Friday, March 31, 2023

32.மிளகூட்டல்

 தேவையானவை:

துவரம் பருப்பு. 1/2 கப்

காய்கறிகள் 2 கப் (காரத்,வெள்ளபூசணி,மஞ்சள் பூசணி,வாழைக்காய்,உருளைக்கிழங்கு,சேனை,பட்டாணி, முருங்கை)

எல்லா காய்கறிகளிலும் சிறிது எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

மஞ்சள் தூள் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணெய் தேவையானது

—————-

அரைக்க:

மிளகாய் வ்ற்றல் 2

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய் துருவல் 1/2 கப்

சீரகம் 1 டீஸ்பூன்

———

தாளிக்க:

தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

இளகாய் வற்றல் 1

கறிவேப்பிலை சிறிதளவு

————-

செய்முறை:

துவரம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வைத்து எடுக்கவும். (4 விசில்)

ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு கப் தண்ணீரில் எல்லா காய்கறிகளையும்  மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.

காய்கறிகள் எல்லாம்வெந்த்தும் தேவையான உப்பு  சேர்த்து வேகவைத்த பருப்பு,அரைத்து விழுது, பெருங்காயத்தூள், சிறிது  தண்ணீர் சேர்த்து  நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் தேங்காயெண்ணையில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.


No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...