Do not look behind, look always in front,at what you want to do - and you are sure of progressing - Annai Mira
Showing posts with label சூப் வகைகள். Show all posts
Showing posts with label சூப் வகைகள். Show all posts
Monday, May 13, 2013
முருங்கை சூப்
தேவையானவை:
துவரம்பருப்பு 1/2 கப்
முருங்கைக்காய் 2
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
கொத்தமல்லி 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
கார்ன் மாவு 1 மேசைக்கரண்டி
------
பொடி செய்ய:
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
------
செய்முறை:
முருங்கைக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் துவரம்பருப்பு,மஞ்சள்தூள்,வெட்டிய முருங்கைக்காய்,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் 3 கப் தண்ணீருடன் சேர்த்து
4 விசில் வரும்வரை வைக்கவேண்டும்.
பாத்திரத்திலிருந்து முருங்கைக்காயை எடுத்துவிட்டு மற்றவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டவேண்டும்.
அரைத்ததை ஒரு கடாயில் வைத்து அதனுடன் முருங்கைக்காயின் சதை பாகத்தை உப்புடன் சேர்த்து சிறிது கொதிக்கவைக்கவேண்டும்.
பொடி செய்ய கொடுத்த மிளகு சீரகம் இரண்டையும் வறுத்து இதனுடன் சேர்க்கவேண்டும்.
சூப் தண்ணியாக இருந்தால் கார்ன் மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கலாம்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிய.வேண்டும்.
Saturday, August 25, 2012
தக்காளி சூப்
தேவையானவை:
பழுத்த தக்காளி 6
கேரட் 2
முட்டைகோஸ் 1/2 கப் துருவியது
பெரிய வெங்காயம் 1
பூண்டு 2 பல்
கார்ன் மாவு 1/4 கப்
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
துருவிய சீஸ் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
பிரிஞ்சி இலை 1
கிராம்பு 2
------
செய்முறை:
தக்காளி,வெங்காயம்,கேரட்,பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் பிரிஞ்சி இலை,கிராம்பு தாளித்து அதனுடன் நறுக்கிய தக்காளி,கேரட்,முட்டைகோஸ்,வெங்காயம்,பூண்டு
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.கார்ன் மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து அதனுடன் கலந்து கொதிக்கவைடவும்.
மேலும் இரண்டு கப் தண்ணீருடன் தேவையான உப்பும் சேர்த்து கொதிக்கவிட்டு ஆறவிடவும்.
ஆறியதும் மிக்சியில் அரைத்து வடிகட்டினால்...சுவையான தக்காளி சூ[ப் ரெடி.
பரிமாறும் சமயம் அதன் மேலாக மிளகு தூள், வெண்ணெய்,,துருவிய சீஸ்,கொத்தமல்லித்தழை தூவி கொடுக்கலாம்.
Tuesday, June 19, 2012
உளுத்தங்கஞ்சி
தேவையானவை:
உடைத்த உளுந்து 1 கப்
அரிசிக்குருணை 1 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
பூண்டு 4 பல்
தேங்காய் பால் 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
உடைத்த உளுந்து,அரிசிக்குருணை,வெந்தயம் மூன்றையும் தனித்தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் மூழ்குமளவுக்கு வைத்து ஊறவைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த மூன்றையும் சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீருடன் குக்கரில் வைத்து மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேவையான எண்ணெய் வைத்து சீரகம் மிளகு,பூண்டு,கறிவேப்பிலை தாளித்து குக்கரில் இருந்து எடுத்த உளுந்து அரிசி குருணை
கலவையை உப்புடன் சேர்த்து (தேவையானால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்) கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவேண்டும்.
உளுத்தங்கஞ்சி உடல் களைப்பை போக்கும்.
Saturday, May 19, 2012
வாழைத்தண்டு சூப்
தேவையானவை:
வாழைத்தண்டு 1 துண்டு
வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
பூண்டு 5 பல்
கார்ன் flour 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
உப்பு.எண்ணெய் தேவையானது
------
Corn flakes cereal 1/4 cup
----
செய்முறை:
வாழைத்தண்டை நார் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
-------
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் சீரகத்தை பொரிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பூண்டு மூன்றையும் சேர்த்து வதக்கவும்.
வாழைத்தண்டு துண்டுகளை இரண்டு கப் தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்டு நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கார்ன் மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட சூப்க்கான பதத்திற்கு வரும்.
மிளகு தூளை தூவி இறக்கவேண்டும்.
------
சூப் bowl ல் சூப்பை ஊற்றி அதன் மேல் cereal ஐ தூவி சாப்பிடலாம்.
