Sunday, November 30, 2014

பூரி..சாகு

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.

"சாகு" பூரிக்கு உகந்த side dish.

ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.

ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.

"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.



தேவையானவை:

காலிஃப்ளவர் 10 பூக்கள்

உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் 1

பட்டாணி 1/2 கப்

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கார்ன் 1/2 கப்

கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்

vegetable stock 1 கப்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்

பட்டை 1 துண்டு

கிராம்பு 2

சீரகம் 1 டீஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

கசகசா 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கொத்தமல்லித்தழை 1/4 கப்

----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.

இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்

கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.

Monday, November 24, 2014

சாமைப் புளிப்பொங்கல்

தேவையானவை:
சாமை ரவை 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் 4
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-------

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
வேர்க்கடலை 5
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து

--------
செய்முறை:


புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
சாமை ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையுடன் புளித்தண்ணீர் ஒரு கப் தண்ணீர் 1 1/2 கப் சேர்த்து கலந்து வைக்கவும்.( சாமை ரவை 1 கப்,புளித்தண்ணீரும்,தண்ணீரும் சேர்ந்து 2 1/2 கப்)


ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையும் புளித்தண்ணீரும் கலந்த கலவை,
தாளித்த பொருட்கள் எல்லாவற்றையும் தேவையான உப்புடன் கலந்து அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் முடிந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்தேங்காய்
வேண்டுமென்றால் அரை கப் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்..
சுவையான சாமைப் புளிப்பொங்கல் ரெடி.

Monday, November 17, 2014

நெய் சோறு




தேவையானவை:

பச்சரிசி 1 கப்
தேங்காய் பால் 1 கப்
தண்ணீர் 1 கப்
வெங்காயம் 1
நெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 5
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
லவங்கம் 2
ஏலக்காய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
--------
செய்முறை:

அரிசியை நன்றாக களைந்துவிட்டு வடிகட்டி வைக்கவேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து நெய் சேர்த்து வடிகட்டிய அரிசியை நன்றாக பிரட்டவேண்டும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பட்டை,லவங்கம்.ஏலக்காய்,கறிவேப்பிலை நான்கையும் எண்ணையில் வறுக்க வேண்டும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காய்த்தை சேர்த்து வதக்கவேண்டும்.

குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்தை எடுத்து அதில் பிரட்டிய அரிசி,வதக்கிய வெங்காயம்,பட்டை,லவங்கம்,ஏலக்காய்
தேங்காய் பால்,தண்ணீர்,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு விசில் வந்ததும் இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
குக்கரில் இருந்து எடுத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.
பின்னர் வறுத்த முந்திரிபருப்பை சேர்க்கலாம்.

வெஜிடபிள் குருமா வுடன் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் வைத்தால் பாக்கி இல்லாமல் வீட்டிற்கு பாக்ஸ் திரும்பி வரும்.

Friday, November 14, 2014

Amaranth கிச்சடி


                                                Amaranth Seeds
தேவையானவை:  
                               
Amaranth 1 கப்
தினை 1/4 கப்
பயத்தம்பருப்பு 1/4கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பூண்டு 4 பல்
தண்ணீர்  5 கப்
உப்பு.எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:



Amaranth,தினை இரண்டையும்  தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் Amaranth 3-1/2 தண்ணீர்.தினை ஒரு கப் தண்ணீர்,பயத்தம்பருப்பு,மஞ்சள் தூள் சேர்த்து  1/2 கப் தண்ணீர் சேர்த்து தனித்தனியாக வைத்து ( 5 விசில்) எடுக்கவும்.
நான்கைந்து விசில் விட்டும் Amaranth ல் தண்ணீர் இருக்கும்.அதை அப்படியே உபயோகிக்கலாம்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி குக்கரில் இருந்து எடுத்த Amaranth,தினை,பயத்தம்பருப்பு,தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
எல்லாம் ஒன்று  சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.
----------
முளைக்கீரை,தண்டுக்கீரை விதைகள் Amaranth என்று அழைக்கப்படுகிறது.
இதில் புரோட்டீன்,இரும்பு,சுண்ணாம்பு சத்துகள் அதிகமாக உள்ளன.

Sunday, November 9, 2014

வரகரிசி தயிர் சாதம்




தேவையானவை:                          

                                                                                        வரகரிசி
                                                                             


வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 1/2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
சீரகம் 1 தேக்கரண்டி
தயிர் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:




வரகரிசியை ஒரு கப்புக்கு 3 1/2 கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வரகரிசி நன்றாக ஆறியதும் அரைத்த விழுதை அதனுடன் கலக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து மேலும் மீதமுள்ள தயிரை ஊற்றி பிசையவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்

Wednesday, November 5, 2014

பாலக் புலாவ்



தேவையானவை:

பாசுமதி அரிசி 1 கப்
பாலக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 2
Spring onion 1 கட்டு
பச்சை மிளகாய் 2
இஞ்சிபூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
Jalapeno 1
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு 10
--------
தாளிக்க:
பட்டை 1
கிராம்பு 2
ஏலக்காய் 2
சோம்பு 1 தேக்கரண்டி
-------
செய்முறை:


பாசுமதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

கடாயில் வெண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை,spring onion, பச்சை மிளகாய்,Jalapeno,இஞ்சி பூண்டு விழுது,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி ஊறவைத்த அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல் வைக்கவும்.

கடைசியில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து போடவும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...