பில் வாணலியை  வைத்து வதக்கவும்.
தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி பாகு  பதம் வந்ததும்எடுத்து, அந்தப் பாகை வதக்கிய  கடலைப் பருப்பு,தேங்காய் மாவில் கொட்டி கலக்கி உருண்டைகளாக  உருட்டி வைத்துக்கொள்ளவும்.

 அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
தனித்தனியாக அரைத்து சிறிது  உப்புசேர்த்து கலக்கவேண்டும்.கலந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.

அடுப்பில் எண்ணெயை காய வைத்து அதில் உருண்டைகளை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து பொரிக்கவும்.


இந்த இனிப்பை நவராத்திரி பண்டிகையின் போது விஜயதசமி அன்று செய்து ஹயக்கிரீவருக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.    சுகியன்

Thursday, October 31, 2013

தீபாவளி வாழ்த்துகள்

                                 


     
                                        நன்றி கூடல்.காம்

Wednesday, October 30, 2013

தீபாவளி ஸ்பெஷல்-..5 கோதுமை பர்ஃபி -




தேவையானவை: 

கோதுமை மாவு 1 கப் 


பொடித்த வெல்லம் 1/2 கப்

கச கசா 1 டீஸ்பூன்

ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்

நெய் 1/4 கப்

செய்முறை:

ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் கச கசாவை சமமாக தூவவேண்டும்.

வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய்யை உருக்கி அதில் கோதுமைமாவை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

அடுப்பை ஸ்லிம்மில் வைத்து பொடித்த வெல்லத்தையும்,ஏலக்காய் தூளையும்,மீதியுள்ள நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.

Monday, October 28, 2013

தீபாவளி ஸ்பெஷல் ..4. தேன்குழல்



தேவையானவை:
 அரிசிமாவு 4 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
உளுத்தமாவு 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,உளுத்தமாவு,சீரகம்,நெய்,தேவையான உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து விட்டு ஒவ்வொரு குழலுக்கும் வேண்டிய மாவை அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் போட்டு எண்ணையில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவேண்டும்.

முதலில் போட்டது வெந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது குழலுக்கு மாவு பிசையவும்.
எல்லா மாவையும் முதலிலே பிசைந்தால் எண்ணையில் போடும் போது மிகவும் சிவந்து விடும்.

Sunday, October 27, 2013

தீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்




தேவையானவை:

கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்

செய்முறை:


.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில்
மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து
பாகை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
.வாணலியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள
குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால்
ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும்.
brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம்.

(நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல்
இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)

Saturday, October 26, 2013

தீபாவளி ஸ்பெஷல்...1.பாதாம் அல்வா.. 2.ரிப்பன் பக்கோடா...



 1.பாதாம் அல்வா


தேவையானவை:

பாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)
சர்க்கரை1 1/2 கப்
நெய் 1 கப்
குங்குமப்பூ சிறிது (optional)
ஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்
Lemon yellow colour 1/2 டீஸ்பூன்

செய்முறை:


பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

அடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.

அல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவேண்டும்
----------

 2. ரிப்பன் பக்கோடா

தேவையானவை:
கடலைமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
காரப்பொடி 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 தேக்கரண்டி
 வெண்ணைய் 1/4 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலைமாவு,அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலக்கவேண்டும்.
உப்பையும் பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விடவேண்டும்.
அதனுடன் காரப்பொடி,மிளகு தூள்,வெண்ணைய் எல்லாவற்றையும் தேவையான தண்ணீருடன் சேர்த்து கெட்டியாக பிசையவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் நாடா வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...