தேவையானவை: திணை
திணை 1 கப்
வெங்காயம் 1
காரட் 2
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சைமிளகாய் 2
மஞ்ச்ள்பொடி 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
-------
செய்முறை:
திணையை எண்ணெய் விடாமல் வாணலியில் 5 நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் திணையை சேர்க்கவும்.
சிறிது உப்பு சேர்த்து திணை வெந்ததும் ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்,
கடாயை அடுப்பில் வைத்து
சிறிது எண்ணெயில் கடுகு சீரகம் பொரிக்கவேண்டும்.
அதனுடன் மஞ்சள்பொடி,இஞ்சி பூண்டு விழுது,குறுக்கே வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவேண்டும்.
பட்டாணி,பொடியாக நறுக்கிய காரட்,உருளைக்கிழங்கு தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவேண்டும்.
காய்கறிகள் எல்லாம் நன்கு வெந்தவுடன் வேகவைத்த திணையை சேர்க்கவேண்டும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து உப்புமாவை நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கழித்து அணைக்கவேண்டும்.
எலுமிச்சம்பழச் சாறை சற்று ஆறியதும் பிழயவும்.
கொத்தமல்லிதழையை மேலே அலங்கரிக்கவும்.