Sunday, April 5, 2009

வெஜ் ஆம்லெட்



தேவையானவை:

கடலைமாவு 1 கப்
அரிசிமாவு 1/2 கப்
--
வெங்காயம் 2
காரட் 1
பீன்ஸ் 10
குடைமிளகாய் 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி தழை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம்,பீன்ஸ்,குடைமிளகாய்,இஞ்சி,பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
காரட்டை துருவிக்கொள்ளவும்.
கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடியாக நுறுக்கிக்கொள்ளவும்.
-
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசி மாவு உப்பு மூன்றையும் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நறுக்கிய காய்கறிகள்,துருவிய காரட்,கொத்தமல்லித்தழை மூன்றையும் மாவில் கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு, கல் சூடானதும் நடுவில் மாவை ஆம்லெட் size க்கு ஊற்றவும்.
இருபக்கமும் திருப்பிப்போட்டு எடுக்கவும்.

2 comments:

ராஜ நடராஜன் said...

வெஜ் ஆம்லெட் கொடுத்துட்டு தொட்டுக்க ஒண்ணும் சொல்லவேயில்லை:)கொத்துமல்லி சட்னி,தக்காளி சட்னி,மற்றும் வெங்காயம் தயிர் கொத்துமல்லி கலந்த ரைத்தா.

Kanchana Radhakrishnan said...

எது விருப்பமோ அதை சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...