Wednesday, January 27, 2016

சிவப்பு குட மிளகாய் சட்னி



தேவையானவை:

சிவப்பு குடமிளகாய் 1

வெங்காயம் 1

தக்காளி 1

பூண்டு 2 பல்

இஞ்சி 1 துண்டு

புளி சிறிதளவு

சிவப்பு மிளகாய் 3

உப்பு,எண்ணய் தேவையானது

---------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

சீரகம் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

-------

செய்முறை:
  • சிவப்பு குட மிளகாயை பொடியாக நறுக்கி சிறிது எண்ணையில் வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பூண்டு,இஞ்சி நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணையில் வதக்கிக்கொள்ளவும்.

சிவப்பு மிளகாய்,புளி இரண்டையும் தனித்தனியே எண்ணையில் வறுத்துக்கொள்ளவும்.

எல்லாவற்றையும் தேவையான உப்புடன் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.

கடைசியில் கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

சிவப்பு குட மிளகாய் சட்னி இட்லி,தோசை,பொங்கல் ஆகியவற்றிற்கு ஏற்ற sidedish.

Tuesday, January 19, 2016

INSTANT புடலங்காய் உசிலி



தேவையானவை:
புடலங்காய் 2  கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
--------
வேர்க்கடலை 10
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல் 3
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:


புடலங்காயை உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து பிசறி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
வேர்க்கடலை,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் நான்கையும் எண்ணெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து புடலங்காயை நன்றாகப் பிழிந்து போடவும்.
புடலங்காய் வெந்தவுடன் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து சிறிது பிரட்டவும்.

சுவையான புடலங்காய்  உசிலி ரெடி.

Monday, January 11, 2016

வேர்க்கடலை, கடுகு சட்னி



தேவையானவை:

வேர்க்கடலை   1 கப்
கடுகு           1மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1/2 கப்
மிளகாய் வற்றல்  3
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
--------

செய்முறை:


முதலில் கடுகை வெறும் வாணலியில் போட்டு வெடிக்கவிடவும். தனியே எடுத்துவைக்கவும்.
பின்னே வேர்க்கடலை,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் எண்ணெய்யில் வறுக்கவும்.
வறுத்த பருப்புகளுடன் வெடிக்க வைத்த கடுகு,தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
தாளிக்க வேண்டியவைகள தாளிக்கவும்.
இட்லி தோசைக்கு ஏற்ற ருசியான சட்னி ரெடி.


Monday, January 4, 2016

பழக்கலவை சாட்



தேவையானவை:

ஆப்பிள் துண்டுகள்  1/2 கப்
வாழைப்பழ துண்டுகள் 1/2 கப்
அன்னாசி துண்டுகள் 1/4 கப்
பப்பாளிப்பழ துண்டுகள் 1/2 கப்
மாதுள முத்துகள் 1/2 கப்
திராட்சை  1/2 கப்
வெள்ளரிக்காய் துண்டுகள் 1/4 கப்
உருளைக்கிழங்கு (வேகவைத்தது) 12 கப் (நறுக்கிய துண்டுகள்)
பச்சைமிளகாய் 2 (பொடியாக நறுக்கியது)
பச்சைமிளகாய் சட்னி 1 மேசைக்கரண்டி
பேரீச்சம்பழ சட்னி 1 மேசைக்கரண்டி
சாட் மசாலா 1 தேக்கரண்டி
சீரகப்பவுடர் 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
எலுமிச்சம்பழ ஜுஸ் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:

ஒர் அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மேலே கூறியவைகளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
சுவையான " பழக்கலவை சாட் ' ரெடி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...