Wednesday, October 29, 2014

தக்காளிக்காய்-பூசணி கூட்டு



தேவையானவை:

தக்காளிக்காய் 10
பூசணி துண்டுகள் 10
கடலைப்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
அரைக்க:
பச்சைமிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
-----
தாளிக்க:
தேங்காயெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:


கடலைப்பருப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து கடலைப்பருப்பை வேகவைக்கவேண்டும்.
சிறிது வெந்ததும் நறுக்கிய தக்காளிக்காய்,பூசணித்துண்டுகளை அதனுடன் தேவையான உப்புடன் வேகவைக்கவேண்டும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்த்து சிறிது நேரம் கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்.
தேங்காயெண்ணெயில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.

Sunday, October 26, 2014

Healthy சாலட்



தேவையானவை:

கார்ன் 1 கப்
Black Bean 1கப்
காராமணி 1 கப்
வெள்ளரிக்காய் 2
குடமிளகாய் 1 (சிவப்பு)
அவகோடா 1
முளைக்கட்டின பயறு 1 கப்
சாட் மசாலா 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை ஜூஸ் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானவை
------
செய்முறை:


கார்ன்,Black Bean,காராமணி மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவேண்டும்.
வெள்ளரிக்காய், சிவப்புகுடமிளகாய் இரண்டையும் சற்றே பெரிதாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த கார்ன்,Black Bean,காராமணி,நறுக்கி வைத்த வெள்ளரிக்காய்,குடமிளகாய்,முளைகட்டின பயறு,சாட் மசாலா தேவையான உப்பு சேர்த்து குலுக்கவேண்டும்.
கடைசியில் அவகோடாவின் தோலை எடுத்து விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து எலுமிச்சம்பழ ஜூஸை சேர்க்கவேண்டும்.

இரவு டின்னர் ஹெவியாக இருக்கவேண்டாம் என்று எண்ணுபவர்கள் இந்த சத்துமிக்க சாலட்டை சாப்பிடலாம்.

Sunday, October 19, 2014

பாதாம் வால்நட் பர்ஃபி


தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட்       1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:

பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.

15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.

பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துகள்

Saturday, October 18, 2014

சுகியன்



தேவையானவை:
கடலை பருப்பு- 2 கப்;
பொடித்த வெல்லம்- 2 கப்
தேங்காய் துருவல் 1 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
பச்சரிசி  1/2 கப்.
 உப்பு  1/4 tsp

எண்ணெய் தேவையானது

செய்முறை:


கடலைப் பருப்பை வேகவைத்து , மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
அரைத்து வைத்த விழுதை  அடுப்பில் வாணலியை  வைத்து வதக்கவும்.
தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி பாகு  பதம் வந்ததும்எடுத்து, அந்தப் பாகை வதக்கிய  கடலைப் பருப்பு,தேங்காய் மாவில் கொட்டி கலக்கி உருண்டைகளாக  உருட்டி வைத்துக்கொள்ளவும்.

 அரிசியையும் உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும்.
தனித்தனியாக அரைத்து சிறிது  உப்புசேர்த்து கலக்கவேண்டும்.கலந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.

அடுப்பில் எண்ணெயை காய வைத்து அதில் உருண்டைகளை ஒவ்வொன்றாக தோய்த்து எடுத்து பொரிக்கவும்.


இந்த இனிப்பை நவராத்திரி பண்டிகையின் போது விஜயதசமி அன்று செய்து ஹயக்கிரீவருக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.    சுகியன்

Wednesday, October 15, 2014

Eggless கொத்து பரோட்டா



தேவையானவை:

பரோட்டா 3
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
முட்டைக்கோஸ் 2 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
சீரகம் 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு

-------
செய்முறை:



பரோட்டாவை நன்றாக சிறிது சிறிதாக பிய்த்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயம்,தக்காளி வதக்கி அதனுடன் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்.பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கி பிய்த்து வைத்த பரோட்டாவை சேர்த்து சிறிது நேரம் தோசை திருப்பியால் கொத்தவேண்டும். அடுப்பை ஸிம்மில்
வைத்து சிறிது நேரம் எல்லாவற்றையும் சேர்த்து கொத்தி அடுப்பை அணைக்கவேண்டும்.

