Tuesday, August 30, 2016

கத்திரிக்காய் கொத்சு




தேவையானவை:

பெரிய கத்திரிக்காய் 1
புளி எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
எள்ளு பொடி 1 மேசைக்கரண்டி
---
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

பெரிய கத்திரிக்காயின் மேல் கொஞ்சம் எண்ணைய் தடவி அடுப்பில் சுட வேண்டும்.
பின்னர் தோலுரித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து சிறிது தண்ணீர் விட்டு
விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
புளி நன்றாகக் கொதித்தவுடன் அரைத்த விழுதினை சேர்க்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் கத்திரிக்காய் விழுதினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் எள்ளுப்பொடி தூவி அடுப்பை அணைக்கவும்.
மிகக் காரமாக உணர்ந்தால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

வெண்பொங்கல்,அரிசி உப்புமா இரண்டிற்கும் ஏற்ற side dish இது.

Monday, August 22, 2016

பீர்க்கங்காய் கூட்டு



தேவையானவை:
பீர்க்கங்காய் 1
 காராமணி 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
------
செய்முறை:
பீர்க்கங்காயை  தோலுரித்து  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில்  வாணலியை வைத்து   காராமணியை நன்றாக வறுத்து மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும் காராமணி வெந்ததும் பீர்க்கங்காயை தேவையான  உப்புடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
(பீர்க்கங்காய் சீக்கிரம் வெந்துவிடும்)

தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் ,இஞ்சி இவற்றை விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

Tuesday, August 16, 2016

தேங்காய் பால் புலாவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
தேங்காய் பால் 2 கப்
------
வெங்காயம் 2
தக்காளி 2
இஞ்சிபூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை 1 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-----
தாளிக்க:

வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
கிராம்பு 2
ஏலக்காய் 2
பட்டை 1 துண்டு
----

செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காய்ம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு,ஏலக்காய் பட்டை மூன்றையும் வெண்ணையில் தாளித்து அதில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.அதனுடன் தக்காளி, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்,

தேவையான உப்பு  சேர்த்து ஊறவைத்த அரிசியை வடிகட்டி இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். கொத்தமல்லித்தழையை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.

குக்கரில்  வைக்கும்  பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசி கலவையுடன் தேங்காய் பால் இரண்டு கப் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைக்கவேண்டும்.

 Electric cooker  ரிலும் வைக்கலாம்.

Monday, August 8, 2016

கடலைக் கூட்டு

தேவையானவை:
 நிலக்கடலை 1/2 கப்
கொண்டக்கடலை 1/2 கப்
பட்டாணி 1/2 கப்
ராஜ்மா 1/2 கப்
மொச்சை 10
காராமணி  1/2 கப்
பச்சைபயறு 1/2 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
-------


அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்  4
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
எல்லா கடலை வகைகளையும் தண்ணீரில் ஆறு மணிநேரம் ஊறவைக்கவேண்டும். ஊறவைத்ததை குக்கரில் சிறிது உப்புடன் சேர்த்து வைத்து நான் கு    விசில் வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவல், சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.






Tuesday, August 2, 2016

சுரைக்காய் கூட்டு



தேவையானவை:
சுரைக்காய் 1
கடலைப்பருப்பு 1/2 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 2
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:
சுரைக்காயை தோலுரித்து  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து கடலைப்பருப்பை நன்றாக வேகவைக்கவேண்டும்.
கடலைப்பருப்பு நன்றாக வெந்ததும்   சுரைக்காய் துண்டுகளை மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும். சுரைக்காய் சீக்கிரம் வெந்துவிடும்.
தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் நான்கையும் விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

சுரைக்காய் கூட்டை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.
பூரி சப்பாத்திக்கும் ஏற்றது.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...