Monday, April 10, 2023

36 எரிசேரி

 தேவையானவை:

சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

மிளகு தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

———-

அரைக்க:

மிளகாய் வற்றல் 2

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

மிளகு 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

————

தாளிக்க:

தேங்காயெண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல் 1

கறிவேப்பிலை சிறிதளவு

————-

செய்முறை:

அரைக்ககொடுத்துள்ளவைகளை தேங்காயெண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீரில் சேனைக்கிழங்கை மஞ்சள் தூள்,மிளகுதூள் சேர்த்து வேகவைக்கவும்.சேனைக்கிழங்கு வெந்ததும் தேவையான  உப்பு சேர்க்கவும்

அரைத்து வைத்த விழுதினை அதனுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

வாணலியில் தேங்காயெண்ணெய் ஊற்றி முதலில் தேங்காய் துருவலை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.பின்னர் அதே எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து  தேங்காய் துருவலோடு ரெடியாக உள்ள எரிசேரியில் சேர்க்கவும்.


Thursday, April 6, 2023

35 பிஸிபேளாபாத் ( Karnataka style)

 தேவையானவை:

பச்சரிசி   1 கப்

துவரம்பருப்பு 3/4 கப்

புளி 1 எலுமிச்சையளவு

வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

முந்திரி பருப்பு 10

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,எண்ணெய் தேவையானது

நெய் 1 டேபிள்ஸ்பூன் 

——————-

பொடி பண்ண:

பொடி 1:

 கடலை-பருப்பு   2 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு   2 டேபிள்ஸ்பூன்

கசகசா 1டேபிள்ஸ்பூன்

மேலே குறிப்பிட்ட  மூன்றையும்  தனித்தனியே எண்ணையில்லாமல் வறுக்கவேண்டும்.

பொடி 2:

கிராம்பு 10

லவங்கப்பட்டை ஒரு அங்குலம்

இரண்டையும் சேர்த்து எண்ணையில்லாமல் வறுக்கவேண்டும்.

பொடி 3:

சீரகம் 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்   1 டீஸ்பூன்

முதலில் சீரகத்தை வாணலியில் போட்டு பொரிக்கவிட்டு பின்னர் வெந்தயத்தை சேர்த்து பொரிக்கவேண்டும்.

பொடி 4:

தனியா 3 டேபிள்ஸ்பூன்

பிரிஞ்சி இலை 1

இரண்டையும் தனித்தனியாக வறுக்கவேண்டும்.

பொடி 5:

கொ-ப்பறை தேங்காய் அல்லது தேங்காய் துருவல்  1 கப்

தனியே வறுக்கவேண்டும்

வற்றல் மிளகாய் 5 எண்ணெயில் வறுக்கவேண்டும்.

—————

செய்முறை:

5 பொடிகளையும் சேர்த்து நைசாக பொடி செய்து கொள்ளவேண்டும்.

அரிசியையும் பருப்பையும் சேர்த்து குக்கரில் 5 கப்  தண்ணீருடன் வைக்கவேண்டும். (5 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காயெண்ணையில் கடுகு தாளித்து அதனுடன் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.

புளியை கரைத்து  சேர்த்து வெல்லம்,மஞ்சள்தூள்,  பெருங்காயதூள், வேகவைத்த  அரிசி பருப்பு கலவை,தேவையான உப்பு,2 1/2 டேபிள்ஸ்பூன் பொடி,தேவையான தண்ணீருடனும்  கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் பிஸிபேளாபாத் அரிசி,பருப்பு,பொடி எல்லாம் சேர்ந்து  நன்கு வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊற்றவேண்டும் 

சுவையான பிஸிபேளாபாத் ரெடி

இதில் எந்தவொரு காயும் சேர்க்கவில்லை.அவரவர் இஷ்டப்படி எந்த காயும்  சேர்க்கலாம்,






Wednesday, April 5, 2023

34.அவியல்

 தேவையானவை:

காய்கறிகள்

பூசணி,வாழைக்காய்,காரட்,பீன்ஸ்.புடலங்காய்,சேனைக்கிழங்கு,உருளைக்கிழங்கு, முருங்கை,பட்டாணிஒவ்வொன்றிலும் ஒரு கை-பிடி எடுத்து  (முருங்கை 1) பொடியாக நறுக்கிகொள்ளவும்..

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

தேங்காயெண்ணெய் 1/4 கப்

தயிர் 3/4 கப்

கறிவேப்பிலை 1 கொத்து

உப்பு தேவையானது

—————-

அரைக்க:

தேங்காய் துருவல் 1 கப்

சீரகம் 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய்  3

———-

செய்முறை:

அரைக்ககொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில்  தேங்காயெண்ணெய் ஊற்றி நறுக்கிய காய்கறிகளை  மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விடவேண்டாம்.சிறிது தண்ணீர் தெளித்தால் போதும்.

காய்கறிகள் வெந்தவுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்த விழுதையும் தயிரையும் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.

இறக்கிய பின்  அவியலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு அதன்மேல் ஒரு மேசைக்கரண்டி தேங்காயெண்ணையை ஊற்றவும்.


Sunday, April 2, 2023

33.ஓலன்

 



தேவையானவை:

பூசணி கீற்று 2

காராமணி 1 கப்

பச்சைமிளகாய் 4

தேங்காய் பால் 1 கப்

தேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை:



பூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

காராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

பச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.

------

அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,

பச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.

பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

கடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

------

ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

சப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும். 

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...