தேவையானவை:
கடலை பருப்பு- 2 கப்;
பொடித்த வெல்லம்- 2 கப்
தேங்காய் துருவல் 1 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
பச்சரிசி 1/2 கப்.
உப்பு 1/4 tsp
எண்ணெய் தேவையானது
செய்முறை:
கடலைப் பருப்பை வேகவைத்து , மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
அரைத்து வைத்த விழுதை அடுப்பில் வாணலியை வைத்து வதக்கவும்.
தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி பாகு பதம் வந்ததும்எடுத்து, அந்தப் பாகை வதக்கிய கடலைப் பருப்பு,தேங்காய் மாவில் கொட்டி கலக்கி உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
தனித்தனியாக அரைத்து சிறிது உப்புசேர்த்து கலக்கவேண்டும்.கலந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.
அடுப்பில் எண்ணெயை காய வைத்து அதில் உருண்டைகளை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து பொரிக்கவும்.
இந்த இனிப்பை நவராத்திரி பண்டிகையின் போது விஜயதசமி அன்று செய்து ஹயக்கிரீவருக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம். சுகியன்
6 comments:
சுழியன் இல்லா தீபாவளி கிடையாது.
அருமையான சுசியம், நாங்கள் அப்படித்தான் சொல்வோம்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி Yalpavanan Kasirajalingam
வருகைக்கு நன்றி Yalpavanan Kasirajalingam
@ கோமதி அரசு
வருகைக்கு நன்றி கோமதி அரசு தீபாவளி வாழ்த்துகள்
அருமையான குறிப்பு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html
Post a Comment