Sunday, October 12, 2014

சிறுதானியங்கள் (Millets)உண்ண வேண்டியது ஏன்?




"உணவே மருந்து" என்பார்கள் நமது முன்னோர்கள்.அதற்கு அவர்கள் உணவில் இருந்த ஊட்டச்சத்துக்களே காரணம்.

ஆனால், வளரும் இளைஞர்களோ இன்று மருந்தையே உணவாக உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.இதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பவை, உடல் உழைப்புக் குறைவு, மாறி வரும் உணவுப் பழக்கம்."ஃபாஸ்ட் ஃபுட்" கலாச்சாரம் தான்.இவை  அனைத்தும் நோய்களுக்கும் ஆதாரமாய் மாறி வருகிறது.

சிறுதானியங்களைச் சமைத்துச் சாப்பிடுபவர்கள் இன்றும் கிராமங்களில் இருக்கின்றனர்.அவர்களிடம் நீரிழிவு,உடல் பருமன், இதய நோய் போன்ற உபாதைகள் இல்லை.

அரிசி, கோதுமையைத் தவிர்த்து  சிறு தானியங்கள் என்றால் நமக்கு உடன் ஞாபகத்திற்கு வருவது கேழ்வரகுதான்.ஆனால், அதைத் தாண்டி, சாமை,வரகு,குதிரைவாலி,தினை, கம்பு ஆகியவையும் சிறுதானிய வகையைச் சேர்ந்தன ஆகும்.

நம்மில் பலருக்கு சிறுதானியங்களை சமைப்பது எப்படி? அதனால் என்னென்ன சமைக்கலாம்? என்றெல்லாம் தெரியவில்லை.ஆனால்...அரிசியிலும், கோதுமையிலும் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் சிறுதானியங்களிலும் சமைக்கலாம்.

உதாரணத்திற்கு, சாமை தயிர் சாதம்,குதிரைவாலி பொங்கல் முதலியன.சிறுதானியங்களை சமைக்கையில் கவனத்தில் நாம் கொள்ள வேண்டியவை...அவை அளவிலும் சிறிதாக இருப்பதால் தேவையான தண்ணீர்,வேகவிடும் நேரம்,பக்குவம் ஆகியவை தெரிய வேண்டும்.ஆனால் நாளாவட்டத்தில் இந்த பக்குவம் நமக்குத் தெரிந்துவிடும்.

இந்த சிறுதானியங்களில், இரும்பு,மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்றவை உள்ளன.இத்தானிய உணவு வகைகள் குளுக்கோசை சிறிது சிறிதாக நீண்ட நேரத்திற்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது."குளூட்டன்" இத்தானியங்களில் அறவே இல்லை.

அரிசி,கோதுமை போன்ற உணவை உண்ணுகையில் உண்டாகும் அசிடிட்டி, உடல் பருமன், புற்றுநோய் ஆகியவை சிறுதானியங்கள் உண்ணும்போது ஏற்படுவதில்லை.

ராகி, கம்பு  போன்ற தானியங்கள் ட்ரைகிளிசிரைட் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.உணவின் செரிமானமும் எளிதில் நடைபெறுகிறது.

இனி ஒவ்வொரு சிறுதானியங்களின் சிறப்பைக் காணலாம்..

