தேவையானவை:
காய்கறிகள்
பூசணி,வாழைக்காய்,காரட்,பீன்ஸ்.புடலங்காய்,சேனைக்கிழங்கு,உருளைக்கிழங்கு, முருங்கை,பட்டாணிஒவ்வொன்றிலும் ஒரு கை-பிடி எடுத்து (முருங்கை 1) பொடியாக நறுக்கிகொள்ளவும்..
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தேங்காயெண்ணெய் 1/4 கப்
தயிர் 3/4 கப்
கறிவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவையானது
—————-
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 3
———-
செய்முறை:
அரைக்ககொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் தேங்காயெண்ணெய் ஊற்றி நறுக்கிய காய்கறிகளை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விடவேண்டாம்.சிறிது தண்ணீர் தெளித்தால் போதும்.
காய்கறிகள் வெந்தவுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்த விழுதையும் தயிரையும் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
இறக்கிய பின் அவியலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு அதன்மேல் ஒரு மேசைக்கரண்டி தேங்காயெண்ணையை ஊற்றவும்.
No comments:
Post a Comment