Monday, October 19, 2009

டோக்ளா (குஜராத்)


தேவையானவை:

புழுங்கலரிசி 1கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
----
தயிர் 3 கப்
பச்சைமிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
சமையல் சோடா 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு ,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:

1.அரிசி,உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து நிழலில் காயவைக்கவும்.
ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும்.

2.உடைத்த ரவையுடன் தயிர்,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நான்கு மணிநேரம் கழித்து சமையல் சோடாவை சிறிது எண்ணையில் கலந்து சேர்க்கவும்.
3.பச்சைமிளகாய்,இஞ்சி இரண்டையும் நைசாக அரைத்து சேர்க்கவும்.

4.ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து அதில் ஒரு தட்டில் சிறிது எண்ணைய் தடவி மாவை ஊற்றி
மூடவும்.15 நிமிடம் கழித்து எடுத்து வில்லைகள் போட்டு அரிந்த கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
(இட்லி குக்கரிலும் வைக்கலாம்.)

5.இதற்கு சரியான side dish புதினா அல்லது தக்காளி சட்னி.

(சற்று காரம் வேண்டுபவர்கள் மிளகுத்தூளை சிறிது மேலே தூவிக்கொள்ளலாம்.)

4 comments:

Jaleela Kamal said...

குஜராத்தி டோக்ளா வித்தியாசமா செய்து இருக்கீங்க, எங்கு பார்த்தாலும் டோக்ளா எனக்கும் ஆசை வந்து விட்டது, நானும் என் ஸ்டைலில் செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Jaleela

நானானி said...

நான் கடலை மாவில் செய்வேன். இது வித்தியாசமாயிருக்கிறது. முயல வேண்டும்.

Kanchana Radhakrishnan said...

// நானானி said...
நான் கடலை மாவில் செய்வேன். இது வித்தியாசமாயிருக்கிறது. முயல வேண்டும்.//


சாதாரணமாக டோக்ளா கடலை மாவில்தான் செய்வது..ஆனால் குஜராத்தில் இப்படி செய்வார்கள்.வருகைக்கு நன்றி நானானி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...