Thursday, August 28, 2008

காலிஃபிளவர் பக்கோடா

தேவையானவை:

காலிபிளவர் 1
கடலை மாவு 1 கப்
சோளமாவு 2 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
எலுமிச்சம்பழ சாறு 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க:
மிளகாய் வற்றல் 3
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்

செய்முறை:

காலிபிளவரை சிறு சிறு கொத்துக்களாக ஆய்ந்து பின்னர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு வேகவைக்கவும்.வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் எலுமிச்சம்பழ சாறு சேர்த்து அரைக்கவும்.
வடிகட்டிய காலிபிளவருடன் கடலைமாவு,சோளமாவு அரைத்த விழுது சிறிது உப்பு கலந்து நன்றாக பிசறி எண்ணையில் பொறித்து எடுக்கவும்.

Sunday, August 24, 2008

Bakar Vadi (Maharashtrian dish)

தேவையானவை:-

கடலைமாவு 3 கப்
சோளமாவு 1 1/2 கப்
மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
புளித்தண்ணீர் அரை கப்

பூரணம் செய்ய:

வெள்ளை எள் 1/4 கப்
துருவிய கொப்பரை 1/4 கப்
கசகசா 1/4 கப்
கொத்தமல்லி தழை சிறிதளவு
மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
மராட்டி மசாலா பொடி 2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி அரை டீஸ்பூன்
சர்க்கரை 2 டீஸ்பூன்
(மராட்டி மசாலா பொடி எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
எனினும் கீழே அதன் செய்முறை எழுதியிருக்கிறேன்)

செய்முறை:
முதலில் பூரணம் செய்துகொள்ளவேண்டும்.
வெள்ளை எள்,துருவிய கொப்பரை,கசகசா மூன்றையும் தனித்தனியாக
வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
இதனுடன் உப்பு,கொத்தமல்லித்தழை,மேலே குறிப்பிட்ட பொடி வகைகள்,
சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து பூரணம் செய்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் கடலைமாவு,சோளமாவு,உப்பு,மிளகாய்தூள் எல்லாவற்றையும் சேர்த்து
மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக வைக்கவும்.
ஒரு உருண்டையை எடுத்து வடை போல தட்டி அதன் மேல் புளித்தண்ணீர் தடவி
சிறிது பூரணம் வைத்து காலண்டர் அல்லது பேப்பர் சுருட்டுவதுபோல் சுருட்டி
ஓரங்களை சீல் செய்து எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
இது போல எல்லா உருண்டைகளையும் செய்யவும்.
இது ஒரு மாலை நேர சிற்றுண்டி.

மராட்டி மசாலா பொடி செய்யும் முறை:-

பூண்டு 6 பல்
தனியா 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 5
மிளகு 4
சீரகம் 1 டீஸ்பூன்
ஏலக்காய் 3
பட்டை 1 துண்டு
மராட்டி மொக்கு 1
ஜாதிக்காய் 1
எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்யவேண்டும்.
Labels: சமையல்

Saturday, August 23, 2008

வேர்க்கடலை அல்வா

தேவையானவை:

வேர்க்கடலை 2 கப் (வறுத்த வேர்க்கடலை)
வெண்ணைய் கால் கப்
பால் பவுடர் 1 கப்
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 கப்
vennila essence 1 drop
தண்ணீர் 1 கப்

செய்முறை:

வேர்க்கடலை தோலை உரித்துவிட்டு பொடியாக அரைக்கவும்.
பால் பவுடரை தண்ணீரில் கலந்து அதனுடன் பொடியாக்கிய வேர்க்கடலை
சர்க்கரை,வெண்ணைய் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்து விடாமல் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் திக்காக வந்தவுடன் ஏலப்பொடி,வெனிலா எஸன்ஸ் சேர்த்து
கிளறவும்.
ஒரு பெரிய தட்டை எடுத்து அதில் நெய் தடவி வேர்க்கடலை கலவையை ஊற்றி
ஆறினவுடன் வில்லை போடவும்

Thursday, August 21, 2008

பாதாம் மில்க் ஷேக்

தேவையானவை:

பாதாம் 15
ஏலக்காய் 8
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 10
கசகசா 1 டீஸ்பூன்
பால் 2 கப்
சர்க்கரை 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் 1 கப்

செய்முறை:-

பாதாம்பருப்பை இரவிலே ஊறவைத்து அடுத்தநாள் காலையில்
அரை கப் தண்ணீருடன் மிக்சியில் விழுது போல அரைக்கவும்.
ஏலக்காய் தோலை எடுத்துவிட்டு சோம்பு, மிளகு,கசகசாவுடன்
மீதியுள்ள தண்ணீருடன் ஒரு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டவும்..
பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் அரைத்துவைத்த விழுது.பால்,
சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து மிக்சியில் whipper ல் அடிக்கவும்.
சுவையான milk shake ready.

