Tuesday, August 26, 2014

முருங்கை..முந்திரி..குருமா



தேவையானவை:

முருங்கைக்காய் 5
வெங்காயம் 2
பூண்டு 5 பல்
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
அரைக்க:
முந்திரிப் பருப்பு 10
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1/2 கப்
பச்சைமிளகாய் 2
---
தாளிக்க:

தேங்காயெண்ணய் 1 மேசைக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 5
கறிவேப்பிலை ஒருகொத்து
------

செய்முறை:


முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளேயிருக்கும் கதுப்பை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம்,பூண்டு,பச்சைமிளககாய்,இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் முந்திரிபருப்பு,கசகசா இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய்.பச்சைமிளகாயுடன் விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.
-------
அடுப்பில் கடாயை வைத்து பொடியாக நறுக்கியுள்ள வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் முருங்கைக்காய்   கதுப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது வதக்கி தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து தேங்காயெண்ணையில் கடுகு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து குருமாவுடன் சேர்க்கவேண்டும்.

முருங்கை..முந்திரி..குருமா பூரி,சப்பாத்திக்கு ஏற்ற sidedish.

Monday, August 18, 2014

கறுப்பு உளுந்து இட்லி



 தேவையானது:

இட்லி ரவா  4 கப்
 கறுப்பு உளுத்தம்பருப்பு  2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது

செய்முறை:


 கறுப்பு உளுத்தம்பருப்பை  24 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
வெந்தயத்தை தனியே ஊறவைக்கவேண்டும்.

------
உளுந்து ஊறியதும் உளுந்து,வெந்தயம்   இரண்டையும் சேர்த்து கிரைண்டரில் 45 நிமிடம் அரைக்கவேண்டும்.

இட்லி ரவாவை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் விட்டு இட்லிக்கு தேவையான உப்பை அதனுடன் சேர்த்து கெட்டியாக பிசற வேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும்.(உளுந்தை அரைக்க ஆரம்பிக்கும் போது இட்லி ரவாவை ஊறவைத்தால் போதும்)
உளுந்தை அரைத்தவுடன் பிசறிய இட்லி  ரவாவில் இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.(கலந்த மாவை மீண்டும் கிரைண்டரில் அரைக்கக்கூடாது)
இந்த மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவேண்டும்.
இந்த இட்லி மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

Friday, August 15, 2014

Baked சாமை (little millet )உப்பு சீடை



தேவையானவை:

சாமை 1 கப்
உளுத்தமாவு 2 மேசைக்கரண்டீ
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
எள் 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
baking soda 1/2 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:


சாமை சிறுதானியத்தை வெறும் வாணலியில் நன்கு சிவக்க வறுத்து மாவாக பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்
உளுத்த மாவையும் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காய் துருவலை லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவாக பொடி பண்ணிய சாமை,உளுத்தமாவு,வெண்ணெய்,எள்,தேங்காய் துருவல்,பெருங்காயத்தூள்,baking soda, தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.பிசிந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு துணியில் பரவலாக போடவேண்டும்.
-------
ovan ஐ 200° யில் pre heat பண்ணி 10 நிமிடம் வைக்கவும்.
அதை எடுத்து நன்கு கிளறி விட்டு மீண்டும் 10 நிமிடம் வைக்கவும்.
 பின்னர்  300° யில்  preheat பண்ணி மீண்டும் 10 நிமிடம் வைக்கவும்.
 கோகுலாஷ்டமி க்கு சுவையான சாமை சீடை ரெடி.

Monday, August 11, 2014

சீரக சாதம்




தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 4
புதினா சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
வெங்காயம் 1
உப்பு தேவையானது

செய்முறை:


பாசுமதி அரிசியை  இரண்டு கப் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,புதினா,கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.

 இதனை ஊறவைத்த பாசுமதி அரிசியுடன் உப்புடன் கலந்து அப்படியே

ele.cooker ல் வைக்கவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி சிறிது வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து சீரக சாதத்துடன் சேர்க்கவேண்டும்.

Tuesday, August 5, 2014

தேங்காய் பால் வெஜ் குருமா



தேவையானவை:
பீன்ஸ்   1 கப் (பொடியாக நறுக்கியது)
காரட்   1 கப் (பொடியாக நறுக்கியது)
பட்டாணி 1 கப்
சோளம் (கார்ன்) 1 கப்
தேங்காய் பால் 2 கப்
-----------------------
அரைக்க:
தனியா 1 மேசைக்கரண்டி
மிளகு 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
பூண்டு 2 பல்
புதினா சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
கசகசா 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
முந்திரிபருப்பு 10
-------------------
தாளிக்க:
கறிவேப்பிலை
----------------
செய்முறை:


அரைக்கக் கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

அடுப்பில் சிறிது தண்ணீர் வைத்து காய்கறிகள் எல்லாவற்றையும் வேகவைக்கவேண்டும்.
காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை உப்பு, சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
இந்த குருமா சப்பாத்தி,பூரி இரண்டுக்கும் ஏற்ற side dish.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...