Wednesday, May 16, 2012
டயட் கஞ்சி
தேவையானவை:
கேழ்வரகு மாவு 1 கப்
சோயாபீன்ஸ் மாவு 1/2 கப்
உடைத்தகடலை மாவு 1/2 கப்
பார்லி மாவு 1/4 கப்
------
பால் 1 கப்
-----
செய்முறை:
ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொண்டு ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து
ஒரு டப்பாவில் போட்டுவைத்துக்கொள்ளலாம். இது பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
கஞ்சி தயாரிக்கும் போது ஒருகப் தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி மாவை சேர்த்து நன்கு கட்டிதட்டாமல் கரைத்து அடுப்பில் வைத்து
நன்கு கிளறி கஞ்சி பதம் வந்ததும் இறக்கவேண்டும்.
பின்னர் காய்ச்சிய பாலை அதில் கலந்து குடிக்கலாம்.
குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
Thursday, April 26, 2012
அகத்திக்கீரை சூப்
தேவையானவை:
அகத்திக்கீரை
அகத்திக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோள மாவு 1 மேசைக்கரண்டி
தக்காளி 2
பால் 1/4 கப்
வெண்ணெய் 1மேசைக்கரண்டி
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
அகத்திக்கீரையை பொடியாக நறுக்கி நன்றாக அலசி microwave "H" ல் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
ஆறினவுடன் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் தண்ணீருடன் மிக்சியில் அடித்து வைக்கவேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை உருக்கி சோளமாவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
இத்துடன் தக்காளி சாறு,கீரை விழுது சிறிது தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் அடுப்பை 'slim' ல் வைத்து பால் சேர்த்து மிளகு தூள் தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.
அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்விக்கும்.
Thursday, March 3, 2011
முருங்கைக்காய் சூப்
தேவையானவை:
முருங்கைக்காய் 3
பயத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் 1
தக்காளி 2
பூண்டு 2 பல்
இஞ்சி 1 துண்டு
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பால் 1/2 கப்
சர்க்கரை 1 டீஸ்பூன்
செய்முறை:
முருங்கைக்காயை வேகவைத்து உள்ளிருக்கும் விதைகளை தனியே எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
இதனுடன் பயத்தம்பருப்பு,இஞ்சி,பூண்டு சேர்த்து குக்கரில் ஒரு கப் தண்ணீருடன் வேகவைக்கவேண்டும்.
மிளகு,சீரகம் இரண்டையும் வறுத்து பொடி பண்ணிக் கொள்ளவேண்டும்.
முருங்கைக்காய் விதைகள்,குக்கரில் வைத்த பயத்தம்பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீருடன் மிக்சியில்
அரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
தேவையான உப்பும்,சிறிது சர்க்கரையையும் சேர்க்கவேண்டும்.
சூப்பை அருந்துவதற்கு முன்பு மிளகு சீரகப் பொடி சேர்க்கவேண்டும்.
Sunday, January 23, 2011
வெஜிடபிள் சிலி
வெஜிடபிள் சிலி என்பது ஒரு வகையான Stew ஆகும்.காய்கறிகளும் தானியங்களும் சேர்ந்த கலவை.
இதனை சூப் என்றும் கூறலாம்.ஆனால் சூப்பைவிட கொஞ்சம் திக்காக இருக்கும்.இதனை சாதத்தோடு சேர்ந்து சாப்பிட ஒரு வேளை உணவாகும்.
.டின்னருக்கு bread ஐ toast பண்ணி இத்துடன் சாப்பிடலாம்.
தேவையானவை:
ராஜ்மா (white) 1/4 கப்
ராஜ்மா (black) 1/4 கப்
கொண்டக்கடலை 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 2
கொடமிளகாய் (green) 1
கொடமிளகாய் (red) 1
கார்ன் 1/4 கப்
பட்டாணி 1/2 கப்
வெஜிடபிள் ஸ்டாக் 1 கப்
தண்ணீர் 1 கப்
உப்பு,எண்ணைய் தேவையானது
----
தனியா தூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி தூள் 1 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி 1/2 டீஸ்பூன்
----
பூண்டு 4 பல்
கொத்தமல்லி தழை சிறிதளவு
cream 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ராஜ்மா இரண்டு வகைகளையும்,கொண்டக்கடலையையும் ஒருமணிநேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து எடுக்கவும்.(மூன்று விசில்).
வெங்காயம்,குடமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து வதக்கிக்கொள்ளவும்.
பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
-----
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணைய் சிறிது விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதில் குக்கரிலிருந்து எடுத்த ராஜ்மா,கொண்டக்கடலையை சேர்க்கவும்.
இருவகை கொடமிளகாயையும்,கார்ன், பட்டாணி,பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்க்கவும்.
இத்துடன் வெஜிடபிள் ஸ்டாக் ஒரு கப்,தண்ணீர் ஒரு கப் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் தக்காளி பேஸ்டுடன் தனியா தூள்,சீரக்த்தூள்,காஷ்மீரி சில்லி தூள்,ஆம்சூர் பொடி சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
அதிக தண்ணீர் விடவேண்டாம்.
கடைசியில் கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
சாப்பிடும் முன்பு fresh cream ஐ மேலே போட்டு சாப்பிடவும்.
