Sunday, March 31, 2013

பயத்தம் உருண்டை




தேவையானவை:
பயத்தம்பருப்பு 2 கப்
பொடித்த சர்க்கரை 2 கப்
முந்திரிபருப்பு 20
நெய் 1 கப்
ஏலப்பொடி 1 மேசைக்கரண்டி
------
செய்முறை:

பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து மாவாக அரைக்கவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த பயத்தமாவு,பொடித்த சர்க்கரை,முந்திரிபருப்பு (உடைத்து நெய்யில் வறுத்தது)ஏலப்பொடி,உருக்கிய நெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவேண்டும்.

Tuesday, March 26, 2013

வேப்பம்பூ ரசம்




தேவையானவை: 
புளி நெல்லிக்காய் அளவு
வேப்பம்பூ 1/2 கப் (காய்ந்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

அரைக்க:
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2

தாளிக்க:

கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து
சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.

வேப்பம்பூ ரசம் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

Tuesday, March 19, 2013

அரைக்கீரை STEW




தேவையானவை:
அரைக்கீரை 1 கட்டு
தேங்காய்பால் 1 கப்
வெங்காயம் 1
உருளைக்கிழங்கு 1
பூண்டு 4 பல்
மிளகு தூள் 1 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
செய்முறை:

அரைக்கீரையை நன்றாக ஆய்ந்துவிட்டு பொடியாக நறுக்கி சிறிது தண்ணீர் தெளித்து microwave bowl ல் வைத்து microwave oven ல்
ஐந்து நிமிடம் வைத்து எடுத்து மீண்டும் சிறிது உப்பு சேர்த்து இரண்டு  நிமிடம் வைத்தால் கீரை நன்றாக வெந்துவிடும்.
இதை தனியாக எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
-------
வாணலியில் எண்ணெய் வைத்து வெங்காயத்தையும் பூண்டையும் நன்றாக வதக்கவும்.
அதனுடன் வேகவைத்த கீரை,மசித்த உருளைக்கிழங்கு,மிளகு தூள் சிறிது தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதித்தவுடன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இறக்கவும்.
------
இட்லி, இடியாப்பம், இவைகளுக்கு ஏற்ற sidedish.

Wednesday, March 13, 2013

வெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )



14.3.2014 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.
----
முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.(  (அல்லது பதப்படுத்திய அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதை நன்றாக வறுத்து உபயோகப்படுத்தலாம்.)

-
வெல்ல அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
தண்ணீர் 2 கப்

செய்முறை:


காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி
இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

உப்பு அடை:
தேவையானவை:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/2 கப்
தேங்காய் துண்டுகள் 1/2 கப்
தண்ணீர் 2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

காராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
தூவிக்கொண்டே கிளறவும்.
மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

Sunday, March 10, 2013

வாழைத்தண்டு பொரியல்



தேவையானவை:
வாழைத்தண்டு 1
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
------
செய்முறை:


வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர்
சேர்த்து வேகவைக்கவும். சிறிது வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.
நன்றாக வெந்ததும் வடிகட்டவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வடிகட்டிய வாழைத்தண்டு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து இதனுடன் சேர்க்கவும்.
சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி.

Sunday, March 3, 2013

காப்ஸிகம்...வெங்காயம்..பொரியல்




தேவையானவை:
பச்சை குடமிளகாய் 1
சிவப்பு குடமிளகாய் 1
மஞ்சள் குடமிளகாய் 1
வெங்காயம் 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
பொட்டுக்கடலை 1 மேசைக்க்கரண்டி
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு.
--------
செய்முறை:


மூன்று  குட மிளகாய்களையும்,வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
ஊறவைத்துள்ள பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து பிரட்டவும்..
பின்னர் நறுக்கி வைத்துள்ள மூன்று குடமிளகாய்களையும் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் எல்லாம் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய்,பொட்டுக்கடலை பொடியை தூவி கிளற சுவையான குடமிளகாய்..வெங்காயம்...பொரியல் ரெடி.

பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...