Thursday, September 4, 2008

Herbal Soup

தேவையானவை:

துளசி,புதினா,கொத்தமல்லித்தழை,வெற்றிலை,கறிவேப்பிலை,கற்பூரவல்லி எல்லாம் கொஞ்சம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம் 1
பூண்டு 2 பல்
மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
எலுமிச்சம்பழச்சாறு 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது
நெய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
நெய்யை வாணலியில் காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு இரண்டையும் வதக்கவும்.
பிறகு எல்லா இலைகளையும் அப்படியே போட்டு வதக்கவேண்டும்(அல்லது மையாக அரைத்தும் போட்டும் வதக்கலாம்).
மூன்று கப் தண்ணீர் சேர்த்து மிளகுத்தூள்,உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் எலுமிச்சம்பழ சாறு விடவேண்டும்.

No comments:

32.மிளகூட்டல்

 தேவையானவை: துவரம் பருப்பு. 1/2 கப் காய்கறிகள் 2 கப் (காரத்,வெள்ளபூசணி,மஞ்சள் பூசணி,வாழைக்காய்,உருளைக்கிழங்கு,சேனை,பட்டாணி, முருங்கை) எல்லா ...