Wednesday, September 1, 2010
ஆப்பிள் சூப்

தேவையானவை:
ஆப்பிள் 1
தக்காளி 2
பால் 1 கப்
மைதாமாவு 1 டீஸ்பூன்
மிளகுதூள் 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவையானது
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஆப்பிளைத் துருவி பாலில் வேகவைக்கவும்.
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்துக் கொள்ளவும்.
வேகவைத்த ஆப்பிளையும்,தக்காளியையும் மிக்சியில் அடிக்கவும்.
மைதாமாவை லேசாக வறுத்து ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கவைக்கவும்.
அதனுடன் ஆப்பிள்,தக்காளி விழுதை சேர்க்கவும்.நன்றாக கிளறவும்.
பின்னர் உப்பு,சீரகத்தூள்,மிளகு தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
இறக்கிய பின் வெண்ணையை மேலே போடவும்.
Wednesday, December 9, 2009
பசலைக்கீரை சூப்
தேவையானவை:
பசலைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
பால் 1 கப்
மைதாமாவு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
cream 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: சூப்
பொடியாக நறுக்கிய பசலைகீரையை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைக்கவேண்டும்.
கீரை நன்றாக வெந்ததும் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.
வாணலியில் வெண்ணைய் வைத்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
வதக்கவேண்டும்.பின்னர் மைதாமாவை தூவி low flameல் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
அரைத்துவைத்துள்ள பசலை விழுது,பால்,சிறிது உப்பு,மிளகு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் cream சேர்க்கவேண்டும்.
பசலைக்கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
பால் 1 கப்
மைதாமாவு 1 டேபிள்ஸ்பூன்
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
cream 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை: சூப்
பொடியாக நறுக்கிய பசலைகீரையை ஒரு கப் தண்ணீரில் கொதிக்கவைக்கவேண்டும்.
கீரை நன்றாக வெந்ததும் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.
வாணலியில் வெண்ணைய் வைத்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை
வதக்கவேண்டும்.பின்னர் மைதாமாவை தூவி low flameல் ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
அரைத்துவைத்துள்ள பசலை விழுது,பால்,சிறிது உப்பு,மிளகு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
கடைசியில் cream சேர்க்கவேண்டும்.
Monday, November 30, 2009
காரட் சூப்
தேவையானவை:
காரட் 4
வெங்காயம் 1
பூண்டு 3 பல்
வெஜிடபிள் ஸ்டாக் 2 கப் **
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
சோளமாவு 1 டீஸ்பூன்
தேங்காய் பால் 1/2 கப்
உப்பு தேவையானது
செய்முறை:
காரட், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட வாணலியை எடுத்துக்கொண்டு அதில் வெண்ணைய் விட்டு நறுக்கிய காரட்,வெங்காயம்
இரண்டையும் வதக்கவும்.
பின்னர் நறுக்கிய பூண்டு,இஞ்சி,சீரகத்தூள்,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும்..
வெஜிடபிள் ஸ்டாக் 2 கப்பை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
சூப் நீர்த்து இருந்தால் சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையில்
சேர்த்து கொதிக்கவிடவும்.
கடைசியில் தேங்காய் பால் சேர்க்கவும்.
வெஜிடபிள் ஸ்டாக்:
வெங்காயம் 1
தக்காளி 2
முட்டைக்கோஸ் (நறுக்கியது 1 கப்)
உருளைக்கிழங்கு 1
பூண்டு 4 பல்
பிரிஞ்சி இலை 1
மிளகு 1 டீஸ்பூன்
கிராம்பு 2
வெங்காயம்,தக்காளி,உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொண்டு
நான்கு கப் தண்ணீரில் நறுக்கிய முட்டைகோஸுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
அதனுடன் பூண்டு,பிரிஞ்சி இலை,மிளகு,கிராம்பு,சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு
வடிகட்டவும்.வடிகட்டியது இரண்டு கப் இருக்கவேண்டும்.
Subscribe to:
Posts (Atom)
36 எரிசேரி
தேவையானவை: சேனைக்கிழங்கு 1 கப் நறுக்கிய துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...
-
மதுரையில் பிரசித்திபெற்ற குளிர்பானம் தேவையானவை: பால் 4 கப் பாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன் நன்னாரி சிரப் 1 டேபிள்ஸ்பூன் அல்லது ரோஸ் எஸன...
-
கல்கியில் வெளியான "பாரம்பரிய சமையல்" மெகா போட்டியில் எனது "குடலை இட்லி " என்ற சமையல் குறிப்பு தேர்ந்தெடுக்க பட்ட...
-
தேவையானவை: சாதம் 1 கப் கடலைமாவு 1/2 கப் வெங்காயம் 1 இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 2 கொத்தமல்லித்தழை சிறிதளவு கறிவேப்பிலை 1 கொத்து உ...


