தேவையானவை:
புழுங்கலரிசி 1 கப்
பச்சரிசி 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
வெந்தயம் 1 டேபிள்ஸ்பூன்
------
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
உப்பு,எண்ணைய் தேவையானது
---------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
புழுங்கலரிசி,பச்சரிசி,உளுத்தம்பருப்பு,வெந்தயம் நான்கையும் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
தேவையான உப்பை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.நான்கு மணிநேரம் கழித்து
அதில் வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.
----
குழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால் ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி எடுக்கவேண்டும்.
வெங்காய்ம்,தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.