தேவையானவை:
புடலங்காய் 2 கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
--------
வேர்க்கடலை 10
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல் 3
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:
புடலங்காயை உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து பிசறி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
வேர்க்கடலை,பொட்டுக்கடலை,மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் நான்கையும் எண்ணெய்யில் வறுத்து பொடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து புடலங்காயை நன்றாகப் பிழிந்து போடவும்.
புடலங்காய் வெந்தவுடன் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து சிறிது பிரட்டவும்.
சுவையான புடலங்காய் உசிலி ரெடி.
4 comments:
அருமை! பகிர்வுக்கு நன்றி!
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
நன்றி. ‘தளிர்’ சுரேஷ்.
நன்றி.
Jeevalingam Yarlpavanan Kasirajalingam.
Post a Comment