Thursday, March 23, 2023

19.மாங்காய்,முருங்கை சாம்பார்

 தேவையானவை:

மாங்காய் 1

முருங்கை 2

துவரம்பருப்பு 3/4 கப்

சின்ன வெங்காயம் 10

தக்காளி 1

மஞ்சள்  தூள்  1 டீஸ்பூன்

சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,எண்ணெய் தேவையானது

—————

தாளிக்க:

தேங்காயெண்ணை 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

வெந்தய ம்1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

பச்சைமிளகாய் 2

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

————

செய்முறை:

துவரம்பருப்பை 2 க்ப் தண்ணீரில் குக்கரில் வைத்து வேகவைக்கவு.(4 விசில்)

மாங்காயை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்

முருங்கையை ஒவ்வொன்றும் ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியில் தேங்காயெண்ணையை வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.அதனுடன் சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் மாங்கா துண்டுகள்,முருங்கை துண்டுகள்,சாம்பார் பொடி,தேவையான உப்பு ,சிறிது தண்ணீருடனும் கொதிக்கவிடவும்.

மாங்காய் துண்டுகளும், முருங்கை துண்டுகளும் வெந்தபின் வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது கொதித்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

கடைசியில் கொத்தால்லித்தழையை தூவவும்.

(இந்த சாம்பாருக்கு புளி தேவையில்லை)


Wednesday, March 22, 2023

18 சிறுகீரை மசியல்

 தேவையானவை:

சிறுகீரை 1 கட்டு

வதக்க வேண்டியது:

சீரகம் 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

பூண்டு 2 பல்

புளி சிறிதளவு

வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி 1 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை  சிறிதளவு

——

உப்பு, எண்ணெய் தேவையானது

தாளிக்க:

எண்ணெய். 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1டீஸ்பூன்

சீரகம்1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்  1

————

செய்முறை:

சிறுகீரையை பொடியாக நறுக்கி தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் வதக்க  தேவையான பொருட்களை  சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தண்ணீர் அளவு குறையும் வரை வதக்கவேண்டும்.

வெங்காயம் தக்காளி எல்லாம் வதங்கிய பின்  தேவையான உப்புடன்  நறுக்கிய கீரையை சேர்த்து மத்தால் மசிக்கவும்.

எண்ணையில் கடுகு,சீரகம்,மிளகாய் வற்றல் தாளிக்கவும்.





17.வாழைத்தண்டு கூட்டு

 தேவையானவை:

வாழைத்தண்டு  ஒரு தண்டு

கடலை-  பருப்பு 3 டேபிள்ஸ்பூன்

பயத்த பருப்பு 3 டேபிள்ஸ்பூன்

சின்ன வெங்காயம் 10

தக்காளி 2

மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்

தனியா தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

கொத்தமல்லித்தழை சிறிதளவு

உப்பு,தேங்காயெண்ணை தேவையானது

—————

அரைக்க:

தேங்காய் துருவல் 1/4 கப்

பச்சை மிளகாய் 2

மிளகாய்  வற்றல் 2

சீரகம் 1 ஸ்பூன்

———-

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

சீரக 1 டீஸ்பூன்

இடித்த பூண்டு 2

கறிவேப்பிலை சிறிதளவு

———-

செய்முறை:

வாழைத்தண்டை பட்டையை எடுத்துவிட்டு நாரை நீக்கி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

பயத்தம்பருப்பையும்,கடலைபருப்பையும் குக்கரில் வைத்து வேகவைத்துக்கொள்ளவும்

அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீர் மஞ்சள் தூள்,உப்பு   சேர்த்து  வாழைத்தண்டுடன் வேகவைக்கவேண்டும்..வாழைத்தண்டு நன்றாக வெந்தவுடன் வேகவைத்த இரண்டு பருப்பையும்,அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.இதனை அப்படியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவேண்டும்.

வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,சீரகம் இடித்த பூண்டுகறிவேப்பிலை தாளித்து  சின்ன வெங்காயம்,தக்காளி இரண்டையும் வதக்கி அதனுடன் தனியா தூள்,மிளகாய் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம்,தக்காளி நன்றாக வதங்கியவுடன் வேகவைத்த வாழைத்த்ண்டு,பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

சுவையான வாழைத்தண்டு  கூட்டு ரெடி.