சிறுதானியங்களில் அதிக சக்தி மிகுந்தது கேழ்வரகு (Ragi,finger millet).இதில் புரதம்,தாது உப்பு,சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து உள்ளது.இதை உண்ணுவதால் உடல்வலிமை அதிகரிக்கும்.சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

சாமை (little millet), மலச்சிக்கலைப் போக்கும், ஆண்மை குறைபாடை நீக்கும்

கம்பு,( pearl millet) ஆரோக்கியமான தோலுக்குச் சிறந்தது.கண்பார்வைக்கு முக்கியமான வைட்டமின் ஏ உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டின் உள்ளது.நல்ல கொழுப்பு இதில் 70 சதவிகிதம் உள்ளது.

வரகில் (kodo millet), புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.இது உடல் எடையைக் குறைக்கும்.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.வரகைக் கோயில் கும்பத்தில் வைப்பார்கள்.ஏனெனில் அதற்கு இடியையும் தாங்கும் சத்து உள்ளதால் தான்.வரகு, சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.மூட்டுவலியை நீக்குகிறது.கல்லீரல் செயல்பாடுகளைத் தூண்டி..கண், நரம்பு நோய்களைத் தாக்கும் குணம் கொண்டது இத் தானியம்.

குதிரைவாலியில் (banyard millet) நார்ச்சத்து அதிகம்.நம் அன்றாடத் தேவைக்கான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.முக்கியமாக எலும்புக்கு வலு சேர்க்கும் தானியம் இது.கனிமச்சத்தும், பாஸ்பரசும் நம் உடலுக்கு அவசியமான சத்து.இது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு ,பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாற்றுகிறது.

தினை (foxtail millet) சத்துமிக்கது.இதயத்தை வலிமைப் படுத்துவதில் இத்தானியம் முதலிடம் வகிக்கிறது.

ஆகவே நண்பர்களே! மருந்து வாங்கச் செலவிடும் பணத்தில் சிறுதானியங்களை வாங்கிச் சமைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்களும் வளமாக வாழ்வதுடன்..உங்களது அடுத்தத் தலைமுறையையும் ஆரோக்கியத்துடன் உருவாக்குங்கள்.

Thursday, October 9, 2014

குதிரைவாலி பிரிஞ்சி



தேவையானவை:

 குதிரைவாலி 1 கப்

பீன்ஸ் 10

காரட் 2

உருளைக்கிழங்கு 1
வேகவைத்த காராமணி 1/2 கப்

பட்டாணி 1/4 கப்
பச்சைமிளகாய் 2

தேங்காய்பால் 1 கப்
தண்ணீர் 1 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானவை

-------

அரைக்க:

சோம்பு 1 டீஸ்பூன்

கசகசா 1/2 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பூண்டு 4 பல்

-----

தாளிக்க:

பட்டை 1 துண்டு

லவங்கம் 2

------

செய்முறை:


குதிரைவாலி அரிசியை நெய்யில் நன்றாக வறுக்கவேண்டும்..

பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைக்கவும்.

----

கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,வேகவைத்த காராமணி

பட்டாணி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வதக்கவேண்டும்.அரைத்த விழுது,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வறுத்த குதிரைவாலி அரிசியுடன் தேங்காய்பால் 1 கப்.தண்ணீர் 1  கப் வதக்கிய காய்கறி கலவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து ele.cookerல்

வைக்கவேண்டும்.

onionரெய்தா,குருமா இரண்டும் இதற்கு ஏற்றது.

Sunday, October 5, 2014

ராகி ரொட்டி




தேவையானவை:

ராகி மாவு 3 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 2
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:


அடுப்பில் கடாயை வைத்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் சிறிது எண்ணெய்,உப்பு சீரகம் சேர்த்து அதனுடன் ராகி மாவை பரவலாகத் தூவி கிளறவேண்டும்.அடுப்பை அணைத்துவிட்டு கிளறிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,தேங்காய் துருவல்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து பிசையவேண்டும்.(வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்,)

கிளறிய மாவை உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் (அல்லது பிளாஸ்டிக் பேப்பரில்) சிறிது எண்ணெய் தடவி
கையால் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவேண்டும்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...