Monday, December 2, 2013

முந்திரிக் கொத்து



தேவையானவை:
பயத்தம்பருப்பு 1 கப்
துருவிய தேங்காய் 1 கப்
ஏலக்காய் 5
பொடித்த வெல்லம் 1 கப்
                                                          வெல்லப்பாகில் உருட்டியது

-----
அரிசி மாவு 2 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
எண்ணெய் பொரிக்க தேவையானது
-----
செய்முறை:                               முந்திரிக் கொத்து


பயத்தம்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவேண்டும்.
ஏலக்காயை தோலுடன் வறுத்து தோலை எடுக்கவேண்டும்.
தேங்காய் துருவலையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
மூன்றையும் மிக்சியில் பொடி செய்துகொள்ளவேண்டும்.
-------
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து வெல்லம் நன்றாகக் கரைந்து சிறிது கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி உடனே சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும்.
------
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,மஞ்சள்தூள்,உப்பு (ஒரு சிட்டிகை) சேர்த்து தண்ணீர் விட்டு பிசைய வேண்டும் கரைத்த மாவு .பஜ்ஜி மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
-----
வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருட்டி வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

9 comments:

ஸாதிகா said...

இதுதான் முந்திரி கொத்தா?பெயரைப்பார்த்தும் முந்திரி பருப்பு சேர்த்த பதார்த்தம் என்று நினைத்தேன்:)

திண்டுக்கல் தனபாலன் said...

முந்திரிக் கொத்து வீட்டில் வேறுமாதிரி செய்தார்கள்...

உங்கள் செய்முறை படி செய்து பார்ப்போம் அம்மா... நன்றி...

Kanchana Radhakrishnan said...

// ஸாதிகா said...
இதுதான் முந்திரி கொத்தா?பெயரைப்பார்த்தும் முந்திரி பருப்பு சேர்த்த பதார்த்தம் என்று நினைத்தேன்:)//

இதன் பெயர் ' முந்திரிக் கொத்து ' என்று சொல்வார்கள்.மற்றபடி பெயர் காரணம் தெரியவில்லை.வருகைக்கு நன்றி ஸாதிகா.

ராஜி said...

புது நொறுக்ஸா இருக்கு. செய்து சாப்பிட்டு பார்க்க வேண்டியது தான்

கோமதி அரசு said...

இரண்டு மூன்றாய் சேர்த்து போடுவார்கள் இதை அதனால் முந்திரி கொத்து என்று பெயர். பார்க்க முந்திரி கொட்டை போல இருக்கும் ஸாதிகா. எங்கள் ஊர் பக்கம் (திருநெல்வேலியில்) எல்லோரும் தீபாவளிக்கு செய்வார்கள்.
செய்முறைக்கு நன்றி காஞ்சனா.

Kanchana Radhakrishnan said...



@ ராஜி
வருகைக்கு நன்றி ராஜி.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு

தகவலுக்கும் வருகைக்கும் நன்றி கோமதி அரசு.

ADHI VENKAT said...

நானும் முந்திரியை சர்க்கரை பாகில் போட்டு எடுப்பார்களே.... அது என்று நினைத்தேன்..

சிறப்பான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

அபு முஜாஹித் said...

This is famous in our place(Kottar, Nagercoil)

-Mohamed Faize

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...