16,பூண்டு குழம்பு

 


தேவையானவை:
பூண்டு 20 பல்
சின்ன வெங்காயம் 10

புளி ஒரு எலுமிச்சை அளவு
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
தனியா தூள் 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 க
வெல்லம் (பொடித்தது)1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
-------
அரைக்க:
தனியா 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
வெந்தய ம்1 டீஸ்பூன்
கடலை- பருப்பு  1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
வெந்தய ம்1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்
வாணலியில் நல்லெண்ணைய் கால் கப் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ளவைகளை தாளித்து பின்னர் பூண்டு,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்,
பெருங்காயத்தூள்,தனியாதூள்.சாம்பார் பொடி மூன்றையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
புளியை கெட்டியாக கரைத்து விடவும்.
ஒரு கொதிவந்ததும் அரைத்த விழுதையும்  சேர்த்து சிறிது தண்ணீருடன் கொதிக்கவிடவும்..
இறக்குவதற்கு முன்பு காரம் அதிகம் என்று நினைப்பவர்கள் வெல்லம் சேர்க்கலாம்.

பூண்டு குழம்பை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
இட்லி,தோசைக்கு சிறந்த side dish.

15.கொத்தவரங்காய் இனிப்பு கூட்டு

 


தேவையானவை
கொத்தவரங்காய் 1/4 கிலோ

துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 10
------

தாளிக்க:
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:


கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். (4 விசில்)
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
---
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு வேகவைக்கவும்.
காய் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியாக வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்.

14.கத்திரிக்காய் பொரித்தகூட்டு

 தேவையானவை:


கத்திரிக்காய்  1/2 கிலோ

பயத்தம்பருப்பு 1/2 கப்

மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு எண்ணெய்  தேவையானது

அரைக்க:

மிளகாய்வற்றல் 4

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் 1 துண்டு

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 5

தேங்காய் துருவல்  1/2 கப்

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு



செய்முறை:

 கத்திரிக்காயை  சிறு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

 பயத்தம்பருப்பை மஞ்சள் தூள்  சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைக்கவும்.


அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கிய கத்திரி துண்டுகளை சிறிது எண்ணெயில் வதக்கவும். அதனுடன்
 குக்கரில் இருந்து எடுத்த பயத்தம்பருப்பை தேவையான உப்புடன்
சேர்த்து கொதிக்கவிடவும்.பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

கத்திரிக்காய் கூட்டை சாதத்தோடு சேர்த்து சாப்பிடலாம்.பூரி,சப்பாத்திக்கும் ஏற்றது.

Tuesday, March 21, 2023

13.பீர்க்கங்காய் கூட்டு

 



தேவையானவை:
பீர்க்கங்காய் 1
 காராமணி 1/2 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
-------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
------
செய்முறை:
பீர்க்கங்காயை  தோலுரித்து  சிறு துண்டுகளாக நறுக்கவும்.
அடுப்பில்  வாணலியை வைத்து   காராமணியை நன்றாக வறுத்து மஞ்சள் தூளுடன் சேர்த்து வேகவைக்கவேண்டும் காராமணி வெந்ததும் பீர்க்கங்காயை தேவையான  உப்புடன் சேர்த்து வேகவைக்கவேண்டும்.
(பீர்க்கங்காய் சீக்கிரம் வெந்துவிடும்)

தேங்காய் துருவல்.சீரகம்,மிளகு,பச்சைமிளகாய் ,இஞ்சி இவற்றை விழுது போல அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து
இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அடுப்பிலிருந்து இறக்கவேண்டும்.

19.மாங்காய்,முருங்கை சாம்பார்

 தேவையானவை: மாங்காய் 1 முருங்கை 2 துவரம்பருப்பு 3/4 கப் சின்ன வெங்காயம் 10 தக்காளி 1 மஞ்சள்  தூள்  1 டீஸ்பூன் சாம்பார் பொடி 2 டேபிள்ஸ்பூன் க...