Thursday, March 30, 2023

. 31. நார்த்தங்காய் குழம்பு

 தேவையானவை:

நார்த்தங்காய். 1

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

புளி எலுமிச்சையளவு

உப்பு,எண்ணெய் தேவையானது

———-

பொடி பண்ண:

பச்சரிசி 1 டீஸ்பூன்

வெந்தயம் 1 டீஸ்பூன்

துவரம்பருப்பு 2 டீஸ்பூன்

கடலைபருப்பு 1 டீஸ்பூன்

தனியா 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 4

உப்பு,எண்ணெய் தேவையானது

————

தாளிக்க:

நல்லெண்ணைய் 3 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை சிறிதளவு

———

செய்முறை:

நார்த்தங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளில் பச்சரிசையு வெந்தயத்தையும் தனியே எண்ணெயில்லாமல் வறுத்துக்கொள்ளவும். மற்றவற்றை சிறிது எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும்.இரண்டையும் சேர்த்து பொடி செய்துகொள்ளவும்.

வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து நார்த்தங்காய் துண்டுகளை மஞ்சள் தூளோடு சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கிய பின் புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.அதனுடன் அரைத்த பொடி சேர்த்து கொடிக்கவிடவும்.

நார்த்தங்காய்  வெந்தவுடன் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.



No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...