Sunday, March 19, 2023

1. எண்ணைய் கத்திரிக்காய் குழம்பு




தேவையானவை:

சின்ன கத்திரிக்காய் 12             
பெரிய வெங்காய்ம்  2     
புளி எலுமிச்சைஅளவு
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்   1/4 கப்
சாம்பார் பொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது                                      
-------
வறுத்து அரைக்க தேவையானது:

வற்றல் மிளகாய்  4
தனியா  1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் 1/2 கப்
வேர்க்கடலை 10
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2  டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு
--------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-------
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
சின்ன கத்திரிக்காயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்    
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.     

வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவைகளில் மிளகாய் வற்றல்,தனியா இரண்டையும் எண்ணெயில்லாமல் வறுக்கவும. மற்றவற்றை 
எண்ணெயில் வறுக்கவும்.
எல்லாவற்றையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அரைத்த விழுதை குறுக்கே வெட்டிய ஒவ்வொரு கத்திரிக்காயின் உள்ளும் அடைத்து மேலே கொஞ்சம் எண்ணெய் தடவவும்.

அப்படியே வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து வதக்கலாம்.
இல்லாவிடில் Oven ஐ Preheat செய்து விட்டு 25 நிமிடம் வைக்கவும்.(400 deg.-F)(இந்த முறையில் செய்தால் கத்திரிக்காய் மொறு மொறு என்று இருக்கும்.) இதனை தனியே எடுத்து வைக்கவும்.
              
                           
அடுப்பில் நல்லெண்ணய்  வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து  நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மீதியுள்ள அரைத்த விழுதை கரைத்து
உப்பு சேர்த்து  புளிதண்ணீர்,.மஞ்சள்தூள்,சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்ததும் வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...