Lassi க்கு பாலுக்கு பதில் தயிர் சேர்க்கவும்.
rose essenceஇரண்டு துளி சேர்க்கவும்.

Tuesday, August 19, 2008

கசகசா குருமா

தேவையானவை:
பீன்ஸ் 15
காரட் 2
உருளைக்கிழங்கு 2
(மூன்றையும் நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் 1
தயிர் அரை கப்
உப்பு தேவையானது

அரைக்க:-
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 4
கசகசா 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி 6
தேங்காய் துருவல் அரை கப்

தாளிக்க:-
பட்டை,லவங்கம்,ஏலக்காய்,எண்ணைய்

செய்முறை:-

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டுநீட்டவாக்கில் நறுக்கிய காய்கறிகளை
சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக விழுதுபோல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
எண்ணைய் காயவைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன்வேகவைத்த காய்கறிகளையும்
உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
கடைசியில் தயிரை சேர்த்து கிளறி இறக்கவும்.

Sunday, August 17, 2008

Chilli Paneer

தேவையானவை:-

Paneer cubes ஒரு கப்
சோள மாவு 1 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,தண்ணீர் தேவையானது
எலுமிச்சம்பழ சாறு 1 டேபிஸ்பூன்
கொத்தமல்லிதழை அரை கப்

ஒரு bowl யை எடுத்துக்கொண்டு அதில் கீழ்குறிப்புட்டுள்ள பொருட்களை
போடவும்.

சீரகப்பொடி,இஞ்சிபூண்டு விழுது,தனியா பொடி,
chilli garlic sauce,பொடித்த மிளகு,காரப்பொடி,soya sauce,
எல்லம் அரை டீஸ்பூன்.
பூண்டு 4 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் 3 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:-

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சோள மாவு,மைதா மாவு,
இஞ்சிபூண்டு விழுது,சிறிது உப்பு எல்லாவற்றையும் அரை கப் தண்ணீர் விட்டு
பிசையவும்.அந்த கலவையில் Paneer cubes யை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக
எண்ணையில் பொறித்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு bowl ல் வைத்துள்ள எல்ல பொருட்களையும்
போட்டு நன்றாக வதக்கி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும்.உப்பு சேர்க்கவும்.
இறக்கினவுடன் எலுமிச்சம்பழ சாறை விடவும்.
வருத்த paneer cubes யை இதில் சேர்த்து நன்கு பிரட்டவும்.
கடைசியில் கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி தூவவும்.

Friday, August 15, 2008

அவியல்

தேவையானவை:
கீழ்கண்ட காய்கறிகளை நீட்டவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவேண்டும்

1.சேனைக்கிழங்கு 1 கப்
2.காராமணி 1 கப்
3.கத்திரிக்காய் 1கப்
4.முருங்கைக்காய் 1 கப்
5.காரட் 1 கப்
6.வாழைக்காய் 1 கப்
7.கறிவேப்பிலை ஒரு கொத்து
8.தயிர் 1 கப்

அரைக்க:
தேங்காய் 1 கப் (துறுவியது)
பச்சைமிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாய் எடுத்துக்கொண்டு தேங்காயெண்ணையில் சீரகம் கறுவேப்பிலை
தாளிக்கவும்.
பின்னர் காய்கறிகளை வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்
அரைத்து வைத்த விழுதை போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனபின் தயிரை விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்

Wednesday, August 13, 2008

Vegetable Pulao

தேவையானவை:-

பாசுமதி அரிசி 2 கப்
உருளைக்கிழங்கு 2 (தோல் நீக்கி) சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)
பீன்ஸ் கால் கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
காரட் கால் கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
பச்சை பட்டாணி கால் கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கவும்)
தயிர் 2 டேபிள்ஸ்பூன்
கேசரி பவுடர்,குங்குமப்பூ சிறிதளவு

மசாலா சாமான்:-
கிராம்பு,ஏலக்காய்,பட்டை,கசகசா,பிரிஞ்சி இலை,சோம்பு
எல்லாம் சிறிதளவு.

