Sunday, July 15, 2012

தினை தோசை




தேவையானவை:
தினை 1 கப்
brown rice 1 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
                      தினை    



தினை,brown rice  இரண்டையும் தனித்தனியாகவும் உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு இரண்டையும் ஒன்றாகவும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.தோசைமாவு பதத்திற்கு அரைத்து தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த மாவை ஐந்து மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்..
இதில் அதிக அளவு புரோட்டின் சத்து உள்ளது.


இதற்கு பொருத்தமான் சட்னி வேர்க்கடலை சட்னி.

தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:
தேவையானவையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் தாளிக்க வேண்டும்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா மொரு மொருன்னு இருக்கும் போலே... பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (த.ம. 2)

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Radha rani said...

படமே சொல்லுதே முறுகலான தோசைன்னு..:)

virunthu unna vaanga said...

wow.. looks so crispy..
VIRUNTHU UNNA VAANGA

VijiParthiban said...

தோசையை பார்த்தால் அப்படியே அந்த தட்டு கிடைக்குமா என்கிறது என்னுடைய மனது. நல்ல சத்துள்ள தோசை அருமையான பதிவு....

Kanchana Radhakrishnan said...

// ராதா ராணி said...
படமே சொல்லுதே முறுகலான தோசைன்னு..:)//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராதா ராணி

Kanchana Radhakrishnan said...

//Vijayalakshmi Dharmaraj said...
wow.. looks so crispy..//

Thanks Vijayalakshmi Dharmaraj.

Kanchana Radhakrishnan said...

//VijiParthiban said...
தோசையை பார்த்தால் அப்படியே அந்த தட்டு கிடைக்குமா என்கிறது என்னுடைய மனது. நல்ல சத்துள்ள தோசை அருமையான பதிவு...//.

வருகைக்கு நன்றி VijiParthiban

ராமலக்ஷ்மி said...

சத்தான தோசை. கடலை சட்டினி சுவை கூட்டும்.

Kanchana Radhakrishnan said...

Thanks ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...