Wednesday, August 30, 2017

பனீர் புலவ்

தேவையானவை:

பாசுமதி அரிசி     1 கப்
பனீர் துண்டுகள் 15
வெங்காயம் 1
பட்டாணி   1/2 கப்
உருளைக்கிழங்கு 1
இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
புதினா,கொத்தமல்லித்தழை   சிறிதளவு
நெய்  2 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய்    தேவையானது
-----
தாளிக்க:
பட்டை,லவங்கம்,ஏலக்காய்
--------------------
செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
வெங்காயம், உருளைக்கிழங்கு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பனீர் துண்டுகளை வெந்நீரில்   அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து பொன்னிறமாக  வறுத்து தனியே எடுத்து வைக்கவேண்டும்.
----------
வாணலியில் சிறிது நெய்  வைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து  அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவேண்டும்

பின்னர் அதனுடன் உருளைக்கிழங்கு,பட்டாணி சேர்க்கவேண்டும். இஞ்சி பூண்டு விழுது தேவையான உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லிதழை சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
--------
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த பாசுமதி அரிசியை வடிகட்டி 1 1/2 கப் தண்ணீருடன்  வைத்து அதனுடன் வதக்கிவைத்துள்ள காய்கறி கலவையை சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து புலவை எடுத்து  வறுத்த பனீரை சேர்த்து ஒரு கிளறு கிளறவேண்டும்.

பனீரில் புரத சத்தும்.சுண்ணாம்பு சத்தும் உள்ளது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...