Monday, March 20, 2023

6. முள்ளங்கி சாம்பார்

 தேவையானவை:

முள்ளங்கி  6

துவரம்பருப்பு   3/4 கப்

புளி எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி   1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

கொத்தமல்லித்தழை சிறிதளவு

----------------------------

அரைக்க:

தனியா 1 டீஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் 2

கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்

மிளகு 1/2 டீஸ்பூன்

சீரகம் 1/2 டீஸ்பூன்

தேங்காய் துருவல் 1/4 கப்

பெருங்காயம் 1 துண்டு

கொத்தமல்லித்தழை சிறிதளவு

--------------------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

------------------

செய்முறை

 முள்ளங்கியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு வட்ட வட்டமாக  வெட்டிக்கொள்ளவும்.

துவரம்பருப்பை  இரண்டு கப் தண்ணீருடன்  குக்கரில் வைத்து வேகவைக்கவும்.( 4 விசில்)

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

அரைக்கக்கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து .கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய  முள்ளங்கி  துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து  வதக்கவும்.

 முள்ளங்கி  வெந்தவுடன் புளித்தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான உப்பு,சாம்பார் பொடி,  அரைத்த விழுது பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

புளி பச்சை வாசனை போனபின் வேகவைத்த பருப்பை சேர்த்து சிறிது கொதிக்கவைத்து அடுப்பை அணைக்கவும்.

கடைசியில் கொத்தமல்லித்தழை தூவவும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...