ஒரு bowlஐ எடுத்துக்கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை
போடவும்:
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
மிளகு (crushed) 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2 (பொடியாக நறுக்கியது
புதினா ஒரு கொத்து
கொத்தமல்லி தழை ஒரு கொத்து
காரப்பொடி ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் ஒர் டீஸ்பூன்

செய்முறை:-

அரிசியை மூன்று கப் தண்ணீரில்அரை மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு சிறிது நெய் விட்டு மசாலா சாமான்களை வறுக்கவும்.
பின்னர் வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும்.
bowl லில் வைத்துள்ள பொருட்களை போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் எல்லா காய்கறிகளையும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன்
கொதிக்கவைக்கவும்.
கடைசியில் இறக்கும்போது தயிர் விடவும்.
ஊறின அரிசியோடு காய்கறிக் கலவையை சேர்த்து Electric cooker ல் வைக்கவும்.
keep warm வந்ததும் கேசரிபவுடர்,குங்குமப்பூ இரண்டையும் சிறிது வென்னீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை புலவில் சேர்க்கவும்.

Tuesday, August 12, 2008

ஆப்பிள் அல்வா

தேவையானவை:-

ஆப்பிள் துறுவியது 1 கப் (தோலை சீவி துறுவவேண்டும்)
சர்க்கரை கால் கப்
பால் கால் கப்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
ஏல்க்காய் பொடி 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு 10
கேசரி பவுடர் 1 டீஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு

செய்முறை:-

முந்திரிபருப்பை நெய்யில் வறுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது நெய் விட்டு
துறுவிய ஆப்பிளை வதக்கவும்.
பின்னர் பால் சேர்த்து வேகவைக்கவும்.இரண்டு நிமிடத்தில்
நன்றாக வெந்துவிடும்.அதனுடன் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
மீதமுள்ள நெய்யை விட்டு நன்கு கிளறவும்.
வாணலியில் ஒட்டாமல் வந்தவுடன் இறக்கவும்.
வறுத்த முந்திரிபருப்பு சேர்த்து கேசரிபவுடரையும்
குங்குமப்பூவையும் சிறிது பாலில் கலந்து போடவும்.

Sunday, August 10, 2008

பூண்டு காரக்குழம்பு

தேவையானவை:

பூண்டு 20 பல்
புளி ஒரு எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணய் 1/4 கப்
உப்பு தேவையானது
வெல்லம் சிறிதளவு
அரைக்க:-
மிளகாய் வற்றல் 10
மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
தனியா ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்
துவரம்பருப்பு அரைடீஸ்பூன்
வெந்தயம் கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
தேங்காய் துருவல் ஒரு கப்

தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம்,பெருங்காயம்
கறிவேப்பிலை.

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு கால் கப் நல்லெண்ணையை விட்டு
நன்கு காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பின்னர் பூண்டை நன்றாக உரித்து வாணலியில் போட்டு வதக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்து விழுதுபோல
அரைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து அரைத்த விழுதோட சேர்த்து வதக்கிய
பூண்டோட சேர்க்கவும்.
அதனுடன் தேவையான உப்பும்,தண்ணீரும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் வெல்லத்தை போட்டு இறக்கவும்.

Friday, August 8, 2008

மாதுளை ரசம் (கர்ப்பிணிகளுக்கு)

தேவையான பொருட்கள்

1.பழுத்த மாதுளை 2 (பிழிந்து சாறு எடுத்து வைக்கவேண்டும்)
2.மிளகு 8
3.சீரகம் 1 ஸ்பூன்
4.தக்காளி 1
5.உப்பு தேவையானது
6.கொத்தமல்லிதழை சிறிதளவு
7.மஞ்சள் தூள்,பெருங்காயம்,நெய் மூன்றும் தேவையான அளவு

செய்முறை:

1.மாதுளையின் சாறு எடுத்து அதில் மிளகு,சீரகம் வறுத்து போடவேண்டும்.
2.உப்பு,மஞ்சத்தூள்,பெருங்காயம்,அரை கப் தண்ணிர்,நறுக்கிய தக்காளி
எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து சிறிது கொதிக்கவிடவும்
3.இறக்கியவுடன் மல்லித்தழை சேர்த்து நெய்யில் கடுகு தாளிக்கவேண்டும்.

