Wednesday, October 28, 2009

முட்டைகோஸ் கறி


தேவையானவை:

முட்டைக்கோஸ் 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

அரைக்க:

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.
ஒருபாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து மஞ்சள்தூள்,முட்டைக்கோஸ் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
பாதி வெந்ததும் உப்பு போடவும்.
நன்றாக வெந்ததும் வடிகட்டவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வடிகட்டிய முட்டைக்கோஸை
வதக்கவும். அரைத்து வைத்துள்ளதை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.

Microwave ல் செய்வதென்றால்

Microwave பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு மஞ்சள் தூள்,முட்டைகோஸ் சேர்த்து 5 நிமிடம் "High" ல் வைக்கவேண்டும்,
மீண்டும் எடுத்து ஒரு கிளறு கிளறி உப்பு சேர்த்து 5 நிமிடம் "High" ல் வைக்கவேண்டும்.
இதில் தண்ணீர் அதிகம் வைக்கவேண்டாம்.தெளித்தாலே போதும்.
வடிகட்டி மேற்கூறியவாறு செய்யவேண்டும்.

4 comments:

Jaleela Kamal said...

முட்டை கோஸ் கேன்சர் வியாதி காரர்களுக்கு, பெண்களுக்கு எல்லாம் ரொம்ப நல்லது, உங்கள் குறிப்பும் அருமை, என்னை தவிர யாரும் இந்த கறீ சாப்பிடுவதில்லை ஆகையால், சாண்ட்விச், சமோசா, நூடுல்ஸ் , முட்டை ரொட்டி இப்படி இதில் சேர்த்து விடுவேன்

Jaleela Kamal said...

அரைத்து விட்டு கறி குறீப்பு அருமை.

Menaga Sathia said...

நன்றாகயிருக்கு...

Kanchana Radhakrishnan said...

Thanks Jaleela

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...