தேவையானவை:
அரிசி மாவு 1கப்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
---
அரைக்க:
துவரம்பருப்பு 1/4 கப்
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் 2
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து அரிசி மாவை பரவலாக தூவி கட்டிதட்டாமல் கிளறவும்.
கிளறிய மாவு ஆறியவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியே எடுத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரை மணிநேரம் ஊறவைத்து வடிகட்டி கரகரப்பாக அரைக்கவும்.அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கவேண்டியவைகளை தாளித்து ஆவியில் வைத்து எடுத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.உதிரியாக வரும்.பின்னர் தயாராக உள்ள மணி கொழுக்கட்டைகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து வைக்கவும்.
பள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு அருமையான மாலை நேர சிற்றுண்டி இது.