இந்த ரசம் கர்ப்பிணிகளுக்கு மிகவும் சத்தானது.
வாந்தி,குமட்டல் ஏற்படாது.

Monday, August 4, 2008

சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை

சுக்குடன் பால் சேர்த்து மையாக அரைத்து மூட்டில் தடவ மூட்டுவலி மறையும்.

சுக்குப்பொடியுடன் எலுமிச்சம்பழ சாற்றினை கலந்து பருக பித்தம் குறையும்.

சளி குணமாக சுக்குடன் மிளகு,தனியா,திப்பிலி,சித்தரத்தை சேர்த்து
கஷாயம் வைத்து சாப்பிடவேண்டும்.

வாயுத்தொல்லை அகல சுக்குடன் வெற்றிலையை மெல்லவேண்டும்.

சுக்குடன் நீர் தெளித்து மையாக அரைத்து தடவ தலைவலி போகும்.

சுக்குடன் கருப்பட்டி,மிளகு சேர்த்து சாப்பிட உடல் சோர்வு நீங்கும்.

வாந்தி குமட்டல் நீங்க சுக்குடன் துளசி சேர்த்து சாப்பிடவேண்டும்.

சுக்கு,மிளகு,சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து பூசி வர தொண்டைகட்டு மாறும்.
குரல் இயல்பு நிலைக்கு வரும்.

சுக்குடன் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் மலக்குடல் கிருமிகள் அழியும்.

சுக்கு அதிமதுரம் இரண்டையும் பொடி பண்ணி தேனுடன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் நீங்கும்.

தயிர்சாதத்துடன் சுக்குப்பொடி கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் குறையும்.

Saturday, August 2, 2008

காரட் கோஃப்தா

தேவையானவை:

கேரட் 3
கடலைமாவு 1 கப்
பச்சைமிளகாய் 4
ரொட்டித்தூள் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது.

Gravy செய்வதற்கு தேவையானது:

தக்காளி 6
வெங்காயம் 4
இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,தனியாதூள்,
மசலா பொடி ஒவ்வொன்றும் ஒரு டீஸ்பூன்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது.

செய்முறை:

கேரட் தோலை சீவி துருவி நீரை பிழியவும்..
பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
கடலைமாவை சலித்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து,
அதனுடன் கேரட்,பச்சைமிளகாய் கலந்து சிறிது தண்ணீர்
தெளித்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
உருண்டைகளை ரொட்டித்தூளில் பிரட்டி எண்ணயில்
பொறித்து எடுக்கவும்.இதனை தனியே ஒரு பேப்பரில் பரவலாக போடவும்
அடுத்து

Gravy செய்யும் முறை:
கொதிக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தக்காளிகளை
போட்டு இரண்டு நிமிடம் வைக்கவும்.
தோல் தனியே கழன்று விடும்.
சதைப்பகுதியை மிக்சியில் அரைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன்
தக்காளி விழுது,
இஞ்சிபூண்டு விழுது,
மிளகாய் தூள்,தனியாதூள்,மசாலா பொடி
தண்ணீர்,உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தயாராக வைத்துள்ள உருண்டைகளை
gravy ல் மெதுவாக போடவேண்டும்.
.

Friday, August 1, 2008

எலுமிச்சம்பழ ரசம்

தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்
தக்காளிப்பழம் 2
எலுமிச்சம்பழம் 1
கடுகு 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் 1 சிறிய துண்டு
தனியா,மிளகு,சீரகம் ஒவ்வொன்றும் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையாந்து
கொத்துமல்லி தழை ஒரு கொத்து
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:

துவரம்பருப்பை குக்கரில் ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்.
தக்காளிப்பழத்தை இரண்டு கப் தண்ணீரில் நன்கு பிசைந்து
அதில் ரசப்பொடி,உப்பு,பெருங்காயம் இவற்றைக் கலந்து கொதிக்கவைக்கவும்.
நன்கு கொதித்தவுடன் வேகவைத்த பருப்பை அதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
பின்னர் கொத்தமல்லி தழை,கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணய் சேர்க்காமல் தனியா,மிளகு இரண்டையும் வறுத்து
சீரகத்தை பச்சையாக வைத்து பொடி செய்து ரசத்தில் தூவவும்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.
கடுகு தாளித்துக்கொட்டவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...